நவம்பர், 2008 க்கான தொகுப்பு

மறதி இனி இல்லை

வர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு  தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது வர்த்தக நோக்கம் நிறைவேற பெருமளவு கைகொடுக்கும். இதனால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சரியான நபர்களை அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வம், வர்த்தக துறையினருக்கு உண்டு. இதில் என்ன பிரச்சனை என்றால் முக்கியமான நபர் ஒருவரை  நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தி ருப்பார்கள்.  அவர்களோடு அறிமுகம் செய்து கொண்டு பேசியும் இருப்பார்கள்
சில மாதங்கள் கழித்து மற்றொரு நிகழ்ச்சியில் சந்தித்து [...]

தொடர்ந்து படிக்கவும் »

பாப்பாவுக்கு ஒரு டொமைன்

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத்தியம் இருக்கிறது.  அப்போது உலகில் ஒரே பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க முடிவது அபூர்வமாக போகலாம்.  ஒவ்வொருவ ரும் தனித்துவமான ஒரு பெயரை கொண்டிருக்கலாம். 
இன்று வரை உலகில் பெயர் என்பது பொதுவான ஒரு விஷய மாகவே இருக்கிறது. நம்மூரில் ராமசாமி, குப்புசாமி போல பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் ஸ்மித் மற்றும் ராபர்ட்களை  எங்கும் பார்க்கலாம். 
அது மட்டுமல்லாமல் பெயர் [...]

தொடர்ந்து படிக்கவும் »

தோளின் பின்னே தேவதை

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாயும். எப்படி இருந்தாலும் பேசும் நேரத்தில் சரியா, தவறா என்பது தெரியவில்லை. பேசி முடித்த பின்னர் விளைவுகள் பற்றி ஆராயும் போது தான் இதெல்லாம் புலனாகிறது

இது போன்ற நேரங்களில் மனசாட்சியின் குரல் நம்மை எச்சரிக்கும் அல்லது வழிகாட்டும்.
ஆனால் மனசாட்சியின் குரலை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அல்லது அந்த குரலை நம்முடைய தடுமாற்றமாக கருதி விடுகிறோம். [...]

தொடர்ந்து படிக்கவும் »

மாம்பூவே…

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போகும் விஷயத்தை பொறுத்தவரை “இதயம்’ படத்தில் வரும் ஏப்ரல், மேயிலே… பாடலை இலக்கியத் தரம் மிக்கதாக வைத்துக் கொள்ளலாம். தான் சார்ந்த சமூகத்தின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைக்கும் தன்மை சிறந்த கவிதைகளுக்கு/பாடல்களுக்கு இருப்பதாக கருதப் படுகிறது. அந்த இலக்கணத்தின்படி பார்த்தால் இந்த பாடல் நமது சமூகத்தின், அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்தை சுட்டிக் காட்டுகிறது
 
ஏப்ரல், மேயிலே பசுமையே [...]

தொடர்ந்து படிக்கவும் »

படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இப்படி தான் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.  அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கை யையே மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஜான்வுட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவரே கூட  சற்றும் எதிர்பாராத விதமாக  இந்த மாற்றம் நிகழ்ந்தது.  மிகவும்  இளம் வயதிலேயே உயர் பதவிக்கு வந்து ஜான் வுட் [...]

தொடர்ந்து படிக்கவும் »

நல்லதுக்கு நான் அடிமை

அமெரிக்க இளம் பெண்ணான டெப்பி டென்சர் எல்லோரையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறார். உங்களையும் கூட  அவர் அடிமையாக்க நினைக்கிறார். இப்படி அடிமையாகிறவர்களை குறிக்க அழகான புதிய சொல் ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.

.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற் கென்றே ஒரு இணைய தளத்தை அமைத்திருக்கிறார். அந்த தளத்தில்  நுழைந்தீர்கள் என்றால் நீங்களும் அடிமையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
 அடிமை என்றதுமே பொதுவாக உருவாகக் கூடிய சித்திரத்தை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டிய  அவசியமில்லை.  அன்புக்கு நான் அடிமை என்று சொல்வது போல, “டெப்பி’ [...]

தொடர்ந்து படிக்கவும் »

வன்முறைக்கு இடமில்லை

உலகில் வன்முறையே இருக்கக்கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடரஅனுமதிக்கக்கூடாது என்ற உறுதி உங்களிடம் உள்ளதா?
இவற்றுக்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது.  ஐ.நா. அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்துக்கு சென்று  அங்கு வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் புத்தகத்தில் உங்களது கையெழுத்தை இடம்பெற செய்ய வேண்டும்.
அப்படி செய்தீர்கள் என்றால், [...]

தொடர்ந்து படிக்கவும் »

தீவிரவாத வலை

ஊர் அறிந்த ரகசியம் தான் அது. இல்லை உலகறிந்த ரகசியம் தான். ஆனால் அதில் இப்போது, எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.  பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இது பற்றி எச்சரிக்கை செய்யும் வகையில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இன்டெர்நெட் மூலம் தீவிரவாத இயக்கங்கள் வலை வீசி தங்களுக்கான  ஆதரவாளர்களை அதாவது, பலிகடாக்களை தேர்வு செய்யும் முயற்சி தான் இப்படி அந்த இதழால் குறிப்பிடப்படுகிறது.

.

பயங்கரவாத நடவடிக்கைகளில் முன்னிலையில் இருக்கும் அல்கொய்தா இன்டெர்நெட்டை பயன்படுத்திக் கொள்வதிலும் முன்வரிசையில் [...]

தொடர்ந்து படிக்கவும் »

வாசிக்காமல் வாசிப்பதற்கு…

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட்டுவிடுங்கள். புத்தகங்களின் பக்கம் போகாமல் இருப்பது குறித்து கவலையில்லாமல் இருப்பவர்களையும் மறந்து விடுங்கள். புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர்களை பற்றி மட்டும் இப்போது கவலைப்படுவோம்
அதிலும் குறிப்பாக மேசை நிறைய பத்திரிகைகளை அடுக்கி வைத்து கொண்டு அதில் படிக்க வேண்டியவற்றை குறித்து வைத்து கொண்டு கூடவே அலமாரி நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள்  பற்றி கொஞ்சம் நினைத்து பார்ப்போம். பெரும்பாலும்  இவர்கள், குறித்து வைத்த பத்திரிகை கட்டுரைகளையும், விரும்பி வாங்கிய புத்தகங்களையும் படிக்காமலேயே [...]

தொடர்ந்து படிக்கவும் »

குடும்பத்தை இணைக்கும் நெட்

 
பிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது.
சதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை பரிமாறிக் கொள்ள [...]

தொடர்ந்து படிக்கவும் »