டிசம்பர், 2008 க்கான தொகுப்பு

தோழருக்காக தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும், மனித நேயமும் இணைந்த அபூர்வ மனிதர் என்று, தொழில்நுட்ப உலகம் அவரை புகழ்ந்தது. அதைவிட நேசித்தது.
.
ஆய்வுதான் அவரது உயிர்மூச்சாக இருந்தது. டேட்டாபேஸ் என்று சொல்லப் படும் தகவல்கள் திரட்டை கையாளுவது தொடர்பான ஆய்வில் ஜேம்ஸ் கிரே மன்ன ராக இருந்தார். அதோடு பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் அவருடைய நிபுணத்துவமும் அபரிமிதமானதுதான்.
இந்த இரு துறைகளிலும் அவர் நடத்திய ஆய்வின் [...]

தொடர்ந்து படிக்கவும் »

எஸ்.எம்.எஸ். வழி நாவல்

பின்லாந்தை நோக்கியா நாடு என்றும் சொல்லலாம். செல்போன் தேசம் என்றும் சொல்லலாம். இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கும். செல்போன் மற்றும் செல்போன் சார்ந்த சேவைகளை பயன்படுத் துவதில் இந்த ஸ்கான்டிநேவிய தேசம் முன்னிலையில் இருக்கிறது.
.
செல்போன் பயன்பாட்டையும், எஸ்எம்எஸ்சையும், ஆரம்பத்திலேயே கச்சிதமாக பிடித்து கொண்ட தேசங் களில் பின்லாந்தும் ஒன்று. பேசுவது போலவே, எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொள்வது பின்லாந்து வாசிகளுக்கு சர்வசகஜமாகியிருக்கிறது.
இதன் அடையாளமாக தற்போது பின்லாந்தில் எஸ்எம்எஸ் மூலமே எழுதப்பட்ட நாவல் வெளியாகியிருக்கிறது. [...]

தொடர்ந்து படிக்கவும் »

இது ஒய் 2 கே நாவல்

உலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி யில் ஒன்றுமில்லாமல் போனது! அதன் பிறகு உலகம் அதனை மறந்தும் போனது!
.
‘ஒய் 2 கே’வை நினைவில் இருக்கி றதா? புத்தாயிரமாவது நெருங்கி கொண்டிருந்த நிலையில், ‘எல்லாமே தவறாகப் போகிறது. என்னவெல் லாமோ விபரீதங்கள் நிகழப்போகிறது’ என்றெல்லாம் பீதியடையச் செய்தது.
ஒய் 2 கே என்னும் பூதம். கம்ப்யூட்டர் களுக்கு உலகம் பழகி, அவை வாழ்க்கையில் நீக்கமற [...]

தொடர்ந்து படிக்கவும் »

வாழைப்பழம் காட்டிய வழி

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதளத்தை சொல்லலாம்.
.
வாழைப்பழம்தான் அந்த இணைய தளத்தின் அடையாளம். அதன் பெயரில் இருப்பதும் வாழைப்பழம் தான். அதன் வெற்றிக்கு காரணம் அதுதான்.
‘வாழைப்பழ பெயர்’ (banana name.com) அதுதான் தளத்தின் முகவரி. அரிசி மீது பெயர் எழுதி தருவதாக சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதுபோலவே இந்த தளத்தில் வாழைப்பழத்தின் மீது பெயர் எழுதித் தருவதாக சொல்கிறது. இணையதளங்கள் மற்றும் [...]

தொடர்ந்து படிக்கவும் »

செல்போன் உறவுகள்-2

‘லூப்ட்’ சேவையை செல்போனில் பயன்படுத்தும்போது, ஒருவருடைய நண்பர்கள் இருக்கும் இடத்தை நகர வரைபடத்தின் நடுவே சுட்டிக்காட்டி அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வைக்கும். நண்பர்களின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடிவதே பெரிய விஷயம் தான்! ஆனால் லூப்ட் இதோடு நின்று விடுவதில்லை. இதன் பிறகுதான் லூப்ட்டின் சேவைகள் ஆரம்பமாகிறது.
.
‘லூப்ட்’ போலவே மற்றவர்களின் இருப்பிடத்தை உணரும் சேவையை வழங்கும். ‘விர்ல்’ (whrrl) பட்டிபீக்கன் பட்டிபீக்கன் (buddybeacon) போன்றவற்றில் இருந்து லூப்ட்டை வேறுபடுத்தி உயர்த்துவதும் இந்த விஷயங்கள் [...]

தொடர்ந்து படிக்கவும் »

செல்போன் உறவுகள்-1

செல்போனை கையில் எடுத்தவுடன் உங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அதைப் பார்த்தே தெரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இதை தான் “லூப்ட் (loopt) செய்கிறது. இருபத்தியோராம் நூற்றாண்டின் அற்புதம் என்றும் லூப்டை வர்ணிக்கலாம் எனும் அளவுக்கு இந்த சேவை செல்போன் திரையில் நகரவரைப்படத்தின் நடுவே நண்பர்களின் இருப்பிடத்தை சுட்டிக்காட்டி விடுகிறது.
.
இருப்பிடத்தை சுட்டிக்காட்டும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த அற்புதத்தை லூப்ட் செய்து காட்டுகிறது. இந்த அற்புதத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதனை பிறகு பார்க்கலாம்.
முதலில் [...]

தொடர்ந்து படிக்கவும் »

யூடியூப் நிபுணர்-2

யூடியூப்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சமர்பித்த பிரச்சார வீடியோ காட்சிகளை விமர்சிப்பதன் மூலம் புது யுகத்தின் அரசியல் நிபுணரான ஜேம்ஸ் கோட்டகி செல்வாக்கு பெற்ற கதையை தொடர்ந்து பார்ப்போம்…
.
அதிபர் தேர்தல் வாக்காளர்கள், யூடியூப்பில் வீடியோ கோப்புகளை இடம்பெற வைத்து பிரச்சாரம் செய்வதை புதுமையாக கருதி யிருக்கலாம். அவர்கள் அதனை பெருமையாகவும் நினைத் திருக்கலாம். பலரது பாராட்டிற்கு ஆளாகி இருக்கலாம்.
ஆனால் கேம்ஸ் வாலிபரான கோட்டகிக்கு இவற்றை பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. சில [...]

தொடர்ந்து படிக்கவும் »

யூடியூப் நிபுணர்-1

தேர்தல் நேரத்தில், வாக்காளர்கள் தங்களை பற்றி என்ன நினைக் கின்றனர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேட்பாளர்களுக்கு இருப்பது இயற்கையானதுதான்! ஆனால், ஒரு தனிப்பட்ட வாக்காளர் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என வேட்பாளர்கள் அதிலும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்றால் வியப்பானது தானே!
.
அதே போல் தேர்தல் நேரம் என்றால் கொஞ்சம் இறங்கி வந்து, வாக்காளர்களின் வீடு தேடி வருவதும் கூட இயல்பானதுதான். ஆனால் வேட்பாளர்கள் தனிப்பட்ட ஒருவரின் அறையை தேடி வந்து [...]

தொடர்ந்து படிக்கவும் »

இப்படியும் ஒரு தேடியந்திரம்-2

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இடத்தில் தரும அடி போடுவது போல இன்டெர்நெட் உலகில் தவறுசெய்ததாக கருதப்படுபவர் மீது எல்லோரும் பாயும் நிகழ்வாகவே இது அமைகிறது.
.
சீன பூகம்பத்திற்கு பிறகு மட்டும் 5 பேர் இப்படி மனித மாமிச தேடியந்திர தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சிலர் பூகம்பத்தால் பள்ளிக் கட்டிடம் இடிந்து தரை மட்டமாகி இருந்தால் பள்ளிக்கு விடுமுறை கிடைத்திருக்குமே [...]

தொடர்ந்து படிக்கவும் »

இப்படியும் ஒரு தேடியந்திரம்-1

எத்தனையோ வகை தேடியந்திரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்! மனித மாமிச தேடியந்திரம் பற்றி அறிவீர்களா?
.
பெயரே விசித்திரமாகவும், வில்லங் கமாகவும் இருப்பதாக தோன்றுகிறதா? உண்மையில் இது விவகாரமான தேடியந்திரம்தான்! இதனை கண்டு அஞ்சி நடுங்காத சீனர்களே கிடையாது என்றும் சொல்லலாம்.
பல அப்பாவி சீனர்கள் யோசிக்காமல் செய்த தவறுக்காக இந்த தேடியந்திரத்திடம் தலை வணங்கி இருக்கின்றனர். இன்னும் சிலர் கண்ணீர் விட்டு குறையாக மன்னிப்பு கேட்டு மண்டி யிட்டிருக்கின்றனர். வேறு சிலரோ ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆக கொஞ்சம் பயங்கரமான தேடியந்திரம்தான்! [...]

தொடர்ந்து படிக்கவும் »