ஜனவரி, 2009 க்கான தொகுப்பு

ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி

வீட்டுக்கொரு வானொலி வசதியை ஏற்படுத்தித்தருவதுதான் கேம்ப் காஸ்டரின் நோக்கம் என்று சொன்னால் ஏதோ இலவச திட்டம் போல தோன்றும். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி வசதியை வழங்குவது இந்த அமைப்பின் நோக்கம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
.
உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வானொலி அல்ல. அப்படியொரு சுலபதன்மையை வானொலியை நடத்துவதில் கொண்டு வருவது இந்த அமைப்பின் குறிக்கோளாக இருக்கிறது.
வானொலி என்று இங்கே குறிப்பிடப்படும் போது நிகழ்ச்சிகளை கேட்கும் வானொலி கருவியாக புரிந்து [...]

தொடர்ந்து படிக்கவும் »

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.
வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம்.
.
வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் [...]

தொடர்ந்து படிக்கவும் »

இப்படித்தான் இருக்கணும் ஆஸ்கர்

நீங்கள் அமைக்க வேண்டிய இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும் அல்லவா? ஸ்வீடனைச் சேர்ந்த கம்ப்யூட்டர் கில்லாடிகள் சிலருக்கு இந்த துணிச்சல் வந்திருக்கிறது.
.
அவர்கள் ஆஸ்கர் அமைப்பை நோக்கி இப்படி கூறியிருப்பதோடு அல்லாமல் ஆஸ்கர் விருதுகளுக்கான இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காண்பிப்பதற்காக முழு வீச்சிலான இணையதளத்தையும் அமைத்திருக்கின்றனர்.
ஆஸ்கர் டோரன்ஸ் டாட் காம் அந்த தளத்தின் முகவரி. ஆஸ்கர் விருது களை வழங்கும் திரைப்பட அமைப் பின் சார்பில் ஆஸ்கர் விருதுகளுக் [...]

தொடர்ந்து படிக்கவும் »

நட்பு வளர்க்கும் இணையதளம்

பீர் வாங்கித் தருவதற்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
இன்டெர்நெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய எத்தனையோ இணையதளங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.
பீர் வாங்கித் தருவதற்காக இணைய தளத்தை ஏற்படுத்துவது அவசியமா என்று கேட்கலாம். அவசியமா, இல்லையா என்பதை விட இந்த தளம் நமக்கு தேவைப்படக் கூடிய எளிய சேவையை அழகாக வழங்குகிறது என்பதே விஷயம்.
பீர் வாங்கித் தரும் இணையதளம் என்று பார்ப்பதை விட, பீருக்கு நிகராக நமது கலாச்சாரத்தில் எந்த [...]

தொடர்ந்து படிக்கவும் »

வருகிறது 3டி இன்டெர்நெட்

ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை
இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது.
ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் [...]

தொடர்ந்து படிக்கவும் »

வீட்டுக்கு ஒரு இமெயில்

வருங்காலத்து தேர்தல் அறிக்கையில் இலவச இமெயில் வழங்கப்படும் எனும் வாக்குறுதி இடம் பெறலாம். அதோடு இந்த வாக்குறுதி வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெறலாம். இதற்கான முதல் முயற்சியை தைவானின் தலைநகரம் மேற் கொண்டு இருக்கிறது.
நிர்வாக விஷயங்களுக்கு இன்டெர் நெட்டை பயன்படுத்தலாம் என்றும், இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான வகையில் சேவையாற்ற முடியும் என்றும் கருதப்பட்டு வருகிறது.
மின் நிர்வாகம் எனும் பொது தலைப்பின் கீழ் இதற்கான யோச னைகள் முன்வைக்கப்படுகின்றன. பல நாடுகள் மற்றும் நகரங்கள் [...]

தொடர்ந்து படிக்கவும் »

இல்லாத(இன்டெர்நெட்) இசைக்குழு

இன்டெர்நெட்டில் தகவல்களை தேடிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் ஆச்சர்யமான அனுபவங்க ளில் வித்தியாசமான பெயர் கொண்ட இசைக் குழுக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
.
குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்து விட்டு தேடல் முடிவுகளின் பட்டியலை பார்த்தால், அந்த பெயரில் (அ) வேறு ஒரு வார்த்தையுடன் சேர்ந்து இசைக்குழு ஒன்று இருப்பது தெரியவரும். சில நேரங்களில் கண் ணில்படும் இசைக்குழுவின் பெயர் அத்தனை கவித்துவமாக வியக்க வைக்கும் வகையில் இருக்கும். இன்னும் சில நேரங்களிலோ இசைக் குழுவின் பெயர்கள் திகைக்க வைக் [...]

தொடர்ந்து படிக்கவும் »

ஊர் சுற்றுவோம்! உழைப்போம்!

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம். வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா செல்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அங்கே ஓய்வு கிடைக்கும் போது, ஒரு சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
டாக்டராகதான் இருக்க வேண்டும் என்றில்லை. எந்த துறையில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் உங்களுக்கென ஒரு நிபுணத்துவமும், தனி அனுபவமும் இருக்கத்தானே செய்யும்.
.
வெளியூர் சுற்றுலா செல்லும்“ போது, நடுவே அந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பு தேடி வரும் சாத்தியம் உண்டுதானே! அதனை பயன்படுத்திக்கொண்டால் நல்லதுதானே. [...]

தொடர்ந்து படிக்கவும் »

சுயநல நெட்

உலகில் சுயநலமே மேலோங்கியிருப்பதாக உங்களில் பலர் கருதலாம். உலகில் எப்படியோ, இன்டெர்நெட் உலகைப் பொறுத்தவரை இணையவாசிகள் எல்லாம் சுயநலமிக்கவர்களாக மாறிவருகின்றனர்.
.
இன்டெர்நெட் நிபுணரான ஜேக்கப் நீல்சன் இந்தகருத்தைதான் உறுதிபட தெரிவித்திருக்கிறார். இன்டெர் நெட்டைப்பொறுத்தவரை நீல்சன் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால், அது சரியாகத்தான் இருக்கும்.
காரணம், மனிதன் ஆழமான ஆய்வு மேற்கொள்ளாமல் மேலோட்டமாக எல்லாம் எந்த கருத்தையும் கூறுவதில்லை. அதோடு, இன்டெர்நெட் பயன்பாடு சார்ந்த விஷயத்தில் அவர் ஒரு மன்னராகவே இருந்து வருகிறார்.
இன்டெர்நெட் பயன்பாடு என்பது எத்தனை நுட்பமானது என்பதை [...]

தொடர்ந்து படிக்கவும் »

எளிது எளிது, கற்பது எளிது!

உலகம் நல்லாசிரியர்களால் நிரம்பி இருக்கிறது. ஏன் நீங்களே கூட ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். அல்லது நீங்கள் ஒரு நல்லாசிரியரை தேடிக் கொண்டிருக்கலாம்.
நீங்கள் நல்லாசிரியராக இருக் கும் பட்சத்தில் உங்களுக்கான மாணாக்கர்களை தேடிக் கொண்டி ருக்கலாம். இந்த இரண் டையுமே எளிமையாக்கித் தரும் பணியை தான் டீச்ஸ்டிரீட் டாட் காம் செய்கிறது.
.
நல்லாசிரியர்களையும் நல் மாணாக்கர்களையும் சேர்த்து வைப்பதற்காக என்றே உரு வாக்கப்பட்டது தான் இந்த தளம். நல்லாசிரியர் என்றதும் சிறந்த கல்வி பணிக்கான அரசு விருதை பெற்ற [...]

தொடர்ந்து படிக்கவும் »