April, 2009 க்கான தொகுப்பு

ஐபோனில் தமிழ் அறிவோம்.

மன்னிக்கவும் இது ஐபோன் மூலம் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் செயலியை பற்றியதல்ல.அப்படி ஒரு சேவை உருவாக்கபடலாம் என்னும் கருத்தை வலியுறுத்துவதற்காக தான்.
ஆப்பிளின் ஐபோன் பிரபலமாக இருப்பதோடு அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் செயலிகள் அதை விட பிரபலமாக இருக்கின்றன.ஐப்போனுக்கான‌ செய‌லிக‌ள் உள்ள‌ங்கையிலெயே எத்த‌னையோ வித‌மான‌ சேவைக‌ளை கொண்டுவ‌ந்து விடுகின்ற‌ன‌.
இப்ப‌டி ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
இந்த‌ வ‌ரிசையில் சமீப‌த்தில் சேர்ந்திருப்ப‌து ஐபோனுக்கான‌ வார்த்தை விளையாட்டு.இணைய‌ அக‌ராதி சேவையான‌ டிக்ஷ‌ன‌ரி டாட் காம் உத‌வியோடு ஐபோனில் விளையாட‌க்கூடிய‌ வார்த்தை விளையாட்டாக‌ [...]

தொடர்ந்து படிக்கவும் »

தெரியாமலேயே ந‌ட்பு;உதவும் இணையதளம்

இண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாமா?
இதற்காக என்றே புதியதொரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
ஒமேக்லே என்னும் அந்த தளம் புதிய நண்பர்களை தேடித்தருவதாக உறுதி அளிக்கிறது.
நண்பர்களை தேடிக்கொள்ள‌த்தான் ஃபேஸ்புக் உள்ளிட்ட எத்தனையோ வலைப்பின்னல் தள‌ங்கள் இருக்கின்றனவே.அப்ப‌டியிருக்க இந்த தளத்தில் என்ன புதுமை என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான்.
ஆனால் இந்த தளம் நண்பர்களை தேடிதருவதில் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதே விஷயம்.
ஃபேஸ்புக் போன்ற தளங்கள் உங்களுடைய பழைய நண்பர்களை [...]

தொடர்ந்து படிக்கவும் »

மோர்சுக்கு மரியாதை செய்த கூகுல்

கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல் என்ற வார்த்தையை காண முடிந்திருக்காது.அதற்கு பதிலாக புள்ளிகளின் சிதற‌லையே பார்த்திருக்க முடியும்.
இது எதோ தொழில்நுட்ப கோளாறு என பலரும் நினைத்திருக்கலாம். ஒரு சிலர் தங்கள் உலாவியில் பிரச்சனை என்றுகூட நினைத்திருக்கலாம்.
ஆனால் இது கோளாறும் இல்லை தற்செயலாக நடந்தது இல்லை. கூகுல் தனக்கே உரிய பாணியில் லோகோவில் திடமிட்டு செய்த மாற்றம் தான் இது.
கூகுலின் வரலாற்றை அறிந்தவர்கள் முக்கிய தினங்களின் போது [...]

தொடர்ந்து படிக்கவும் »

வீடியோ கேமிற்காக விழுந்த அடி

கொஞ்சம் கவலை த‌ரும் செய்தி இது. அமெரிக்காவில் தந்தை ஒருவர் வீடியோ கேமிற்காக தனது மகனை போட்டு அடித்திருக்கிறார்.
இக்காலத்து சிறூவர்கள் போல வீடியோ கேமே கதி என கிடந்ததால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்றே நினைக்கத்தோன்றும்.ஆனால் விடியோ கேமை ஒழுங்காக விளையாடவில்லை என் தந்தை அவனை அடித்திருக்கிறார்.
தந்தையின் பெயர் டெரி டவுல்பி. அவரது மகனுக்கு ஆறு வயதாகிறது. சமீப‌த்தில் வீடியோ கேமில் திறமையை வெளிப்படுத்த‌வில்லை என்று மகனை அவர் அடித்து உதைத்திருக்கிறார்.
இதற்காக கைது செய்யப்பட்டு [...]

தொடர்ந்து படிக்கவும் »

ஜியோசிட்டிஸ்;முடிவுக்கு வந்த இணைய யுகம்

ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோசிட்டிஸ் சேவையை இந்த ஆண்டோடு நிறுத்திக்கொள்ளப் போவதாக அதன் உரிமையாளரான யாஹு அறிவித்துள்ளது.
இப்போதைய இணையவாசிகளுக்கு ஜியோசிட்டிஸ் என்ற பெயரே கூட அந்நியமாகத் தோன்றலாம். ஆனால் இன்டெர்நெட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஜியோசிட்டிஸ் நிறுத்தப்படுகிறது என்பதை கேட்டவுடன் நிச்சயம் வருத்தமும் வேதனையும் ஏற்படும்.
ஒரு விதத்தில் பார்த்தால் ஜியோசிட்டிஸ் காலாவதியான சேவைதான். வெப் 2.0 என்று சொல்லப்படும் இரண்டாம் அலை இணைய தளங்களின் [...]

தொடர்ந்து படிக்கவும் »

கூகுலில் தெரியும் வெப்கேம் காட்சிக‌ள்

இருந்த இடத்திலிருந்தே உலகம் சுற்றிப்பார்க்க ஆசையாக இருக்கிறதா,அத‌ற்கு சுலபமான வழி இருக்கிறது. வெப்கேம்ஸ் ட்ராவல் என்று ஒரு தளம் இருக்கிறது. இந்த தள‌த்திற்கு சென்றீர்கள் என்றால் உலகம் முழுவதும் உள்ள வெப்கேமிரா காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
கிட்டத்தட்ட 9 ஆயரத்துக்கும் மேற்பட்ட வேப்கேமிராக்கள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு நாடுகளின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளவை. எல்லாமே சுற்றுலா இடங்களில் பொருத்தப்பட்டவை.
உங்க்ளுக்கு எந்த நாடு ,எந்த இடம் பிடித்திருக்கிறதோ அங்கு கிளிக் செய்து வெப்கேம் [...]

தொடர்ந்து படிக்கவும் »

கூகுலில் தெரிந்த ஆங்கில எழுத்துக்கள்

கூகுல் எர்த் வரைபட சேவை மூலம் பூமியின் மேல்பகுதியில் ஆஸ்திரேலிய வடிவமைப்பாளர் ஆங்கில எழுத்துக்களை கண்டுபிடித்துள்ளார்.
கூகுல் எர்த் துணை கொண்டு பூமி மீது தெரியும் காட்சிகளை சுலபமாக பார்க்க முடியும் . இந்த சேவை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ட்ட்ஷ்வுட் என்னும் வடிவமைப்பாளர் இந்த சேவை வழியே பூமி மீது ஆங்கில எழுத்துக்களை தேடிக்கொண்டிருந்தார்.அதாவது செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் பார்க்கும் போது ஆங்கில எழுத்துக்களை போன்ற தோற்றம் கொண்ட கட்டிடங்களை தேடி வந்தார்.
இந்த முயற்சியின் [...]

தொடர்ந்து படிக்கவும் »

டிவிட்டர் அறுவை சிகிச்சை

நீதிமன்ற அறையிலிருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. திரைப்பட ஷýட்டிங்களிலிருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விட ஆச்சர்யப்படும் வகையில் ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து டிவிட்டர் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி போர்டு மருத்துவமனை அறுவை சிகிச்சையை நேரடியாக டிவிட்டர் செய்த முதல் மருத்துவமனை என்னும் பெருமையை பெற்றிருக்கிறது.
டிவிட்டருக்கு எத்தனையோ பெருமைகள். அதைவிட அதிகமான பலன்கள். இவற்றில் அறுவை சிகிச்சை குறிப்புகளை பதிவு செய்வதும் சேர்ந்திருக்கிறது.
உயிர் காப்பதற்கான அறுவை சிகிச்சையை டிவிட்டர் செய்தது எப்படி என்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் ஏற்படும்.
நேரடி [...]

தொடர்ந்து படிக்கவும் »

டிவிட்டரை எனக்கு புரியவில்லை.

டிவிட்டர் புகழ் எங்கோ போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒபரா உள்ளிட்ட பிரபலங்கள் டிவிட்ட‌ருக்கு வருகை தந்து கொன்டிருக்கும் போது புகழ்பெற்ற பாடகி ஒருவர் டிவிட்டரை தன்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
பாட‌கியின் பெயர் பியான்சி நோவல்ஸ்.விரைவில் அவர் இசைபயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை முன்னிட்டு அவர் அளித்துள்ள பேட்டியில் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை குறித்து பதிலளித்துள்ளார்.
அப்போது ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்ட போது ,இல்லை பொனில் பேசுவதையே விரும்புகிறேன் என்று [...]

தொடர்ந்து படிக்கவும் »

உலகை உலுக்கிய கடைசி உரை!

அமெரிக்க பேராசிரியர் ராண்டி பாஷின் கதை மிகவும் மோசமானது. இருப்பினும் ராண்டி பாஷை பற்றி தெரிந்து கொண்டால் துயரமோ, பரிதாபமோ ஏற்படாது. அதற்கு பதிலாக புதிய உத்வேகமும், உள்ளத்தில் உறுதியுமே ஏற்படும். காரணம் பாஷ் தனது முடிவின் மூலம் மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மகத்துவத்தை கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
ஒரு விதத்தில் அவர் தனது மரணத்தின் மூலம் மரணத்தை வென்று சாகாவரம் பெற்றிருக்கிறார்.
அவருடைய வாழ்க்கை எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்து விட்டாலும் கூட அந்த வேதனையையும், வலியையும் சக மனிதர்களுக்கான [...]

தொடர்ந்து படிக்கவும் »