மே, 2009 க்கான தொகுப்பு

இன்டெர்நெட் டைலர்.

பொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும்.
ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்ப‌ப‌டி தேர்வு செய்ய‌லாம். ம‌ற்ற‌ப‌டி வ‌டிவ‌மைப்பில் புதுமைக‌ள் அதிக‌ம் சாத்திய‌மில்லை.
இந்த‌ நிலையை மாற்ற‌ வ‌ந்திருக்கிற‌து ஒரு இணைய‌த‌ள‌ம். ஷ‌ர்ட்ஸ்மைவே [...]

தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்நெஞ்சத்திற்கு நன்றி

சகப்பதிவரான தமிழ்நெஞ்சம் ஒரு பின்னூட்டத்தில் வாக்குகளுக்கு பதில் வாக்களிப்பதில்லை என்றும் நாகரீகம் கருதிகூட தனது தளத்தின் பக்கம் வந்து பின்னூட்டம் இடுவதில்லை என குறைகூறியிருந்தார். நணபரின் பதிவில் இருந்த வேகம் அவரது உணர்வுகளை தெளிவாக புலப்படுத்துகிறது.
முதலில் தமிழ்நெஞ்சத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் என தரப்பு விளக்கத்தையும் அளிக்க கடமைபட்டுள்ளேன்.
வாக்களிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரிதான். ஆனால் எனக்கு வாக்களித்தாலேயே ஒருவருக்கு பதில் வாக்கு அளிப்பது முறையாக இருக்காது என்றே பதில் வாக்களிப்பதை தவிர்த்து [...]

தொடர்ந்து படிக்கவும் »

எச்சரிக்கை களஞ்சியம் பாரீர்.

காலத்தினால் செய்த உதவியைபோலவே காலத்தினால் செய்யப்படும் எச்சரிக்கையும் மிகப்பெரியது தான்.அலர்ட்பீடீயா தளம் இதனை தான் செய்ய நினைக்கிறது.
இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து விட்டீர்கள் என்றால் அதன்பிறகு தேவையான எந்த தவலையும் நீங்கள் தவறவிட மாட்டீர்கள். அது மட்டும் அல்ல உரிய நேரத்தில் உரிய விஷயம் குறித்து உங்களை எச்சரிக்கை செய்யவும் இந்த தளம் தவறாது.
அதனால் தான் இந்த தளம் தன்னை எச்ச‌ரிக்கை களஞ்சியம் என்று அழைத்துக்கொள்கிறது.
நோய் தொட‌ர்பான‌ த‌க‌வ‌லில் இருந்து , புய‌ல் சூறாவ‌ளி, [...]

தொடர்ந்து படிக்கவும் »

டிவிட்டரில் மல்லிகா

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவையான டிவிட்டரை ஹாலிவுட் பிரபலங்கள் பெரிய அளவில் ப‌யன்படுத்தி வருகின்றனர்.தற்போது பாலிவுட் நடிகையான மல்லிகாவும் இதில் சேர்ந்திருக்கிறார்.
ஹாலிவுட் நட்சத்திஅரங்களை பார்த்துதான் டிவிட்டரை பயன்படுத்தும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாம்.
மல்லிகா தறபோது ஹாலிவுட்டில் இருக்கிறார். ஜெனிபர் லைன்ச் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பின் போது ஏற்படும் தனிமை உணர்வை டிவிட்டர் போக்குவதாக மல்லிகா கூறியுள்ளார்.டிவிட்ட‌ர் செய்வ‌த‌ற்காக‌ த‌னியே ப‌யிற்சியும் எடுத்துக்கொண்ட‌தாக‌ ம‌ல்லிகா [...]

தொடர்ந்து படிக்கவும் »

3 வயது சிறுமியின் ஆன்லைன் ஷாப்பிங்

அறியாமல் செய்த ஷாப்பிங் என்று தான் அதனை சொல்ல வேண்டும்.
நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த 3 வயது சிறுமி இண்டெர்நெட் மூலம் மண் அள்ளும் இயந்திரத்தை வாங்கியிருக்கிறார். 3 வயது சிறுமியால் எப்ப‌டி இண்டெர்நெட்டை பயன்படுத்தி தனக்கு தேவையானதை ஆர்டர் செய்ய முடிந்த்து என்னும் சந்தேகம் ஏற்படலாம்.
எல்லாம் ஒரே ஒரு கிளிக்கால் வந்த விணை தான்.
க‌ம்ப்யூட்ட‌ர் இருக்கும் வீடுக‌ளில் குழ‌ந்தைக‌ளுக்கு கீபோர்டை க‌ண்டுவிட்டால் ஒரே கொண்டாட்ட‌ம் ஏற்ப‌ட்டுவிடும் அல்லவா.கீபோர்டை த‌ட்டுவ‌திலும் ம‌வுசை ந‌க‌ர்த்துவ‌திலும் ம‌ழ‌லைக‌ளுக்கு அப்ப‌டியொரு ஆன‌ந்த‌ம்.
சில‌ நேர‌ங்க‌ளில் [...]

தொடர்ந்து படிக்கவும் »

சமையல் குறிப்பு தேடியந்திரம்

சமையல் ராணியாகவே இருப்பவர்கள் கூட இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு விடை காண முடியாமல் தவிப்பதுண்டு.இல்லத்தலைவிகளை பொருத்தவரை இந்த குழப்பமும் தடுமாற்றமும் அடிக்கடி ஏற்படுவது தான்.
எப்போதும் சமைப்பதையே தினமும் சமைப்பது எப்படி என்னும் அலுப்பு காரணமாகவும் இந்த தடுமாற்றம் ஏற்படலாம். புதிதாக சமைக்க முடிந்தால் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் அல்ல சமைப்பவருக்கும் சந்தோஷமாகவே இருக்கும்.
இப்படி இல்லத்தலைவிகளை வாட்டும் கேள்வியான இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு சுலமபமாக பதிலளிக்க உருவாகி இருப்பது தான் சூப்ப்ர்குக் [...]

தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் முன்னோடி எம்.பி

கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சஷி தரூரை நாட்டின் முன்னோடி எம்.பி என்று சொல்லலாம்.
படித்தவர் ,பண்பாளர், முன்னாள் ஐ நா அதிகாரி என்ற முறையில் நன்கு அறிமுகமானவர் என்பதையெல்லாம் மீறி முதல் முறை எம் பியான அவரை முன்னோடி எம் பி என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றலாம்.
மக்கள் பிரதிநிதியாக தரூர் எப்ப‌டி செயல்படுகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றாலும் ,அவரை முன்னோடி எம் பி யாக கருதலாம் என கூறுவதற்கான காரணம் [...]

தொடர்ந்து படிக்கவும் »

டிவிட்டரில் வென்ற இந்திய தேர்த‌ல்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பது போல டிவிட்டரில் இந்திய தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறது. டிவிட்டர் போக்குகள் பட்டியலில் இந்திய தேர்தல் தொடர்பான பதமே முதலிடம் பிடித்திருக்கிறது.
குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவை என்று அழைக்கப்படும் டிவிட்டரை தேர்தல் பிரசாரம் உட்பட எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.பிரசாத்தில் டிவிட்டர் பெரிய அளவில் பயன்பட்டதாக தெரியவில்லை.ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிட டிவிட்டர் சிறப்பாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடையாளமாக டிவிட்டர் போக்குகளில் இந்திய தேர்தல் தொடர்பான பதம் முதல் இடம் பிடித்துள்ளது.வாக்கு எண்ணிக்கை [...]

தொடர்ந்து படிக்கவும் »

டிவிட்டரில் இந்திய தேர்தல்

தேர்தல் பிராசாரத்தில் வேன்டுமானால் டிவிட்டர் பெரிய அள‌வில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் முடிவுக‌ளை வெளியிடுவதில் டிவிட்டர் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் டிவிட்டர் சேவையை தேர்தல் முடிவுகளை வெளியிட பயன்படுத்துவது இயல்பானது தானே?
மக்களவை தேர்தலுக்கான வாக்கு என்ணிக்கை சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சிலர் டிவிட்டர் மூலம் தேர்தல் முடிவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.சந்தோஷ்மஹரிஷி என்பவர் நிமிடத்திற்கு ஒருமுறை தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.
சங்கர் கணெஷ் என்பவரும் டிவிட்டரில் [...]

தொடர்ந்து படிக்கவும் »

தேர்தல் இணைய தளம் முடங்கியது

மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்க அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இணைய தளம் முடிவுகளை அறியவிரும்பி வருகை தந்தவர்களின் முற்றுகையை தாங்க முடியாமல் முடங்கியது.
2009 மக்களவை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் லட்சக்கணக்கான இணையவாசிகள் முடிவுகளை அறிய இந்த தளத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இந்த தளம் 9 மணியளவில் முடங்கியது.
ஒரு நொடிக்கு 1 லட்சம் [...]

தொடர்ந்து படிக்கவும் »