உண்மையில் யாராவது டிவிட்டர் முகவரியை தனது பெயராக மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அது தான் இணைய உலகின் வழக்கம்.ஆனால அதற்கு பதிலாக தெருவுக்கு டிவிட்டர் முகவரி பெயராக சூட்டப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தெரு ஒன்றுக்கு அர்ஜான் எல் பஸாத் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
யார் இந்த பஸாத்,அவர் டிவிட்டர் முகவரி எப்படி தெருவுக்கு பெயரானது என பார்ப்பதற்கு முன் இணைய உலகில் பெயர் கலாச்சாரத்தை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்.
பெயர் வைக்கும் போது வித்தியாசமான பெயர்களை தேடுவது போல சிலர் [...]
செப்டம்பர், 2009 க்கான தொகுப்பு
30 செப்
தெருவுக்கு டிவிட்டர் பெயர்
29 செப்
ஒபாமாவை கொல்ல வேண்டுமா?
இண்டெர்நெட் பல நேரங்களில் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.சமீபத்திய அதிர்ச்சி அமெரிக்க அதிபர் ஒபாமா கொல்லப்பட வேண்டுமா என நடத்தப்பட்ட கருத்து கணிப்பாகும்.
சமுக வலைப்பின்னல் தலங்களில் பிரபலமானதாக கருதப்படும் ஃப்பேஸ்புக் தளத்தில் இப்படி ஒரு கருத்து கணிப்பு இடம்பெற்று அதிர வைத்துள்ளது.ஃபேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான சேவைகள் உண்டு .இவற்றில் இணைய கருத்து கணிப்புகளை நடத்த உதவும் சேவையும் ஒன்று.
யாரோ பயனாளி ஒருவர் இந்த செவையை பய்ன்படுத்தி ஒபாமா கொல்லப்பட வேண்டுமா என்னும் கருத்து கணிப்பை உருவாக்கி [...]
28 செப்
டிவிட்டரில் ஹாரி பாட்டர் எழுத்தாளர்
திரைப்பட நட்சத்திரங்களும் எழுத்தாளார்களும் தங்கள் ரசிகர்களை தொடர்பு கொள்ள டிவிட்டர் சேவையை உற்சாகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
டிவிட்டரின் செல்வாக்கு மற்றும் அதன் பயன்பாட்டுத்தன்மையை கேள்விப்பட்டு மேலும் பல பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து வருகின்றனர்.அதே நேரத்தில் ஒரு சில பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
பிரபலங்கள் பெயரில் டிவிட்டரில் போலி பக்கங்கள் அமைக்கப்படுவது சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களுக்கும் அவர்களின் ரசிகர்கர்கள் இருவருக்குமே தொல்லை தரும் சங்கதி.
விற்பனையில் சாதனை படைத்த ஹாரிப்பாட்டர் கதைகலை எழுதிய ஜே கே ரவுலிங் பெயரிலும் [...]
28 செப்
கூகுலின் 11 வது பிறந்த தினம்
கூகுல் தனது 11 வது பிறந்த தினத்தை தனக்கே உரிய பாணியில் அட்டகாசமாக கொண்டாடியிருக்கிறது.அதாவது சபாஷ் சரியான மாற்றம் என்று சொல்லக்கூடிய வகையில் தனது லோகோவை மாற்றியமைத்து இனையவாசிகளை புன்னகையோடு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற வைத்துள்ளது.
1998 ல் செப்டம்பர் மாதம் கூகுல் உதயமானது.இந்த பத்தாண்டுகளில் கூகுல் உலகின் முன்னணி தேடியந்திரமாக உருவாகிவிட்டது.தற்போது கூகுல் 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
தன்னுடைய பிறந்த நாளை கூகுல் தனது பாணியில் கொண்டாடியுள்ளது.
கூகுலைப்பொருத்தவரை அதன் லோகோ தான் சகலமும்.லோகோவில் நுட்பமான [...]
25 செப்
வங்கிக்கு எதிராக யூடியூப் புரட்சி
பொருத்தது போதும் என பொங்கி எழுந்திருக்கிறார் அமெரிக்க கடனாளி ஒருவர்.தனது வங்கிக்கு எதிராக யூடியூப் விடீயோ மூலம் அவர் அறைகூவல் விடுத்து கடனாளிகளின் புரட்சிக்கு வித்துட்டுள்ளார்.இந்த போர்க்கொடி வீடியோ மூலம் அவர் யூடியூப்பில் நட்சத்திரமாகியிருக்கிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச்சேர்ந்த ஆன் மிர்ச் என்னும் அந்த பெண்மணிக்கு 41 வயதாகிறது.பாங்க் ஆப் ஆமெரிக்காவின் வாடிக்கையாளரான அவர் சமீபத்தில் வங்கி தன்னுடைய கிரிடிட் கார்டு தவணை தொகைக்கான வட்டித்தொகையை அநியாயமாக உயர்த்திய போது கொதித்துப்போய்விட்டார்.
பத்தாண்டுகளுக்கு மேலாக அவர் தன்னுடைய தவணைகளை ஒழுங்காக [...]
24 செப்
இணையத்தில் காதல் தேடல்
எல்லோரும் இண்டெர்நெட்டில் பழைய காதலிகளையும் காதலன்களையும் தேடிக்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆஸ்க்ஜீவ்ஸ் தேடியந்திரம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் படி இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களில் பாதிபேர் தஙளுடைய முன்னாள் காதலன்/காதலிகளை தேடுகின்றனராம்.
ஃபேஸ்புக் ,டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்களின் மூலம் அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களை தேடுவதும் சுலபமாக இருக்கிறது.தொடர்பு விட்டுப்போன பழைய நண்பர்களை தேடவேண்டும் என்றால் இந்த தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதே போலவே பலரும் தங்களது பழைய காதலர்களை தேடிக்கண்டுபிடிக்க முயல்வதாக தெரிய வந்துள்ளது.ஆனால் அவர்கள் [...]
23 செப்
டிவிட்டர் மொழி வளர்க்கும்
மெல்லிஃப்யூலஸ் (Mellifluous )என்னும் ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?இந்த சொல்லை எப்போதாவது பயன்படுத்தியிருக்கறிர்களா?
ஆங்கில மொழியில் உள்ள அழகான வார்த்தைகளில் ஒன்றாக இதனை கருதலாம்.உச்ச்ரிப்பிலும் சரி பொருலிலும் சரி மெல்லிஃபியூலஸ் அற்புதமானது தான்.தேனைப்போல வழியும் என்பது தான் இந்த சொல்லுக்கான அர்த்தம்.ஒருவரின் நுரல் இனிமை, அல்லது எழுத்து நடை ஆகியவற்றை சிலாகிக்க இந்த சொல்லை பயன்படுத்தலாம்.
உள்ளபடியே ஆங்கில மொழியில் ஆர்வம் மிக்கவர்களுக்கு இந்த அறிமுகம் மகிழ்ச்சியைத்தரும்.அதிலும் புதுதுப்புது சொற்களை அறிய விரும்புகிறவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படலாம்.
இதே போன்ற [...]
23 செப்
கூகுலை மாற்ற வாருங்கள்
கூகுலின் முகப்பு பக்கம் எளிமையின் அடையாளமாக கருதப்படுவதும்,அதுவே மற்ற தேடியந்திரங்களுக்கான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளதும் தெரிந்த விஷயங்கள் தான்.குறைந்த பட்ச அம்சங்களை மட்டுமே கொண்ட கூகுலின் முகப்பு பக்கம் அதன் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பதையும் மறுப்பதற்கில்லை.
கூகுல் அவப்போது முகப்பு பக்கத்தில் சிறிய அளவிலான நுட்பமான மாற்றங்களை செய்தாலும் அடிப்படையில் முகப்பு பக்கம் மாறாமலேயே இருந்து வருகிறது.
கூகுல் அபிமானிகளுக்கு இது குறித்து மனக்குறை உண்டா என்று தெரியவில்லை.ஆனால் ஒரு சிலர் கூகுலின் ஒரே மாதிரியான முகப்பு பக்கத்தால் [...]
22 செப்
கூகுலில் இயேசுவை முந்திய இசைக்குழு
அவர்கள் வந்த வேகம் தான் என்ன, வளர்ந்த வேகம் தான் என்ன, வீழ்ந்த வேகம் தான் என்ன… என்று பீட்டில்ஸ் இசைக்குழுவின் எழுச்சி பற்றி கூறப்படுவதுண்டு.வேகமாக வளர்ந்து அதிவேகமாக வீழ்ச்சியை சந்தித்தாலும் பீட்டில்ஸ் இசைக்குழு இன்னமும் ரசிகரகள் மத்தியில் மறக்கப்படாமலே இருக்கின்றது.
இதன் அடையாளமாக கூகுல் தேடல் பட்டியலில் பீட்டில்ஸ் முன்னணி வகிப்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல பீட்டில்ஸ் இயேசுநாதரை விட பிரபலமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது இண்டெர்நெட்டில் இயேசுநாதரை விட பீட்டில்ஸ் இசைக்குழுவை அதிகம் பேர் தேடியுள்ளனர்.தேடியந்திரமான [...]
21 செப்
கூகுல் லோகோ மர்மம் நீங்கியது.
கூகுல் புதிரின் மர்மம் நீங்கியிருக்கிறது.எச் ஜி வெல்சுக்கு ஜே.இது தான் கூகுல் புதிருக்கான பதில்.
கூகுல் தனது லோகோவுக்குள் சித்திரங்களை வரைந்து காட்டி அழகாக விளையாட்டு காட்டுவது வழக்கம். டூடுல் என்று சொல்லப்படும் இந்த சித்திரங்களின் சிறப்பமசம் என்னவென்றால் எதோ ஒரு விதத்தில் நடப்பு சம்பவம் தொடர்பானதாக அது அமைந்திருக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி,அல்லது கிறிஸ்துமஸ் விழாவின் போது கூகுல் லோகோவும் இந்த நிகழ்வுகளை குறிக்கும் வகையில் இருக்கும்.சில நேரங்களில் மேதைகளின் பிற்ந்த தினத்தின் போது அவர்களின் பங்களிப்பை [...]
அண்மைய மறுமொழிகள்