//
archives

இணைய செய்திகள்

This category contains 192 posts

மாற்று இணையதளங்களை தேட!

ஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட்ஸ்லைக்.ஆர்ஜி. குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையதளங்களை இது தேடித்தருகிறது.எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்களூக்கான மாற்று இணையதளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக பெருமைப்பட்டு கொள்ளும் இந்த தளம் மற்ற எந்த ஒரே மாதிரி … Continue reading »

இண்டெர்நெட் கால காதல்.

காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது. ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி … Continue reading »

விகடன் டாட் காமில் எனது கட்டுரை.

புத்தாண்டு பிறக்க உள்ளது.விடைபெறும் ஆண்டை திரும்பி பார்த்து முக்கிய நிகழ்வுகளை அலசி ஆராயும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 2011 ம் ஆண்டில் இணைய உலகை பின்னோக்கி பார்த்து முக்கிய நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் எனது கட்டுரை விகடன் டாட் காமில் வெளியாகியுள்ளது. சமூக ஊடக் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாக அமைந்த 2011 ம் ஆண்டின இணையசுவடுகளை பதிவு செய்துள்ள இந்த கட்டுரை மூலம் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் எந்த அளவுக்கு டுனிஷியாவில் துவங்கி … Continue reading »

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.

ஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் மறைந்துவிட்டார்.வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தி ஆப்பிலின் தயாரிப்புகளை தனியாக நிற்கசெய்த தொழில்நுட்ப மேதை ஜாப்ஸ். எல்லா கம்ப்யூட்டர்களும் மேக் ஆகிவிடாது. எல்லா எப் பி 3 பிளேயர்களும் ஐபாட் ஆகிவிடாது.ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட் போன் கிடையாது.ஆப்பிலின் இந்த தயாரிப்புகள்க்கு பின்னே இருந்தவர் ஜாப்ஸ்.அவரது மறைவு தொழில்நுட்ப பிரியர்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடியது. ஜாப்ஸ் … Continue reading »

கொடுப்பதற்கு ஒரு இணைய‌தளம் இருந்தால்!

பொருட்களை தூக்கி எரியாமல் யாருக்காவது இலவசமாக கொடுக்க நினைத்தால் அதற்கான இணைப்பு பாலமாக விளங்ககூடிய இணையதளமாக யாகிட் அமைந்துள்ளது. இந்த பிரிவில் முன்னோடியான பிரிசைக்கிள் வகையை சேர்ந்தது என்றாலும் யாகிட் மேலும் ஒரு கொடுக்கல் சேவை என்ற அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது.அதற்கு காரணம் எளிமை மற்றும் பயன்பாட்டுத்தன்மை. இந்த தளம் செயல்படும் விதம் மிகவும் எளிதானது.கொடுக்க விரும்புகிறவர்கள் கொடு பகுதியில் தாங்கள் பெற விரும்பும் பொருள் பற்றி குறிப்பிட்டால் போதுமானது.பொருட்களை பெற விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான பொருள் … Continue reading »

ஒரு கடத்தலும் சில பேஸ்புக் அப் டேட்டுகளும்

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது.பேஸ்புக் என்னும் பூதம்!அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க்காமல் எப்போதும் அப் டேட்டுகளை வெளியிட வைக்கிறது.எங்கிருந்தாலும் என நடத்தாலும் பேஸ்புக்கில் தெரிவித்து விடும் மோகத்திற்கு பய‌னாளிகளை மாற்றியிருக்கிறது அது. வம்பில் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்திருந்தும் பலர் வாழ்க்கை நிகழ்வுகளை அவை நிகழும் போதே பேஸ்புக்கில் பதிவேற்றி விடுகின்றனர். இந்த பேஸ்புக் அடிமைத்தனத்திற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்க வாலிபர் ஒருவர் கடத்தல் நாடகத்திற்கு மத்தியில் அதில் அரங்கேறிய காட்சிகளை பேஸ்புக்கில் … Continue reading »

பசுமை செய்திகளுக்கான இணையதளம்.

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில் நுழைகின்றனர். முகப்பு பக்கத்தை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அதன் பிறகு தொழில்நுட்பமோ பகுதியையோ அல்லது விளையாட்டு பகுதியையோ இல்லை சினிமா பகுதியையோ கிளிக் செய்து அதனுள்ளே நுழைந்த‌ விடுகின்ற‌னர். எல்லோருக்கும் இத்தகைய அபிமான பகுதிகள் இருக்கின்ற‌ன.மற்ற பகுதிகளை பொருத்தவரை அவர்கள் கண்ணை கட்டி கொண்டு இருந்து விடுகின்றனர்.இப்போது சமூக மீடியா யூகத்தில் … Continue reading »

வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர். இருப்பினும் ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நம்பத்தகுந்த தலைப்புகளை கொடுத்து அவை நிஜமான மெயில் … Continue reading »

பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த டாக்டர்

பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது.சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. பேஸ்புக் வேலைக்கு வேட்டு வைத்திருக்கிறது.சில நேரங்களில் உயிர் காக்கவும் உதவியிருக்கிறது. அந்த வகையில் இப்போது பேஸ்புக் பிரிட்டன் வாலிபர் ஒருவர உரிய நேரத்தில் சிகிச்சை பெற உதவி உயிரை காப்பாற்றி இருக்கிறது. பீட்டர் பால் என்னும் அந்த வாலிபரே கூட இப்படி பேஸ்புக் தனது உயிரை காக்க கை கொடுக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே தான் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வயிற்று … Continue reading »

தமிழக மீனவர்களுக்கான இணைய படிவத்தில் கையெழுத்திடுங்கள்.

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட்டர் பதிவுகள் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்த கோபத்தையும் அந்த கொடுஞ்செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ணும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்த ஆவேச குரல் அரசின் காதுகளை எட்டச்செய்ய வேண்டும். இந்த இணைய முயற்சியின் இன்னொரு அங்கமாக மீனவர் நலன் காப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கான இணைய விண்ணப்ப படிவம் உருவாக்க‌ப‌பட்டுள்ளது. இணைய கோரிக்கைகளை உருவாக்கி அதற்கு ஆதரவு … Continue reading »

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 742 other followers

Top Rated

Follow

Get every new post delivered to your Inbox.

Join 742 other followers