இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி … Continue reading
பிடிஎப் கோப்புகள் தொடர்பான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.பிடிஎப் கோப்புகளை தேடும் தளங்கள்,பிடிஎப் கோப்புகளை விடுவிக்கும் தளங்கள்,சாதாரண கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற உதவும் தளங்கள் என பிடிஎப் சார்ந்த தளங்கள் நீள்கின்றன. ரொடேட்பிடிஎப்.நெட் தளமும் பிடிஎப் சார்ந்த சேவை வழங்கும் தளம் தான்.தளத்தின் பெயரை கொண்டே இதன் தன்மையை புரிந்து கொன்டு விடலாம்.ஆம் பிடிஎப் கோப்புகளை அப்படியும் இப்படியும் சுற்றுவதற்கு இந்த தளம் உதவுகிறது. அதாவது பிடிஎப் கோப்புகளை அவை இருக்கும் நிலையில் இருந்து தலைகீழாக திருப்பி … Continue reading
இமெயிலில் புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் மற்றும் டெய்லிட் தளங்கள் போலவே மேலும் ஒரு இணையதளம் டெய்லிபே.ஜஸ் அறிமுகமாகயுள்ளது. புத்தகம் படிக்க நினைத்தும் அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை என்று மெய்யாகவோ பொய்யாகவோ புலம்புகின்றவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் புத்தகத்தின் ஒரு பகுதியை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்கிறது இந்த தளம். வடிவமைப்பிலே உள்ளடக்கத்திலோ அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாக இருக்கிறது இந்த தளம்.டெய்லிலிட் போல பெரிய பட்டியலோ விரும்பிய புத்தகத்தை தேர்வு செய்யும் வசதியோ கிடையாது.அதே … Continue reading
ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக்கிறது.பர்ன் நோட் என்னும் அந்த தளமும் படித்தவுடன் செய்திகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கிறது. நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புவதாக கூறும் இந்த தளம் தான் சாத்தியமாக்கும் ரகசியம் மற்றும் நம்பகத்தன்மையை மிக மிக விரிவாகவே உறுதி செய்கிறது. முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் … Continue reading
இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை. அதாவது நீங்கள் அனுப்பும் இமெயில் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் இமெயில் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது. இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான … Continue reading
உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. அதாவது உண்மையான இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் அதனை மறைக்கும் வகையில் பாதுகாப்பான முகவரியை இந்த தளம் உருவாக்கி தருகிறது. இவ்வாறு இமெயிலின் அடையாளத்தை மறைக்க … Continue reading
இமெயிலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது.அதன் பெயர் ஷார்ட்பெயில். டிவிட்டரும் ,பேஸ்புக்கும் இமெயிலின் இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் இமெயில் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிறது. அதாவது பெயருக்கேற்ப இது இமெயில் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது.ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீளமாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது.அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விஷயத்தை சொல்லி விட வேண்டும். டிவிடரில் எப்படி அதிகபடசம் 140 எழுத்துக்கள் என்ற … Continue reading
ஒரு பக்கம் ஃபேஸ்புக் வளர்ந்த் கொண்டே போகிறது .இன்னொரு புறம் டிவிட்டர் சக்கைபோடு போடுகிறது.இரண்டுமே சமூக வலைப்பின்னல் தளங்கள்.பகிர்வும் ,சக இணையவாசிகளோடு கைகோர்ப்பதுமே இவற்றின் பலமாக இருக்கிறது. இந்த இரண்டுமே போட்டிபோட்டுக்கொண்டு பிரபலமாகி வருகின்றன.இதனால் தேடல் கொஞம் பின்னுக்குத்தள்ளப்பட்டது போல தோன்றுகிறது. இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாடு காரணமாக் இமெயிலை பயன்படுத்துவதே குறைந்து வருவதாக கூறப்படுகிறது. தேடல் முதல்வன் கூகுலுக்கு இதைவிட கவலை தரக்கூடியது வேறில்லை. ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் சவாலை சமாளிக்கும் வகையில் … Continue reading
இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னபடுத்த வேண்டியிருக்கிறது. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் முகவரி தேவைப்படுகிறது. நம்பகமான தளங்கள் என்றால் இமெயில் சமர்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. ஆனால் ஒரு சில தளங்களில் இமெயில் முகவரியை தர தயக்கம் ஏற்படலாம்.இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட தளம் அல்லது சேவையை … Continue reading
லஷ்மண் ஸ்ருதியின் இன்னிசை கச்சேரிக்கு நீங்கள் பல முறை சென்றிருக்கலாம்.பாடல்களை கேட்டு ரசித்திருக்கலாம்.அந்த இசைக்குழுவின் மீது அபிமானமும் ஏற்பட்டிருக்கலாம். சரி.லஷ்மண் ஸ்ருதியின் இணைய வீட்டிற்கு விஜயம் செய்திருக்கிறீர்களா?இல்லை என்றால் ஒரு முறை சென்று பாருங்கள்.அட என்று லேசாக வியந்து போவீர்கள்.அந்த அளவுக்கு அழகாகவும் செறிவாகவும் இருக்கிறது லஷ்மண் ஸ்ருதியின் இணையதளம். ஒரு இணையதளம் அழகாக இருப்பது பெரிய விஷயமல்ல.அதற்கு நல்ல வடைவமைப்பாளர் மட்டும் போதும்.ஆனால் இணையதளங்கள் சுவாரஸியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வடிவமைப்பு மட்டும் போதாது.விஷயம் இருக்க வேன்டும். … Continue reading