//
archives

ஐபோன்

This category contains 15 posts

நண்பர்களை ஆலோசனை கேட்க ஒரு செயலி

முடிவு எடுக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சர்வாதிகார தனமையோடு இருப்பவர்களும் உண்டு.அதற்கு மாறாக ஜனநாயகத்தனமையோடு எதை செய்தாலும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் கருத்துக்களை அறிய முற்படுபவர்களும் இருக்கின்றனர். இரண்டு அணுகுமுறைகளிலுமே சாதக பாதக அமசங்கள் உண்டு.அது ஒரு புறம் இருக்க நண்பர்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பது தான் சரி என நினைப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக என்றே ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்க் கிளவுடி என்னும் எந்த செயலி நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதை … Continue reading »

செல்போனில் வரும் கனித ஆசிரியர்.

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.கையில் இருக்கும் செல்போனை எடுத்து எந்த பாடத்தில் என்ன சந்தேகம் என்பதை குறிப்பிட்டு உதவி தேவை என்று தெரிவித்தால் ஆசிரியர் ஒருவர் செல்போன் வழியேவே அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவார். இப்படி செல்போன் மூலமே கனிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ச‌ந்தேகங்களை தெளிவுபடுத்தும் செல்போன் செயலியாக  மோடுட்டோ அறிமுகமாகியுள்ளது. அந்த வகையில் செல்போனில் … Continue reading »

ஊழலுக்கு எதிராக ஒரு செல்போன் செயலி.

இனி எங்காவது லஞ்சம் கொடுக்க நேரிட்டால் நேராக பிரைஸ்பாட் இணையதளத்திற்கு செல்லுங்கள்;லஞ்சம் கேட்டது யார்,எதற்காக கேட்டனர்,எவ்வளவு கேட்டனர் என்பது போன்ற விவரங்களை அதில் பதிவு செய்யுங்கள். இப்படி செய்வதன் முலம் உங்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ உழலுக்கு எதிரான இயக்கத்தில் உங்களால் இயன்ற பங்களிப்பை நீங்கள் செலுத்தி விட்டதாக ஆதம் திருப்தி கொள்ளலாம். அவ்வளவு தானா? அடிப்படையில் இவ்வளவு தான்.ஆனால் இந்த இணையதளம் மூலமான இயக்கம் வலுப்பெற்றால் மேலும் கூட மாற்றங்கள் நிகழலாம்.அதற்கு இணையவாசிகளின் பங்களிப்பு … Continue reading »

செல்லே மெட்டை கேளு பாட்டை சொல்லு.

கையில் இருக்கும் செல்போன் மந்திரக்கோளோ என வியக்க வைக்க கூடிய அளவுக்கு அற்புதமாக செயல்படக்கூடிய ஆச்சர்யமான செயலிகள் பட்டியலில் ஷசாம் செயலியையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இசை பிரியர்கள் இந்த செயலியை பற்றி அறிந்தால் சொக்கிப்போய் விடுவார்கள்.இந்த செயலி அப்படி என்ன அற்புதத்தை செய்கிறது என்றால் மெட்டை கேட்டவுடன் பாட்டை சொல்லி விடுகிறது தெரியுமா? சில நேரங்களில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதோ திடிரென புதிய பாடல் ஒன்றை கேட்டு லயித்து நிற்பீர்கள் அல்லவா?அந்த … Continue reading »

டிவி பார்ப்பதை மாற்றிக்காட்டும் அற்புத செயலி.

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது. அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை … Continue reading »

காதலை சொல்ல ஒரு ஐபோன் செயலி

அவளிடமும் ஐபோன் இருந்தது. என்னிடமும் ஐபோன் இருந்தது. ஆகவே ஒரு செயலி மூலம் காதலை சொன்னேன். இப்படி புதுக்கவிதை போல யோசித்து காதலை ஹைடெக்காக சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னியைச்சேர்ந்த சாப்ட்வேர் நிபுணரான சபா இடேல்கனி. கொஞ்சம் ஆச்சர்யமான காதல் கதை தான் இவருடையது.இடேல்கனி தன்னுடையா தோழியான மெலோடியுடன் மூன்றாண்டுகளாக படகி வந்தார்.பழகத்துவங்கிய ஆறாவது மாதமே மெலோடியை காத‌லிக்கவும் துவங்கிவிட்டார்.ஆனால் இந்த காதலை சொல்லாமலேயே பழகி வந்தார். மூன்று ஆண்டு நெருக்கமாக பழகிய பிறகு கடந்த … Continue reading »

ஐபேட் ;சும்மா அதிருதில்லே

டிவிட்டரிடம் கேட்டால் ‘ஐபேட்’ பெயரைச்சொன்ன சும்மா அதிருதில்லே என்று பதில் சொல்லக்கூடும்.நிமிடத்துக்கு ஐபேட் பெயரில் 7000 டிவிட்டர் செய்திகள் பதிவானால் வேறு எப்படி சொல்வதாம். ஆம், ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள ஐபேட் சாதன‌ம் இண்டெர்நெட் உலகில் பரபரப்பையும் விவாதத்தியும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த புதிய சாதனத்தின் சாதக பாதக அமசங்கள் பற்றி தான் பலரும் பேசுகின்றனர்.  ஆப்பிள் ஐபேடை அறிமுகம் செய்த போது குறும்பதிவு சேவையான டிவிட்டரிலும் இது பற்றியே அதிக கருத்துக்கள் பதிவாயின. முக்கிய நிகழ்வு … Continue reading »

ஐபோனால் பிறந்த குழந்தை

ஐபோனால் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் ,ஐபோனில் உள்ள ஆயிரக்கணக்கான செயலிகளில் ஒன்று அதற்கு உதவியிருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்தை சேர்ந்த லேனா பிரைஸ் என்பவர் தான் ஐபோன் உதவியோடு தாயாகியிருக்கிறார்.அவர‌து குழந்தை உலகின் முதல் ஐபோன் குழந்தை என்று வர்ணிக்கப்படுகிற‌து.பிரைசுக்கு இதில் மகிழ்ச்சி தான். தவமாய் தவமிருந்து தாயகியிருப்பவர் அல்லவா?அதற்கு உதவிய ஐபோன் செய‌லி சார்ந்து தனது குழந்தை வர்ணிக்கப்படுவதில் ஆனந்தம் இல்லாமலா போய்விடும். ஐபோனுக்கும் கருத்தரிப்பதற்கும் என்ன … Continue reading »

ஆப்பிளின் ஐபேட்; புதிய தகவல்கள்

லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம்.  ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனாமான ஐபேடை அதன் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படி தான் வர்ணித்துள்ளார்.இது மாய‌த்த‌ன்மை மிக்க‌ புர‌ட்சிக‌ர‌மான‌ தாயாரிப்பு என்றும் புக‌ழ்ந்து த‌ள்ளியுள்ளார் ஜாப்ஸ். ஐபேட் பெய‌ரே அச‌த்தாலாக‌ தான் உள்ள‌து. ஐபாட் ம‌ற்றும் ஐபோன் ஆகிய‌வ‌ற்றின் தொட‌ர்ச்சியாக‌ ஆப்பிள் அறிமுக‌ம் செய்துள்ள‌ புதிய சாத‌ன‌ம் இது.பெரும் எதிர்பார்ப்பு ம‌ற்றும் ப‌ர‌ப்புக்கு இடையே இந்த‌ சாத‌ன்ம் அறிமுக‌மாகியுள்ள‌து. … Continue reading »

கூகுல் போன் புதிய தகவல்

ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது. கூகுல் போன் தொடர்பான ஆருடங்களும் கணிப்புகளும் வதந்திகளாக உலா வந்து தற்போது செய்தியாக வலுப்பெற்றுள்ளது.கூகுல் அதிகர்ரப்பூர்வமாக இன்னும் வாயைத்திறக்கவில்லை என்றாலும் கூகுல் போன் தொட‌ர்பான‌ செய்திக‌ள் இண்டெர்நெட்டில் தெறித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌. கூகுல் போன் தோற்றம் இது தான் என்று டிவிடரில் புதிய போனின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கூகுல் போன் அதன் ஊழியர்களூக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி … Continue reading »

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 742 other followers

Top Rated

Follow

Get every new post delivered to your Inbox.

Join 742 other followers