மீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா? நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா? ஆம் எனில் அதற்கான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. . ஆடியூ எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் வாய்ஸ் மெயில்களை உலகோடு பகிர்ந்துகொள்வதற்கான இணைய களமாக அமைந்துள்ளது. உலகில் உள்ள ஒலிகளுக்கெல்லாம் ஒரு இருப்பிடமாக திகழ வேண்டும் எனும் உயர்ந்த லட்சியத்தோடு இந்த … Continue reading
ஆங்கிலத்தில்தான் எத்தனை விதமான ஆங்கிலம் இருக்கின் றன. நம்மூரில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதை தமிங்கிலிஷ் என்று சொல்கின்றனர். அதே போல வடநாட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுவதை இந்திங்கிலிஷ் என்று சொல்கின்றனர். இப்படி ஊருக்கு ஊர், நாடுக்கு நாடு ஆங்கிலம் வேறுபடுகிறது. ஆங்கிலத்தின் ஆதிக்கம் காரண மாக உள்ளூர் மொழிகள் பாதிக்கப் படுவதாக புகார் கூறப்படுகிறது. மொழிகள் முற்றாக அழிந்து போகாவிட்டாலும், ஆங்கில கலப்பால் அவற்றின் தூய்மை குறைந்து போவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. நவீன … Continue reading
திரைப்பட விழாவுக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பற்றி அறியும்போது திருமணத்துக்காகவும் ஒரு சாப்ட்வேர் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை விரிகிறது. தமிழர்களின் எதிர்காலத் தேவையில் திருமணத்துக்கான சாப்ட்வேரையும் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் சாப்ட்வேரை உருவாக்கக் கூடிய தனி நபர் அல்லது குழு டாட் காம் கோடீஸ்வரராக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய சாப்ட்வேருக்கான சமூக தேவையும் இருக்கிறது. கல்யாணம் செய்து பார், வீட்டை கட்டிப்பார் என்று நம் முன்னோர்கள் சொன்னதிலிருந்து திருமணத்துக்கான … Continue reading