//
archives

நெட்சத்திரங்கள்

This category contains 14 posts

3 எழுத்தில் ஒரு இணையதளம் இருக்கும்.

மூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்? அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி, பாராட்டுதல்களை பெற்று, வர்த்தக ரீதியிலான  பலனும்பெற்றிருக்கிறார். எல்லாமே மூன்று வார்த்தைகளால் தான் ஆம், அது தான் அவர் துவக்கி,நடத்திய இணைய தளத்தின் பெயர். அந்த தளத்தின மைய கருத்தும் தான். அதாவது மூன்று வார்த்தைகள்… உங்கள் நண்பர்கள் (முத்தான)  மூன்று வார்த்தைகளில் உங்களைப்பற்றி சொல்ல வாய்ப்பளிப்பது  தான் இந்த தளத்தின் நோக்கம். மூன்று … Continue reading »

இது யூடியூப் பல்கலைக்கழகம்

யூடியூப் மூலம் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் இருக்கின்றனர். யூடியூப் மூலம் பாடங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. ஆனால் யூடியூப் மூலமே ஒருவர் பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார் என்பதுதெரியுமா?  அதாவது தனி நபர் பல்கலைக்கழகம். தனிநபர் ஒருவர் பல்கலைக்கழகம் நடத்துவது என்பது நம்ப முடியாத சாதனைதான். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சல்மான்கான் எனும் 33 வயது வாலிபர் இதனைத்தான் சாதித்திருக்கிறார். எத்தனை பேருக்கு தங்கள் பெயரிலேயே ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் வாய்ப்பு சாத்தியமாகும் என தெரியவில்லை. இருப்பினும் … Continue reading »

இவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே. சொல்லப்போனால் பேராசிரியர் கசான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரஸை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்ல இந்த வைரஸை மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்கும் பரவ விட்டு காண்பித்திருக்கிறார். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த … Continue reading »

மனைவி அழுவதெல்லாம்… இணைய தளமாகுமே!

நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் மனைவியையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக மனைவியின் குறைகளை அவரது குணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.  இப்படி மனைவியின் செயல்களை கொண்டாட முடியும் என்றால் அதற்காக ஒரு இணையதளத்தை அமைத்து உலகையே ரசிக்க வைக்கலாம். இதற்கு முன்னுதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்காவின் பார்கர் ஸ்டெச்சை சொல்லலாம். இளைஞரான ஸ்டெச்சை ஒரு இணைய நட்சத்திரம் என்றும் சொல்லலாம். மனைவியின் மூலம் … Continue reading »

இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு. சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும்.கூகுலில் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் என்று தேடிப்பார்த்தால் சாம்சன் தான் முதலில் வருகிறார். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் சாம்ஸனின் சிறப்பு ஒன்றும் குறைந்து … Continue reading »

இணைய செய்தி உலகை உலுக்கிய 19 வயது வாலிபர்

பிரேக்கிங் நியுஸ் என்றதும் சி.என்.என், பிபிசி,நியூயார்க் டைம்ஸ் போன்ற பெரிய மீடியா நிறுவனங்களே நினைவுக்கு வரக்கூடும்.ஆனால் இணைய உலகைப்பொருத்தவரை பிரேக்கிங் நியுஸ் என்றதும் நினைவுக்கு வருபவர் மைக்கேல் வான் பாப்பல் என்னும் வாலிபர் தான். ஹாலந்து நாட்டைச்சேர்ந்த பாப்பலுக்கு 19 வயது தான் ஆகிறது.ஆனால் அதற்குள் இண்டெர்நெட் உலகில் முக்கிய புள்ளிகளில் ஒருவர் என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.இணைய செய்தி உலகை தீர்மாணிக்க கூடிய செல்வாக்கு மிக்க நபர் என்றும் அடையாளம் காட்டப்படிருக்கிறார். பாப்பலுக்கு சொந்தமாக ஒரு செய்தி … Continue reading »

ஒரு நூறு முத்த‌ங்க‌ளும் ஒரு ‘நெட்’ச‌த்திர‌மும்

இண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர். பாரிசில் வசிக்கும் யாங் யா சிங் என்னும் பெயர் கொண்ட அந்த பெண்மணி தனது முத்தங்களால் இண்டெர்நெட் உலகை பற்றிக்கொள்ள வைத்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் என்பது போல இந்த இளம்பெண்ணுக்கும் ஒரு லட்சியம் உண்டானது. விநோதமானது,விவகாரமானது,துணிச்சலானது , என எப்படி வேண்டுமானாலும் அந்த லட்சியத்தை வர்ணிக்கலாம். பாரிஸ் நகரில் வசிக்கும் நூறு பேரை முத்தமிட வேண்டும் .இது தான் அவரது … Continue reading »

வேலை வேட்டையில் புதுமை

அமெரிக்காவின் ஜான் கோல்பே நட்சத்திரமோ பிரபலமானவரோ இல்லை.அவர் அந்நாட்டின் கோடிககணக்கான சாமன்யர்களில் ஒருவர்.அதிலும் வேலை இல்லாதவர். ஆனால் அவர் வேலை இல்லாமல் இருப்பதையும் தற்போது வேலை தேடுவதையும் உலக்மே அறிந்திருக்கிற‌து.அனேகமாக அவருக்கு வேலை கிடைப்பதையும் உலகம் உடனே தெரிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிற‌து. காரணம் கோல்பே வேலை தேடுவதற்காக என்றே தனியே இணையதள‌த்தை அமைத்திருப்பதுதான். அநேக‌மாக‌ வேலை தேடுவ‌த‌ற்காக‌ என்று சொந்த‌மாக‌ இணைய‌த‌ள‌ம் அமைத்திருக்கும் முத‌ல் ம‌னித‌ராக‌ அவ‌ர் இருக்க‌லாம். வேலைவாய்ப்புக‌ளை தேட‌ உத‌வுத‌ற்காக‌ என்றே எண்ண‌ற்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.பெரும்பாலான‌வை … Continue reading »

உலகை உலுக்கிய கடைசி உரை!

அமெரிக்க பேராசிரியர் ராண்டி பாஷின் கதை மிகவும் மோசமானது. இருப்பினும் ராண்டி பாஷை பற்றி தெரிந்து கொண்டால் துயரமோ, பரிதாபமோ ஏற்படாது. அதற்கு பதிலாக புதிய உத்வேகமும், உள்ளத்தில் உறுதியுமே ஏற்படும். காரணம் பாஷ் தனது முடிவின் மூலம் மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மகத்துவத்தை கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். ஒரு விதத்தில் அவர் தனது மரணத்தின் மூலம் மரணத்தை வென்று சாகாவரம் பெற்றிருக்கிறார். அவருடைய வாழ்க்கை எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்து விட்டாலும் கூட அந்த வேதனையையும், வலியையும் … Continue reading »

என் பெயர் ஒபாமா!

இண்டெர்நெட் எதிர்பாராமல் புகழ் பெற வைக்கும் என்பதற்கான சுவையான உதாரணம், இந்த கதை. ஒபாமா அதிபராவதற்கு முன் , அமெரிக்க தேர்தல் நடைபெறுவதற்கு முன் நடந்த கதை இது . அமெரிக்க வாழ் இந்தியரான குரு ராஜ் என்பவரை ஒரு இமெயில் முகவரி பிரபலமானவராக ஆக்கிய கதையும் கூட‌. அதோடு பாரக் ஒபாமாவோடு தொடர்பு படுத்தி பேசப்படவும் வைத்த கதை. ஆனால் குருராஜ் இதற்காக திட்டமிட்டு செயல்படவில்லை. இந்த திடீர் புகழை அவர் எதிர்பார்க்கவுமில்லை. அவர் செய்ததெல்லாம் … Continue reading »

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 742 other followers

Top Rated

Follow

Get every new post delivered to your Inbox.

Join 742 other followers