புதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப் என்னும் சேவை அறிமுகமாகியுள்ளது. யூடியூப் வீடியோக்களை தெரிந்து கொள்வதற்கான மிகவும் சுவாரஸ்யமான வழியாக இந்த தளத்தை குறிப்பிடலாம். இணக்கமானதாகவும் தோன்றக்கூடிய சேவை. காரணம் இந்த தளம் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை திரட்டி தொகுத்து தருகிறது. பேஸ்புக்கில் தகவல்களை பகிந்து கொள்வதோடு பலரும் யூடியூப் விடியோக்களையும் தங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவற்றை பார்த்து … Continue reading
இப்போது கோலிவுட்டில் ஹிட்டாகும் திரைப்படங்களை விட யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்கள் அதிகம்.கையடக்க கேமிராவில் எடுக்கப்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்கள் பார்வைக்காக யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் அவற்றில் உள்ள ஏதோ ஒரு வித்தியாசமான அம்சத்திற்காக அவர்களை கவர்ந்து அப்படியே பகிர்ந்து கொள்ளப்பட்டு மிக விரைவிலேயே இணையம் முழுவதும் பரவி எல்லோரும் பார்த்து ரசிக்கும் வீடியோவாக ஆகிவிடுவதுண்டு. யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் இப்படி வெற்றி பெறும் வீடியோக்களின் எண்ணிக்கை குறைவானது தான் என்றாலும் கூட இந்த எண்ணிக்கை கனிசமானதே. … Continue reading
யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்காதா இணையவாசிகள் தான் உண்டா?இத்தகைய யூடியூப் பிரியர்களுக்காக என்று பல இணையதளங்களும் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கான தளங்கள்,இசை தொடர்பான கோப்புகளை காட்டும் தளங்கள் என யூடியூப் சார்ந்த இணையதளங்களின் வரிசையில் இப்போது எம்பெட் பிளஸ் என்னும் இணையதளம் அறிமுகமாகியுள்ளது. யூடியூப் சார்ந்த சேவைகளிலேயே மிகவும் விஷேசமானது என்று இதனை குறிப்பிடலாம். யூடியூப்பில் பார்க்கும் வீடியோக்களை மேலும் மெம்படுத்திக்கொள்ள இந்த சேவை உதவுகிறது. அதாவது கையில் ரிமோட் சாதனத்தை வைத்துகொண்டு யூடியூப் … Continue reading
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல ஒரு நல்ல இணையதளம் முழுமையாக உருவாக விட்டாலும் கூட அதன் கருப்பொருள் காரணமாக முதல் பார்வையிலேயே கவர்ந்து விடும். யூடியூப் டைம் மெஷின் இணையதளத்தை இந்த வகையை சேர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.இன்னும் இந்த தளம் முழுமையாக உருவாக்கப்படவில்லை.ஆனாலும் கூட இந்த தளம் கவனத்தை ஈர்க்ககூடியதாகவே இருக்கிறது. காரணம் இந்த தளத்தின் கருப்பொருள் அத்தனை சுவாரஸ்யமானது. வீடியோ வழியே காலத்தை திரும்பி பார்க்க வைக்கிறது இந்த தளம்.அதாவது … Continue reading
வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.வீடீயோ கோப்புகளின் உறைவிடமான யூடியூப்பில் துவங்கி இவற்றில் இடம்பெறும் வீடியோ காட்சிகளை தேட உதவும் வீடியோ வலைவாசல்களும் அதிகம் இருக்கின்றன. இந்த வரிசையில் புதியதொரு இணையசேவை அறிமுகமாகியுள்ளது.விசிட்டட் என்னும் பெயரிலான அந்த தளத்தின் சிறப்பம்சம் என்னெவென்றால் இணையவாசிகள் தங்கள் மனநிலைக்கு ஏற்ற வீடியோ காட்சிகளை சுலபமாக தேடி கண்டுபிடிக்கலாம் என்பதே.அதிலும் ஒற்றை குறிச்சொல் உதவியோடு அழகாக தேடலில் ஈடுபடலாம். இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள வீடியோக்கள் நகைச்சுவை,பிரம்பிப்பானவை,சுவாரஸ்யமானவை,ரம்யமானவை என பல … Continue reading
பிறந்த நாள் அன்று டெஸ்ட் மேட்சில் விளையாடும் ஆட்டக்காரர் சதம் அடிப்பது போல பிரபல வீடியோ பதிவு தளமான யூடியூப் தனது 5வது ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் முக்கிய மைல்கல்லை எட்டிப்பிடித்திருக்கிறது. தினந்தோறும் 200 கோடி முறை வீடியோ காட்சிகள் டவுண்லோடு செய்யப்படுவதுதான் அந்த மைல்கல். அதாவது நாள்தோறும் 200 கோடி முறை யூடியூப் மூலம் வீடியோ காட்சிகள் டவுண்லோடு செய்யப்பட்டு பார்க்கப் படுகின்றன. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் யூடியூப் 100 … Continue reading
யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது. கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட … Continue reading
யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும் ஒருவழியாக ஜூப்ஸ் இணையதளத்தை கொள்ளலாம். யூடியூப்பில் பதிவேறும் வீடியோ படங்களை பார்க்க யூடியூப் தளமே போதுமானது தான். ஆனால் யூடியூப்பில் மூழ்கி திளைத்தவர்களுக்கு தான் அதில் உள்ள பொக்கிஷங்களை தேடிப்பிடிக்கும் நுணுக்கம் தெரியும்.மற்றவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு யூடியூப்பில் கொட்டிக்கிடக்கும் வீடியோ கோப்புகள் மிரள வைக்கலாம். யூடியூப் வீடியோ கடலில் சுவாரஸ்யமானவற்றை கண்டுபிடிப்பது சவால் தான். யூடியூப்பிலியே ஊறிக்கொன்டிருந்தால் தான் லேட்டஸ்ட் ஹிட்டை சட்டென்று அடையாளம் … Continue reading
யூடியூப் தெரியும்.டிவி டியூப் தெரியுமா? டிவியூடியூப்பை டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம். இந்த இணையதளம் வாயிலாக டிவி நிகழ்ழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். சும்மா இல்லை;உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். டிவி நிகழ்சிகளை இணையத்தில் திரட்டித்தரும் சேவையான டிவி டியூப் அகண்ட அலைவரிசை மற்றும் இண்டெர்நெட் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து சிறந்தவற்றை திரட்டித்தருவதாக சொல்கிறது. இதற்காக டவுண்லோடு செய்யவோ அல்லது எதாவது சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவோ தேவையில்லை நிகழ்ச்சிகளை … Continue reading
கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி கூகுல் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. கூடுதல் நல்ல செய்தி இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போன் அறிமுகமாக உள்ளது. ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக கூகுல் நெக்சஸ் ஒன் போனை அறிமுகம் செய்தது. ஆரமப் பரபரப்பிற்கு பிறகு இந்த போன் பற்றி அதிக செய்திகள் இல்லை. இந்நிலையில் கூகுல் போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக … Continue reading