//
archives

வலைப்பதிவு

This category contains 7 posts

வலைப்பதிவை மறக்காமல் இருக்க ஒரு இணையதளம்.

வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மற‌ந்து போய்விடுவதுண்டு. ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான … Continue reading »

வருங்காலம் சொன்ன வலைப்பதிவாளர்

ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வசிக்கும் பிரிட்டிஷ் வலைப்பதிவாளர் எட்வர்ட் ஹியூஜ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 61 வயதாகும் ஹீயூஜ் இன்று பொருளாதார உலகால் வியப்புடனும் அதைவிட அதிக மதிப்புடனும் பார்க்கப்படுகிறார்.யூரோ பிரச்சனையால் தவிக்கும் ஐரோப்பாவும் இந்த சிக்கலால் உலக பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என கவலைப்பட்டு கொண்டிருக்கும் சர்வதேச பொருளாதார நிபுணர்களும் ஹியூஜ் சொல்லும் கருத்துக்களை ஆவலோடு கேட்டு வருகின்றனர்.சர்வெதேச நிதியம் … Continue reading »

ஒரு வலைப்பதிவாள‌ரின் லட்சியம்

எதை எழுதுவது ?எப்ப‌டி எழுதுவ‌து?என்னும் குழ‌ப்ப‌மும் ,சந்தேகமும் க‌தை எழுத‌ விரும்பும் ப‌ல‌ருக்கு ஏற்படக்கூடியது.இதே குழ‌ப்ப‌மும் ச‌ந்தேக‌மும் வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்கும் உண்டாகலாம். அதிலும் வலைப்பதிவு செய்வது என்பது மிகவும் சுலபம் என்னும் நிலையில் எதையாவது நாமும் பதிவிடலாமே என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை தான்.ஆனால் எதை பற்றி வலைபடிவிடுவது என்பது மில்லியன் டாலர் கேள்வி போல வாட்டி எடுத்து விடும். எதைப்பற்றி எப்படி வலைப்பதிவு செய்வது என்னும் கேள்விக்கு பதில் அளிப்பதை விட மிகச்சிறந்த வலைப்பதிவுகளை சுட்டிக்காட்டி இப்படி … Continue reading »

60 நொடிகளில் டார்வின்

460 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த வீடியோ படம் தொடங்குகிறது. ஆனால் காட்சிகள் மின்னல் வேகத்தில் நகர்கின்றன. யுகம் யுகமாக தாவி வந்து விடுகிறோம். 60 நொடிகளுக்கு பிறகு பார்த்தால் பரிணாம த‌த்துவம் கொஞ்சம் புரிவது போல இருக்கிற‌து. பரிணாம தத்துவத்தை ஒரு நிமிடத்தில் சொல்லமுடியுமா? டார்வினின் பரிணாம தத்துவத்தை அழகாக 60 வினாடிகளில் அடக்கி விடுகிறது இந்த விடியோ படம். உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தோடு துவங்கும் இந்த படம் பூமி தோன்றியதிலிருந்து, விலங்குகள் உருவானது, என … Continue reading »

டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு-3

நேற்றைய தொடர்ச்சி… — டார்வினுக்கு ஒன்றும் தெரியாது என்பதை அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு கூறவில்லை, உண்மையில் டார்வினே , வழி வழியாக வரும் பண்புகள்,விலங்குகள்,தாவிரங்களிடையே வேறுபாடு தோன்றுவது எப்படி, இவற்றின் வரலாறு மற்றும் தோற்றம் ப‌ற்றி தனக்கே எதுவும் தெரியாது என்றே ஒப்புக்கொள்வதாக விட்பீல்டு குறிப்பிடுகிறார்.காரணம் டார்வின் மேற்கொண்டது ஒரு முன்னோடி முயற்சி. தனக்கு முன்னே எந்த ஒரு அடித்தளமும் இல்லாத நிலையில் டார்வின் குறைந்த பட்ச தகவல்களை வைத்துக்கொண்டு உயிர்களின் ரகசியத்தை புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியதாகவும் … Continue reading »

டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு -2

(நேற்றைய தொடர்ச்சி ) டார்வின் புத்தகத்தை வலைப்பதிவு செய்ய முடிவு செய்ததுமே அதற்கான திட்டத்தை விட்பீல்டு வகுத்துக்கொண்டார்.ஒவ்வொரு அத்தியாமாக படித்துவிட்டு, அந்த அனுபவத்தை பதிவு செய்ய தீர்மானித்துக்கொண்டார்.முன்னுரை ம்ற்றும் மொத்தமுள்ள 14 அத்தியாயங்களையும் படித்து பதிவு செய்வது என்பதும், டார்வின் தினத்தன்று இதனை நிறைவு செய்வது என்றும் தீர்மானித்தார். அந்த அத்தியாயத்தில் டார்வின் சொல்லியிருப்பது என்ன, அதனை தான் புரிந்து கொண்ட விதம் போன்ற விஷயங்களை அவர் எழுதினார். நண்பர்களோடு உறையாடுவது போல,படிக்கும் போது தனக்கு தோன்றிய … Continue reading »

டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு -1

ஒரு புத்தகத்தை படிக்க சிறந்த வழி அந்த புத்தகம் பற்றி வலைப்பதிவு செய்யத்தொடங்குவது தான். அதிலும் மற்றவர்களும் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்ப ப‌ட்டால் வாசிப்பு அனுபவத்தை வலைப்பதிவு செய்வதை தவிற சிறந்த வழி வேறில்லை.குறிப்பிட்ட அந்த புத்தகம் நீண்ட நாட்களாக படிக்க நினைத்த புத்தகம் என்றால் வலைபதிவு செய்வது அதனை படித்து முடிக்க பேருதவியாக இருக்கும். இத‌ற்கான சிறந்த உதாரணமாக ஜான் விட்பீல்ட்டின் டார்வின் புத்தக வலைப்ப‌திவு முயற்ச்சியை குறிப்பிடலாம்.அறிவியல் விஷயங்கள் … Continue reading »

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 742 other followers

Top Rated

Follow

Get every new post delivered to your Inbox.

Join 742 other followers