விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திருத்தவோ முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்ககும். இணையவாசிகளின் பங்களிப்பால் விக்கிபீடியா நிகரில்லாத களஞ்சியமாக பர்நது விரிந்து வளர்ந்துள்ளது.விக்கிபீடியா தகவல்களில் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் எழுப்பட்டாலும் அதன் பயன்பாடு பற்றி எந்த சந்தேகமும் இல்லை. உலகின் முளை முடுக்கில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட விக்கிபீடியாவில் குறிப்புகளை பார்க்கலாம்.உண்மையில் விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்கப்படுவது குறிப்பிட்ட ஒரு தலைப்பு அல்லது நிகழ்வினுடைய … Continue reading
உலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உங்கள் மொழியிலேயே பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பை வைகி இணையதளம் ஏற்படுத்தி தருகிறது. காட்சி பிரியர்களுக்கு இந்த தளம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடும்.ஒன்று அனைத்து வகையான திரைப்படங்கள்,டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி படங்கள் போன்ரவற்றை இந்த தளத்தில் பார்க்கலாம் என்பது.இரண்டாவது தான் இன்னும் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்.எல்லாவற்றையும் அவரவர் மொழியிலேயே பார்த்து ரசிக்கலாம் என்பது தான் அது. உதாரணமாக … Continue reading
விக்கிபீடியா பிரியர்களுக்கு என்று ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா? விக்கிபீடியாவிலேயே தகவல்களை தேடும் வசதி இருந்தாலும் இதற்காக என்றே தனியே ஒரு தேடியந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கலுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் விக்கிவிக்ஸ் என்ற அந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிக எளிமையான வடிவமைப்பு கொண்ட இதனை விக்கி தகவல்களுக்கான கூகுல் என்று சொல்லலாம். விக்கிபீடியாவில் எதனை தேட விரும்புகிறோமோ அதனை குறிப்பிட்டால் தொடர்புடைய முடிவுகளை அழகாக பட்டியலிடுகிறது.விக்கிபீடியா மட்டும் அதன் அல்ல தோழர்களான … Continue reading
விக்கிபீடியா புதுப்பொலிவுடன் மின்னப்போகிறது.அதன் முகப்பு பக்கத்தில் துவங்கி தளத்தின் வடிவமைப்பு வரை முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.இதனை விக்கிமீடியாவே அறிவித்திருக்கிறது. விக்கிபீடியாவை நிர்வகிக்கும் அமைப்பான விக்கிபீடியாவின் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . எந்த ஒரு இணையதளமும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது அத்தனை உகந்ததல்ல .ஒரு வெற்றிகரமான இணையதளம் அவ்விதமே தொடர எப்போதும் புதிதாகவே காட்சியளிக்க வேன்டும் .இல்லையென்றால் இணையவாசிகளுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்.இதற்கு மாற்றத்தை தவிர வேறு … Continue reading
இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்பட்டது. கூகுலின் இணை நிறுவனரான சர்ஜி பிரைன் விக்கிபீடியாவை இணைய உலகின் மாபெரும் வெற்றிகளில் ஒன்று என குறிப்ப்ட்டுள்ளார். கூகுல் அளித்துள்ள நிதியுதவி விக்கிபீடியாவின் … Continue reading
வீக்கிபீடியா தெரியும்.ஜோக்கிபீடியா தெரியுமா? ஜோக்கிபிடீயாவை விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லலாம். விளையாட்டு விரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .எந்த வீரரை பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுல் மூலம் சுலபமாக தேடிக்கொள்ளலாம் தான். அதே போல பிரமலமான வீரர்கள் என்றால் விக்கிபீடியாவில் அவர்களைப்பற்றிய கட்டுரை தவறாமல் இடம்பெற்றிருக்கும்.கூடவே இணைப்புகளும் இடம்பெற்றிருக்கும். அப்படியிருக்க ஜோக்கிபீடியாவில் என்ன சிறப்பு? சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து நேரிடையாக தகவலை பெறுவதை ஸ்டிரைட் … Continue reading
ஒரு கடத்தல் செய்தியை விக்கிபீடியாவில் இருந்து மறைக்க ஒரு பிரபல செய்தி நிறுவனம் படாதபாடு பட்ட கதை இது.அதை நிறைவேற்ற முடியாமல் செய்வதற்காக பயனாளிகள் மல்லுக்கட்டிய கதையும் கூட. உலகம் அறியாமல் நடந்த இந்த ரகசிய போராட்டம் விறுவிறுப்பானது பட்டுமல்ல விக்கிபீடியாவின் பலம் மற்று பலவீனம் இரண்டையுமே உணர்த்தக்கூடியது. அந்த கதையை பார்ப்போம். அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான நியூயார்க் டைமஸ் இதழை சேர்ந்த ரோடே என்னும் நிருபர் கடந்த நவம்பர் மாதம் கடத்தப்பட்டார். ரோடே சாதாரணமான நபர் … Continue reading
விக்கிபீடியாவிற்கு கை கால் முளைத்தால் எப்படி இருக்கும்? கை, கால் என்று கூறுவது வீடியோவையும் ஆடியோவையும் தான். இவற்றோடு பகைபடத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி சகல வசதிகளோடும் விக்கிபீடியாவை பார்க்க உதவும் தளம் தான் நேவிஃபை.விக்கிபிடியா கட்டுரைகளை வாசிக்கும் அனுபவத்தை மேம்படுத்து நோக்கத்தோடு நேவிஃபை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இணையவாசிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் விக்கிபீடியாவில் எந்த தலைப்பின் கிழ் தகவலை தேடினாலும் கிடைத்துவிடும்.அநேக கட்டுரைகள் விரிவாக இருப்பதும், அவை தொடர்மான புதிய தகவல்கள் உடனுக்குடன் அந்த கட்டுரையில் … Continue reading
மக்கள் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா ஆகச்சிறந்ததா அல்லது அதிமோசமானதா என்னும் விவாதம் இன்டெர்நெட் உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. . விக்கிபீடியாவின் பலம் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதே. யார் வேண் டுமானாலும் அதில் தகவல்களை இடம்பெற வைத்து ஏற்கனவே உள்ள தகவல்களை திருத்தி அமைக்கலாம். இதன் காரணமாக அது சாமானியர் களின் பங்களிப்போடு இதுவரை உலகம் கண்டிராத மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக உருவாகியிருக்கிறது. மிகச்சிறந்த கலைக்களஞ்சியங்களை யெல்லாம் மிஞ்சக்கூடிய வகையில் மிக பிரம்மாண்டாக விக்கி பீடியா வளர்ந்திருக்கிறது. விக்கி பீடியாவின் பலவீனமும் … Continue reading