செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது. அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை … Continue reading
வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை உள்ளங்கையிலிருந்தே ஆர்டர் செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? அதேபோல நண்பர்களுக்கான பரிசுப் பொருளையும் உள்ளங்கை மூலமே வாங்கி அனுப்ப முடிந்தால் எப்படியிருக்கும்? இதற்காக கற்பனையிலெல்லாம் ஈடுபட வேண்டிய அவசியம்இல்லை. நடைமுறை வாழ்க்கையி லேயே என்ஜிபே இந்த வசதிகளை சாத்தியமாக்கி தருகிறது. அதாவது கையில் இருக்கும் செல்போன் மூலமே பொருட்களை வாங்குவதற்கான வசதியை … Continue reading
இது எல்லோருக்குமான செயலி அல்ல.ஆனால் எல்லோரும் பாரட்டக்கூடிய செயலி.எல்லோரும் பங்களிக்க கூடிய செயலி.செல்போன்களின் ஆற்றலையும் வீச்சையும் உணர்த்தக்கூடிய செயலி.பிரிந்தவர்கள் சேர உதவும் அற்புதமான செயலி. பிரிந்தவர்கள் என்றால் சொந்த நாட்டில் இருந்து பல்வேறு காரணங்களினால் அகதிகளாக்கப்பட்டவர்கள்.உயிரை காப்பாற்றிக்கொள்ள பிறநாடுகளில் தஞ்சம் அடைந்த அகதிகள் தங்கள் சொந்த பந்தங்களை தேட கைகொடுப்பதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க இணையத்தின் மூலம் முயனறு வரும் ரெப்யூஜிஸ் ரீயுனைடெட் என்னும் தன்னார்வ தகவல் தொகுப்பை ஐக்கிய நாடுகள் … Continue reading
எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி கோண்டே இருக்கின்றன. நவீன செல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும். செல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி … Continue reading
செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவது செல்லை எங்காவது மறந்து வைத்து விட்டு தேடுவது.சிலருக்கு இந்த சோதனை எப்போதாவது ஏற்படும் ,இன்னும் சிலரோ அடிக்கடி இப்படி போனை வைத்த இடம் தெரியாமல் திண்டாடுவார்கள். சோபா,மேஜை,கட்டில்,புத்தக அலமாரி,அலுவலக் பை என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த பின் கடைசியில் பேப்பருக்கு அடியில் செல்போன் சாதுவாக இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு. பொதுவாக இப்படி செல்போனை வைத்த இடம் தெரியாமல் திணறும் போது சுலபமாக செய்யக்கூடியது வேறு … Continue reading
எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவனங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன. எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம். இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு … Continue reading
ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த செல்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச செல்போன் மாநாட்டில் வோடொஃபோன் நிறுவனம் இந்தசெல்போன் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. வோடோ 150 மற்றும் வோடோ 250 ஆகிய பெயரில் இரண்டு மாதிரி போன்கள் அறிமுகாமாகியுள்ளன. இவற்றின் விலை 15 மற்றும் 20 டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால் … Continue reading
எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்று ஐபோனுக்கான செயலிகள் பற்றிய பாராட்டு புளித்துப்போகும் அளவுக்கு பழசாகிவிடாலும் கூட இந்த வாசகத்தை மெய்பிக்கும் புதிய செயலிகள் அறிமுகாகி கொண்டுதான் இருக்கின்றன.ஒவ்வொரு செயலியும் ஒருவிதத்தில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதே சிறந்த விஷயம். இந்த பதிவை எழுத தூண்டிய செயலியை பற்றி கூற வேண்டும் என்றால் செயலிகளின் பயன்பாட்டை ஒருபடி மேலே எடுத்துச்சென்றுள்ள செயலி என்று சொல்லலாம்.அல்லது ஐபோனை வைத்திருப்பவர்களின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் செயலி என்று சொல்லலாம். ஐபோனுக்கான லட்சக்கணக்கில் … Continue reading
இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்த வசதியை நீங்கள் பயன்படுத்தியும் வரலாம். ஆனால் நீங்கள் இன்டெர் நெட்டில் பேசும் போது ஒட்டுகேட்கப் படும் சாத்தியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒட்டுகேட்கப்படுகிறது என்றவு டன் நாம் என்ன அத்தனை பெரிய ஆளாக ஆகிவிட்டோமா என்றோ, நாம் பேசுவதை யார் ஒட்டுகேட்டு, என்ன செய்யப்போகிறார்கள் என்று அச்சப்படவோ தேவையில்லை. இப்படி ஒட்டுகேட்பது தனிநபரோ, அமைப்போ அல்ல, ஒரு … Continue reading
நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும். அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி எரிகஸன் அந்த தளத்தில் தெரிவித்துள்ளது.அந்த அறிவிப்பை தவிர அந்த தளத்தில் வேறூ அந்த தகவலும் இல்லை.அந்த மர்ம தளம் இணைய உலகில் ஒருவித ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது. இந்த இணையதளம் புதிய அறிமுகத்திறகான விளம்பர … Continue reading