//
archives

music

This category contains 11 posts

இசை மேதைகளின் பொன்மொழிகளை தரும் இனையதளம் .

விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள்,உங்கள் உரிமைக்காக போராடுங்கள்;விழித்து கொள்ளுங்கள்,எழுந்து நில்லுங்கள் ஒரு போதும் போராடுவதை விட்டு விடாதீர்கள்’ இந்த வாசகம் ரெகே மன்னன் பாப் மார்லேவின் பொன்மொழிகளில் ஒன்று. மார்லே வெறும் பாடகர் மட்டும் அல்ல;இசையின் மூலம் விடுதலையையும்,போராட்ட குணத்தையும் வலியுறுத்திய போராளி அவர்.இசையின் மூலம் சிந்தித்தவர் மார்லே.அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஊக்கம் தரக்கூடியது. இந்த பிரகாசமான எதிர்காலத்தில் கடந்த கால சோகத்தை நீங்கள் மறந்து விடலாம் என்று ஊக்கப்படுத்தியவர் மார்லே. இதுவும் மார்லேவின் பொன்மொழி தான்.இதே போல … Continue reading »

நீங்களூம் ரீமிக்ஸ் செய்யலாம்.

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர். ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது. இசையில் மட்டும் அல்ல கலையிலும் … Continue reading »

பாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.

இணையத்தில் பாட்டு கேட்கவும் பிடிக்கும் கேட்டு ரசிக்கும் பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பிடிக்கும் என்றால் அதற்கேற்ற சேவையாக சாங்.லி தளத்தை சொல்லலாம். சாங்.லி தளத்தி எம்பி3 வடிவிலான எந்த பாட்டை சமர்பித்தாலும் அதற்கான இணைய முகவரியை உருவாக்கி தருகிறது.இந்த முகவரியை டிவிட்டர் குறும்பதிவாக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இந்த குறும்பதிவை காணும் நண்பர்கள் அந்த இணைப்பை கிளிக் செய்து பாடலை கேட்டு மகிழலாம்.பாடலை டவுண்லோடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனால் ஒன்று பகிர்ந்து கொள்ளப்படும் … Continue reading »

ஒரு பக்க கலைஞர்கள்

ஒரே பக்கத்தில் ,அதாவது முகப்பு பக்கத்தில் எல்லா பாடகர்கள் பற்றிய விவரங்களையும் இடம்பெற வைத்தால் எப்படி இருக்கும்.ஒன்பேஜ் ஆர்டிஸ்ட் இணையதளம் இதை தான் அழகாக‌ செய்கிறது. பாப் பாடகர்களில் தொடங்கி ராக் பாடகர்கள் ,ஹிப் ஹாப் படகர்கள்,ராப் பாடகர்கள் என மேற்கத்திய இசை உலகில் எத்தனை வகையான பாடகர்கள் இருக்கின்றன‌றோ அவர்கள் அனைவர் பற்றிய தகவல்களை தாங்கிய வண்ணம் இதன் முகப்பு பக்கம் அமைந்துள்ளது. ஒரே குடையின் கீழ் எல்லா தகவல்களூம் என்று சொல்வது போல ஒரே … Continue reading »

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம். . இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது. பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது. ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை … Continue reading »

ஒலி ஏணி கேளீர்

அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டில் இருக்கும் மர ஏணியை, கால் வைக்கும்போதெல்லாம், கீதம் பாடும் சங்கீத ஏணியாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது, ஏணியை ஒரு இசைக் கருவி யாக உருவாக்கி விட்டார்கள். இந்த ஏணி வெறும் புதுமை மட்டு மல்ல, காலத்தின் கட்டாயம் என்கின்றனர். . இன்டெர்நெட் யுகத்தில் தகவல் தொடர்பு வசதி, தெளிந்த நீரோடையா கவும், … Continue reading »

இசைப்பறவை சிறகுகள் விரிக்க.

இது இசையின் பொற்காலமா என்று தெரியவில்லை. ஆனால் இசைப்பிரியர்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். டிஜிட்டல் இசையின் வருகையும், இன்டெர்நெட்டின் ஆற்றலும் இணைந்து இசைப்பிரியர்களுக்கு எண்ணற்ற கதவுகளை திறந்து விட்டிருக்கின்றன. இந்த கதவுகள் வழியே அவர்கள் விரும்பும் இசை தடையின்றி தவழ்ந்து வருகின்றன. இசைக்கான இணையதளங்களும் பாடல்களை டவுன்லோடு செய்யும் சாப்ட்வேர்களும் போதாது என்பது போல பிடித்தமானதாக இருக்கக்கூடிய பாடல்களை பரிந்துரை செய்யக்கூடிய இணைய சேவைகளும் அறிமுகமாகியிருக்கின்றன. கேட்க வாய்ப்பில்லாத ஆனால் கேட்க நேர்ந்தால் உச்சிக்குளிர்ந்து போய் விடக்கூடிய பாடல்களையும், … Continue reading »

இசைப்பட சம்பாதிப்போம்

  இசைப்பட வாழ்வது பற்றி தமிழ் கவிதை பேசுகிறது. இப்போது இசைப்பட சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இன்டெர்நெட் ஏற்படுத்தி தந்துள்ளது. இசைப் பிரியர்களுக்கு பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில், இன்டெர்நெட் பாடல்களை பகிர்ந்து கொள்ள சுலபமான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது காப்புரிமை மீறும் செயல் என்பதால் இணையவாசிகள் வழக்கு மற்றும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்ட காலமும் வெகு வேகமாக மலையேறி வருகிறது. தற்போது காப்புரிமை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பம் வழங்கும் … Continue reading »

ரசிகர்கள் பங்குச் சந்தை

இசைக்குழுக்கள் புதிய பாடல் ஆல்பங்களை வெளியிடு வதொன்றும் புதிய விஷயமல்ல. பொதுவாக இசைக்குழுக்கள் புதிய ஆல்பங்களை வெளியிடுவது, இந்த குழுவின் ரசிகர்களால்  எதிர்பார்க்கப் படும் நிகழ்வாக இருக்கும். புதிய ஆல்பம் வெளிவரும்போது கொண்டாடி மகிழ்வது என்பது அந்தக் குழுவின் ரசிகர்களுக்கு மட்டுமே இயல்பாக இருக்கும். . மிகப்பெரிய இசைக்குழுக்கள் என்றால் பத்திரிகை மற்றும் மீடியா வெளிச்சத்தால் பரபரப்பு அதிகமாகி பலரும் எதிர்பார்த்து அந்த ஆல்பம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அனைவர் மத்தியிலும் ஒரு கொண்டாட்ட மனோபாவம் ஏற்பட்டு … Continue reading »

மெட்டைச் சொல்லவா!

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்களை  பொறாமையில் புழுங்கித் தவிக்க வைக்க கூடிய இணையதளங்களும், இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன.”வாட்சட் சாங்’  (தீச்t த்ச்t ண்ணிணஞ்) நிச்சயம் அதில் ஒன்று. . மெட்டைச் சொன்னால் பாட்டைச் சொல்லி இசைப்பிரியர்களை மகிழ வைக்கும் தளமாக இது இருக்கிறது. இப்போது நீங்கள் மெட்டை முணுமுணுத்தபடி பாடல் வரிகளை தேடி ஞாபக விதிகளில் … Continue reading »

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 742 other followers

Top Rated

Follow

Get every new post delivered to your Inbox.

Join 742 other followers