//
archives

myspace

This category contains 7 posts

ஒரு கைதியின் “மைஸ்பேஸ்’

ஒரு கைதி நம்மிடம் இருந்து நகைச்சுவை உணர்வை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.அதிலும் அந்தக் கைதி மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களிடம் இருந்து அவர் வேண்டுவது பரிவும், பட்சாதாபமுமாக தான் இருக்க வேண்டும். இப்படி நினைக்கத் தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் அமெரிக்க கைதி ஒருவரோ முற்றிலும் மாறுபட்ட வேண்டு கோளை முன் வைத்திருக்கிறார். “எல்லோரும் எனக்கொரு ஜோக் அனுப்பி வையுங்கள்’ என்னும் வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இதற்காக ஒரு போட்டியையும் அறிவித்திருக்கிறார். நிச்சயமாக மரண தண்டனையை எதிர்நோக்கி … Continue reading »

வீட்டுக்கு வீடு இணையதளம்-2

குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக மாற்றி விடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லலாம்! மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள்! . வலைப்பின்னல் தளம் வந்த பிறகும் கூட குடியிருப்பவர்கள் முன்போல சக குடியிருப்புவாசிகளை கண்டும் காணாமல் தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியபடி நகர வாழ்க்கைக்குரிய இயந்திரகதியில் தான் இருக்கப் போகிறார்கள். ஆனால் வலைப்பின்னல் தளத்தில் … Continue reading »

வீட்டுக்கு வீடு இணையதளம்-1

சொந்தமாக இணையதளம் அமைத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக் கூடிய அணுகூலங்களையும் விட்டுத் தள்ளுங்கள். தனிப்பட்ட இணைய தளங்களுக்கான மவுஸ் எல்லாம் மலையேறி விட்டது. இது மைஸ்பேஸ் காலம். ஃபேஸ்புக் யுகம் அல்லவா? இப்போது இணையதளங் களை விட வலைப்பின்னல் தளங்களுக்குத்தான் மதிப்பு அதிகம். . வலைப்பின்னல் தளங்கள் சுயவெளிப்பாட்டிற்கு வழி செய்வதில் இருந்து (புதிய) நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுவது வரை கைகொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் நமக்கென வலைப்பின்னல் தளமொன்றை வைத்திருப்பதுதான் புதுமையானது. பயன்மிக்கது! … Continue reading »

கலைஞர்களின் மைஸ்பேஸ்

“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள். . ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு … Continue reading »

மைஸ்பேஸ் இருக்க பயமேன்

வலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி  என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது போல, இவற்றால் ஏற்படும் தீமைகளும், பாதிப்புகளும் பெரிதாக பேசப்படுகிறது. இவற்றுக்கு நடுவே, வலைப்பின்னல் தளங்களின் ஆதார பலத்தையும் மறந்துவிடக்கூடாது. இந்த பக்க விளைவுகள் எல்லாம்  அலட்சியப்படுத்தக் கூடிய அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வே  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். . இந்த கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விவாதத்தில் ஈடுபடாமல், வலைப் பின்னல் தளங்களினால்  உண்டாகக் கூடிய நல்ல பயன்களுக்கான அழகான … Continue reading »

எனக்கென்று ஒரு நெட்வொர்க்

மை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது பற்றித்தான் இன்டெர்நெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினோ கெய்லி கனெக்ட் டாட் காம் எனும் பெயரில் புதிய இணையதளத்தை அமைத்திருக்கிறார். . இந்த தளத்தின் மூலம் அவர் தன்னுடைய ரசிகர்களோடு முன்னை விட நெருக்கமான முறையில் தொடர்பு கொள்ள திட்டமிட்டிருக்கிறார். பாப் உலகில் எத்தனையோ இளவரசிகள் மற்றும் … Continue reading »

மைஸ்பேஸ் புத்தகம்

மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் நன்கு விளங்கும். சமூக வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் மைஸ்பேஸ், இளைஞர்களின் கூடாரம் என்று பாராட்டப்படுகிறது. இளைஞர்கள் மனதில் பட்டதை பதிவு செய்து, புதிய நண்பர்களை தேடிக்கொள்ள மைஸ்பேஸ் பேருதவியாக இருக்கிறது. அதுதான் பிரச்சனையே. மனதில் பட்டதை எல்லாம் எழுதி விடுவதால் அந்தரங்கத்தின் எல்லைக்கோடு மறைந்து, எல்லாமே பகிரங்கமாகி விடுகிறது. இதனால் விரும்பத்தகாத விளைவுகள் … Continue reading »

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 742 other followers

Top Rated

Follow

Get every new post delivered to your Inbox.

Join 742 other followers