எதிர்காலத்தில் என்னவெல் லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் உண்மைலேயே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. பளபளப்பான காகிதத்தில் அச்சாகி யிருக்கும் உயர்தர பத்திரிகையை புரட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதி லுள்ள படங்களை பார்த்து பிரமிப்ப தோடு அவற்றை மூடி வைத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த படத்தை கிளிக் செய்தீர் கள் என்றால், அதாவது அதனை தொட்டாலே போதும் அந்த படம் பேசத் தொடங்கி விடும். உதாரணத்திற்கு ஒரு … Continue reading
இடதுபுறமாக திரும்பவும், குறுகிய வளைவு, வேகத்தடை இருக்கிறது… போன்ற போக்கு வரத்து வாசகங்களை எல்லாம் முக்கிய சாலைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். வருங்காலத்தில் இந்த வாசகங் களோடு, தயவுசெய்து உங்கள் கையில் இருக்கும் கேட்ஜட்டை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் வாசகங்களையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். . இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்தக் கூடிய வகையில் பிரிட்டனில் வேல்ஸ் மாகாணத்தில் இத்த கைய எச்சரிக்கை வாசகம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொழில் … Continue reading
ஃபிளிக்கர் இணைய தளத்திற்கு சென்றால், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் (அ) குறிப்பிட்ட இடம் சார்ந்த ஆயிரமாயிரம் படங்களை பார்க்கலாம். ஒரே தலைப்பின் கீழ் உள்ள எல்லா படங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் கொஞ்சம் வேறுபாடாவது இருக்கும். இந்த வேறுபாடுகளை ரசிக்கலாம் என்றாலும், எத்தனை படங்களை தான் அடுத்தடுத்து பார்க்க கூடிய பொறுமை இருக்கும்? . நீங்கள் ஃபிளிக்கர் வாசகர் என்றால், இந்த பிரச்சனையையும், அது சார்ந்த சுவாரசியத்தையும் எதிர் கொண்டிருக்கலாம். சற்று முன்னர் தானே … Continue reading
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கொண்டு வந்து சேர்ப்பீர் கிளிக் செய்த காட்சிகளை எல்லாம்”- மகாகவி பாரதி இன்று இருந்தால் இப்படி பாடியிருக்க வாய்ப்பு உள்ளது. பாரதி பாடாமலேயே இன்று சாமான்ய புகைப்படக்காரர்கள் இதனை தான் செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால், தமிழகத்தின் பங்கு தான் அந்த அளவிற்கு ஈடுகொடுக்க கூடியதாக இல்லை. . எனவே புகைப்பட ஆர்வம் கொண்ட சாமான்ய தமிழர்கள், மாநிலத்தின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு எல்லாம் சென்று புகைப்படங்களை கிளிக் செய்து அவற்றை ஃபிளிக் கரில் … Continue reading
நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார். . ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் … Continue reading
முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன. நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை இடம் பெற வைப்பதற்காக என்று பெயருக்கு என்று ஒரு இணைய தளத்தை நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகின்றனர். அநேகமாக இவை உள்ளடக்கம் ஏதும் இல்லாமல் வெறுமையாகவே இருக்கும். இந்த வெற்று இணைய தளங்களை தேடி இணையவாசிகளை வர செய்வதற்கு சுலபமான வழி இருக்கிறது. அதுதான் குறுக்கு வழி. . கூகுல் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுவதற்காக … Continue reading
ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் கூடிய ரோபோவை ஜப்பான் நாட்டில் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ வலியை உணரக் கூடியது மட்டுமல்ல; வலியை உணர்த்தக் கூடியதும் என்பதுதான் விசேஷம். . ரோபோ ஆய்வு மற்றும் தயாரித்தல் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. ரோபோ பயன்பாட்டிலும் அந்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வு ஜப்பானில் தீவிரமாக நடைபெற்று வருவதால் புதுப்புது ரோபோக்கள் … Continue reading
ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். டொயோட்டோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வயலினை இசைத்து காட்டக்கூடிய இசை மனிதனாக இருக்கிறது. . மனிதர்களுக்கு நிகராக அதனால் வயலின் வாசிக்க முடியும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இசை மயமான ரோபோ என்று சொல்லக் கூடிய வகையில் அது அற்புதமாக வயலின் இசைக் கருவியின் ஒரு பாடலை இசைத்து காண்பித்திருக்கிறது. டோக்கியோ நகரில் … Continue reading
உங்களை ஒரு கல்லூரி மாணவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதிலும் ஜப்பானில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த கல்லூரி விடுதி அறையில் நீங்கள் அமர்ந்து படித்துக் கொண்டி ருக்கிறீர்கள். உங்கள் அருகே விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. அறைக்கு வெளிச்சத்தை தருவதற் கென்று இருக்கும் விளக்கிற்கும் இந்த விளக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை இந்த விளக்கை நீங்கள் அடிக்கடி பார்த்து கொண்டிருக்கிறீர்கள். அதன் உள்ளே நிழல் உருவம் ஒன்று அசைந்து கொண்டே இருக்கிறது. … Continue reading
லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும் வசதியான சொகுசு கார்கள். ஆனால் இனியும் அப்படியிருக்க வேண்டியதில்லை. இப்போது காரில் செல்பவர்கள் தங்களது மடி மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு பணியாற்றியபடி செல்வதை பார்ப்பது போல, வரும் காலத்தில் சைக்கிள் மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருப்பதையும் சர்வசகஜமாக பார்க்க நேரிடலாம்\ இதன் அர்த்தம் சைக்கிள் வைத்திருப்பவர்கள் எல்லாம் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள் என்பதல்ல. அதற்கு … Continue reading