பின்ட்ரெஸ்ட் செய்திகளில் அடிபடும் வேகத்தை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது.இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட்ரெஸ்ட் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. பின்ட்ரெஸ்ட்டை பயன்படுத்தும் விதம்,பின்ட்ரெஸ்ட்டின் செல்வாக்கு,பின்ட்ரெஸ்ட்டின் மார்க்கெட்டிங் தாக்கம் என்று பின்ட்ரெஸ்ட் பற்றி பலவிதமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஒரு விஷயம் உறுதி பின்ட்ரெஸ்ட் இண்டெர்நெட்டின் புதிய சென்சேஷனாக உருவாகியிருக்கிறது. பேஸ்புக்.டிவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் வருகை தரும் சமூக வலைப்பின்னல் தளமாக வளர்ச்சி பெற்றுள்ள பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார். சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்றனர்.குறிப்பாக … Continue reading
எங்கே இருக்கிறது உங்கள் வாத்து ? இந்த கேள்வியை கேட்டதுமே நீங்கள் குழப்பம் அடையாமல் லேசான ஆமோதிப்புடன் புன்னகை செய்தீர்கள் என்றால் இதே பெயரிலான இணையதளத்தை நீங்கள் அறிந்திருப்பதாக புரிந்து கொள்ளலாம். ஆம் வேர்ஸ் யுவர் டக் பீன் என்னும் பெயரில் ஒரு இணையதளம் இருக்கிறது.கொஞ்சம் சுவாரஸ்யமான இணையதளம்!வாத்து புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான தளம். புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் தளங்கள் என்றதுமே ஃபிளிக்கர் உள்ளிட்ட பல தளங்கள் நினைவுக்கு வரலாம்.ஆனால் இதென்ன வாத்து படங்களை பகிர்ந்து கொள்வதற்கான … Continue reading
வலைப்பதிவு செய்வதை ஊதியம் இல்லாத வேலை போலவே மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறேன்.இணையத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் டொழில்நுட்ப அற்புதங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த வலைப்பதிவிற்கான தூண்டுதல். இந்த பதிவுகள் பலரால் படிக்கப்படுகிறது.பலரால் பகிர்ந்து கொள்ளவும் படுகிறது.உரிய இணைப்போடு பகிர்ந்து கொள்ளும் நல்லிதயங்களுக்கு நன்றி.எனது பதிவுகள் திருடப்படவும் செய்கின்றன.திருட்டு என்ன்னும் வார்த்தையை பயன்படுத்த தயக்கமாக தான் இருக்கிறது என்றாலும் அப்படியெ நகலெடுக்கப்படுவது போல பதிவுகள் வேறு தளங்களில் பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் … Continue reading
குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் என்ற திருவிளையாடல் தருமியின் புலம்பலை போல,கிண்டல் அடித்தே புகழ் பெற்று விடும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர்.அமெரிக்காவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இப்படி தான் கிண்டல் மூலம் புகழ் வெளிச்சத்தில் வந்திருக்கின்றனர்.இணைய உலகம் முழுவதும் தங்களை பற்றியே பேச வைத்திருக்கின்றனர். ஆடம் ஸ்மித்,ஸ்டேசி லேம்ப் என்னும் அந்த இரண்டு இளைஞர்களும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை கிண்டல் செய்து இணைய நட்சத்திரங்களாக உருவாகி இருக்கின்றனர்.ஆனால் அவர்களின் கிண்டல் … Continue reading
இந்த தளத்தை பற்றி அறிவதற்கு முன்பாக உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் ரீவைன்டு செய்து கொள்ளுங்கள்.வாழ்கையில் யாருக்கு நீங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள்.அதாவது யார் உங்கள் மீது அதிக தாக்கம் செலுத்தியுள்ளனர் என்று நினைத்து பாருங்கள். யாரை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள்,உயர்வாக கருதுகிறீர்கள் என்றெல்லாம் யோசித்து பார்த்து கொள்ளுங்கள். காரணம் இந்த தளம் உங்கள் வாழ்வில் உள்ள இத்தகைய நபர்கள் மீதான உங்கள் அன்பை பகிர்ந்து கொள்வதற்கானது. நீங்கள் யாரை மிகவும் நேசிக்கிறீர்களோ அவர்களிடம் அதனை … Continue reading
உமா மகேஸ்வரி கொலை – ஆசிரியர் சமூகத்தையே கொஞ்சம் ஆடிப்போக வைத்தது. இதுவரை மாணவர்கள்தான் ஆசிரியர்களை நினைத்து பயந்திருக்கின்றனர். ஆனால், மாணவனின் பழி வாங்கும் வெறிக்கு உமா மகேஸ்வரி பலியான சம்பவத்தை அடுத்து ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பற்றிய பயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. மாணவர்களை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்னும் தடுமாற்றம் ஆசிரியர்களை ஆட்டிப்படைக்க துவங்கியிருக்கிறது. நல்வழிப்படுத்த கண்டிக்கலாமா அல்லது நமக்கேன் வம்பு என விட்டுவிடலாமா என்றெல்லாம் யோசிக்கும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். … Continue reading
தகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது?அதாவது குறிப்பிட்ட செய்தி இணையத்தில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்காக என்றே புதிய தேடியந்திர சேவை ஒன்று உதயமாகியுள்ளது. கவனிக்க, புதிய தேடியந்திரம் அல்ல;புதிய தேடியந்திர சேவை!அதாவது தேடியந்திரமான கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேவை. கூகுல் சார்ந்த சின்ன சின்ன தேடல் மேம்பாடுகளை வழங்கும் … Continue reading
முடிவெடுக்க முடியாமல் குழம்பித்தவிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி,அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாமே என்று நினைத்தாலும் சரி நண்பர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்க உதவும் இணையதளங்கள் இருக்கின்றன. பன்ல்.இட் இணையதளமும் இந்த வகையான ஆலோசனை கேட்பு இணையதளம் தான்.ஆனால் மற்ற ஆலோசனை கேட்பு தளங்களை விட மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்த தளத்தின் மூலம் ஆலோசனை கேட்க முதலில் உறுப்பினராக வேண்டும்.உறுப்பினராவது மிகவும் எளிதானது தான். உறுப்பினரான பின் அலோசனை கேட்க விண்ணப்ப படிவம் போன்ற ஒரு … Continue reading
இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்? இலக்கிய டிவியில் இலக்கிய கூட்டங்களின் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம்,எழுத்தாளர்களின் நேர்முகத்தை கேட்டு மகிழலாம்,வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பை பார்க்கலாம் என்றெல்லாம் இலக்கிய பிரியர்கள் நினைத்து மகிழலாம்.கூடவே இதெல்லாம் நடக்கிற கதையா என்றும் ஆதங்கப்படலாம். மெகா சீரியல்கள் தவிர வேறுவிதமான நிகழ்ச்சிகள் டிஆர்பி க்கு உதவாது என்று கருதப்படும் நிலையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்று தொலைக்காட்சி மட்டும் அல்ல நம்மூர் டிவிகளில் இலக்கிய … Continue reading
கல்லூரி மாணவர்கள் கூட பக்கத்தில் இருப்பவர்களோடு பேசாமால் இருந்துவிட முடியும்,ஆனால் அலுவலக்த்தில் வேலை பார்ப்பவர்களால் பேஸ்புக்கில் நண்பர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்று பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?அதிலும் வேலையில் மூழ்கி உடலும் ,மனதும் களைத்து போன நிலையில் ஒரு மாறுதல் வேண்டி மனது அலைபாயும் போது பேஸ்புக்கில் உலாவினால் சுகமாகதானே இருக்கும்! ஆனால் என்ன செய்வது அலுவலகத்தில் சுதந்திரமாக பேஸ்புக்கில் உலாவும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே!பல நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தையே தடை செய்திருக்கும் கொடுமைக்கார நிர்வாகங்களாக இருக்கின்றன … Continue reading