செல்போனும், வாய்ஸ்மெயிலும் இணைந்த புதுமையான சேவை அன் வயர்டுனேஷன் .
இந்த சேவை உண்மையிலேயே புதுமையானது.
அதிலும் கேட்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது மிகவும் இனிமையானது. படிப்பதை விட கேட்டல் நன்று என்று நினைப்பவர்கள் இதனை போற்றிப் புகழ்வார்கள்.
எப்படி என்று கேட்கிறிர்களா?
இன்டெர்நெட் உலகில் பாட்காஸ்டிங் சேவை பிரபலமாக இருக்கிறது அல்லவா?
இதுவும் ஒரு வகையான பாட்காஸ்டிங் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இணைய தளம் மற்றும் பிளாக் தளங்களில் நீங்கள் படிக்க விரும்பும் தகவல்களை இது ஒலிப்பதிவாக மாற்றி [...]
‘இணைய தளம்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
25 மார்
பதிவுகளை” கேட்டு” ரசிக்க ஒரு வழி
22 Feb
ஒலி நூலகம் தெரியுமா?
நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?
அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம்.
சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர்.
நுலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் [...]
10 Jan
‘ஒய் 10 கே’ தெரியுமா?
ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் பூதம் இது! ‘ஒய் 10 கே’வை பார்ப்பதற்கு முன் ‘ஒய் 2 கே’ வரலாற்றில் சில சுவாரசிய மான விஷயங்களை பார்த்துவிடலாம்.
.
‘ஒய் 2 கே’ என்றால் இயர் 2000 பிராப்ளம் என்று பொருள். இயரை குறிக்க ‘ஒய்’ என்றும், 2000-த்தை குறிக்க 2 கே என்ற கிரேக்க சொல்லை [...]
29 Dec
வாழைப்பழம் காட்டிய வழி
கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதளத்தை சொல்லலாம்.
.
வாழைப்பழம்தான் அந்த இணைய தளத்தின் அடையாளம். அதன் பெயரில் இருப்பதும் வாழைப்பழம் தான். அதன் வெற்றிக்கு காரணம் அதுதான்.
‘வாழைப்பழ பெயர்’ (banana name.com) அதுதான் தளத்தின் முகவரி. அரிசி மீது பெயர் எழுதி தருவதாக சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதுபோலவே இந்த தளத்தில் வாழைப்பழத்தின் மீது பெயர் எழுதித் தருவதாக சொல்கிறது. இணையதளங்கள் மற்றும் [...]
22 Dec
ஒரு தளம் பல வண்ணம்
ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டாலும் இதற்கான மிகச்சிறந்த உதாரணமாக எளிமையே வடிவான முகப்பு பக்கத்தை தேடியந்திர முதல்வனான கூகுல் பெற்றிருந்தாலும், அநேக இணைய தளங்கள் வண்ணப் படங்கள், வரைபடங்கள், வீடியோ வசதி என ஏராளமான அம்சங்களை கொண்ட தாகவே உருவாக்கப்படுகின்றன.
.
சில தளங்கள் கிராபிக்ஸ் மயமாகவும் அமைகின்றன. [...]
22 Dec
கலைஞர்களின் மைஸ்பேஸ்
“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள்.
.
ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு இல்லை. ஒரே [...]
12 Dec
சாட்டையடி இணைய தளம்
ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) தளம், என்றெல்லாம் அந்த தளத்தை வர்ணிக்கலாம். எப்படி குறிப்பிட்டாலும் அந்த தளம் ஆகச் சிறந்த தளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.
.
ஒற்றை குறிக்கோளோடு ஒரே ஒரு பக்கம் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ள அந்த இணைய தளத்தில் அதிக விஷயங்கள் கிடையாது. ஒரே ஒரு நீண்ட விளக்கம் மட்டும் தான்!
அந்த விளக்கத்தை [...]
5 Dec
பள்ளிக்கு திரும்ப வைப்போம்!
பள்ளிக்குத் திரும்புதல்’ என்னும் தலைப்பு நன்றாக இருக்கிறது அல்லவா! இது ஏதோ நாவல் (அ) புதிய கவிதைத் தொகுதியின் தலைப்பு அல்ல! பாராட்டத்தக்க ஒரு இணைய தளத்தின் தலைப்பு இது!
.
பேக்டூ ஸ்கூல் (back 2 school.in) என்னும் இந்த இணைய தளத்தின் முகவரியை பலவிதங்களில் தமிழ்படுத்தலாம். “மீண்டும் பள்ளிக்கு’ அவற்றில் ஒன்று. இதைவிட பள்ளிக்கு திரும்புதல் என்பது கவித்துவமான ஒன்றாக இருப்பதோடு, இணைய தளத்தின் நோக்கத்திற்கும் பொறுத்தமாக இருக்கிறது.
பள்ளி படிப்பை பாதியில் கைவிட நேரும், [...]
3 Dec
எஸ்.எம்.எஸ். நிபுணர்கள்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய மூதாதையர்கள் தீயை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இருளில் எப்படி அவதிப்பட்டனரோ, இதே போலத்தான் நாம் இன்று நகர காட்டில் திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?
நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ, புதிய இணைய தளம் ஒன்று இப்படி தான் நினைக்கிறது.
அது மட்டுமல்ல நகர காட்டில் உங்களது திண்டாட்டத்தை போக்குவதற்கான சேவையையும் அறிமுகம் செய்வதாக அந்த தளம் கூறுகிறது. டெக்ஸ்பர்ட்ஸ் டாட்காம் என்பது அந்த தளத்தின் முகவரி.
டெக்ஸ்பர்ட்ஸ் என்பது புதுவகையான வார்த்தை [...]
2 Dec
உலக சாதனை உங்கள் கையில்…
உலக சாதனைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, உலக சாதனையையே உங்களால் தீர்மானிக்க முடியும் என்று சொன் னால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அற்புதமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் உறுப்பினராகி உலக சாதனைகளை நீங்களே முடிவு செய்யலாம்.
உலக சாதனை என்றவுடன் கின்னஸ் புத்தகம்தான் நினை வுக்கு வரும். கின்னஸ் புத்தகம் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனைகளை அங்கீகரித்து அது பற்றி விவரங்களை வெளியிட்டு வருகிறது
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது அத்தனை [...]
அண்மைய மறுமொழிகள்