கேளுங்கள்!

இந்த வலைப்பதிவை மேலும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக உங்கள் இணைய தேவை மற்றும் எதிர்பார்ப்பை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
இது வரை நான் தேர்வு செய்து எழுதியதை நீங்கள் படித்து வந்திருக்கிறீர்கள் .இந்த ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. இணையத்தில் இருந்து பகிர்ந்து கொள்ள தினமும் கை கொள்ளாத விஷயங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.இருப்பினும் எனது தேர்வை தாண்டி உங்கள் குறிப்பிட்ட தேவைக்காக எழுதுவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.நான் தொடாடத விஷயங்கள் இருக்கின்றன.நான் தவிர்த்த விஷ்யங்களும் இருக்கின்றன.

நான் எழுத வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் தலைப்புகள் அல்லது விஷ‌யங்கள் இருக்கிறதா? அவற்றை தெரிவிக்கவும்.அவை தொடர்பான தகவலகளை திரட்டி உங்களுக்கான பதிவாக எழுதுகிறேன். குறிப்பிட்ட நோக்கிலான பதிவுகளை நீங்கள் எதிர்பார்த்தாலும் தெரிவிக்கவும்.

இணையம் மற்றும் தொழில்நுட்பம சார்ந்து உங்கள் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தெரிவியுங்கள்.அவை இந்த வலைப்பதிவை மேலும் மெருக்கூட்ட உதவும் என நினைக்கிறேன்.

இணையத்தில் எனக்கிருக்கும் ஆர்வமும்,பத்திரிகையாளனாக எனது எனுபவமும் எந்த தலைப்பு குறித்தும் தகவல்கள் தேடி ஆய்வு செய்து சுவாரஸ்யமாக எழுத முடியும் என நம்புகிறேன்.

எனவே உங்கள் விருப்பத்தை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கவும். இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தே உங்கள் விருப்பம் இருக்கட்டும்.வேன்டுமானால் அறிவியலை சேர்த்து கொள்ளுங்கள்.விண்டோஸ் இயங்கு தளத்தில் கோப்புகளை நிறுவவது எப்படி என்றோ அல்லது எக்செல் கோப்புகளில் புதிய அட்டவனையை சேர்ப்பது எப்படி போன்ற செய்லவிளக்க கேள்விகளுக்கு பதில் சொல்ல என்னால் முடியும் என நினைக்கவில்லை.ஆனால் இத்தகைய கேள்விகளையும் எழுப்புங்கள். இதற்கு பதில் அளிக்க கூடிய பதிவர்களை விருந்தினராக அழைத்து எழுத சொல்கிறேன்.

இது உங்கள் வலைப்பதிவு. உங்கள் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இதை மேலும் செழுமையாக்கட்டும்.இந்த வலைப்பதிவு மேலும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

அன்புடன் சிம்மன்.

76 responses to “கேளுங்கள்!

 1. பிங்குபாக்: உலகின் அழகான இணையதளம். | Cybersimman's Blog·

 2. அன்பின் சிம்மன் – தற்போதைக்கு தேவை ஒன்றுமில்லை- சாதாரணமான தளங்களே என் தேவையைப் பூர்த்தி செய்து விடுகின்றன. தேவைப்படின் போது நிச்சயம் தொடர்பு கொள்கிறேன். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. அன்புடையீர்
  வணக்கம். உங்கள் சிந்தனையும் செயலும் ஏற்றமிக்கது. நீவிர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்குப் புகழ் சேர்க்க வேண்டிக் கதிர்காமத்தான் பதந் தினம் தொழுவேன்
  அன்புடன்
  நந்திதா

 4. வணக்கம்
  வம்மின் உலகீர் வாழ்த்துமின் செந்தமிழ்ச்
  சிம்மனை ஏத்துமின் செயல்திறம் காண்மின்
  நம்மினம் வேண்டுதல் நொடியில் தந்திடும்
  செம்மலைப் போற்றுதல் செய்தல்நம் கடனே
  அன்புடன்
  நந்திதா

 5. பிறர் தேவை எதுவெனறிந்து சேவை செய்ய கேட்கும் அன்பரே நீர் தேர்ந்தெடுத்தெழுதிய அத்தனையும் நன்றே. மிண்னஞ்சல் மட்டுமே கொடுத்து மறுமொழியிடுவது சாத்தியமாகாதோ?

  • நன்றி நண்பரே. பின்னூட்டம் இடும் முறையை மாற்ற முயல்கிறேன். இந்த யோசனைக்கு நன்றி.இது வேர்ட்பிரசில் உள்ள சங்கடம். மாற்று ,மருந்து தேடுகிறேன்.

   அன்புடன் சிம்மன்

  • தமிழ் புத்தகங்களை புதுமைபித்தனில் இருந்து துவங்கலாம். சுந்தரநாமசமி, தி.ஜானகிராம, அசோகமிதரன், வண்னதாசன்,வண்னநிலவன்,பூமணி,அம்பை,கி.ராஜநாராயணன் என்று பெரிய பட்டியலே கொடுக்கலாம். இவை இலக்கியம் சார்ந்தவை. நீங்கள் கேட்பது எந்த வகை புத்தகங்கள், தெளிவுபடுத்தவும் .

   நல்ல தமிழ் நாவல்களை அறிய சிலிக்கான ஷெல்ப் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் வலைப்பதிவு உதவியாக இருக்கும்.

   அன்புடன் சிம்மன்

 6. மிக நல்ல பணி; தொடருங்கள் !பி.டி.எப், பேஜ்மேக்கரி லிருந்து வேர்டு க்கு மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிவித்து உதவ அன்புடன் வேண்டுகிறேன். நன்றி-பூந்துறயான்

 7. வணக்கம் நண்பரே. தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. வாழ்த்துக்கள். எமக்கு நீண்ட நாள் சந்தேகம், எப்படி பி டி எப் பைலை நடு நடுவே பக்கக் கோடுகள் இல்லாமல் இணைய பக்கம் போன்று வர வைப்பது?

 8. வணக்கம்
  நான் என்னுடைய சொந்தச் செலவில் எங்கள் கிராமத்தில் ஒரு சிறு பள்ளி நடத்தி வருகிறேன். சின்னஞ் சிறார்களுக்கு தர்மத்தின் அவசியம் பற்றியும் நீதி ஒழுக்கம் பற்றியும் சிறு சிறு கதைகள் மூலம் விளக்க விரும்புகிறேன். வேறு வியாபார நோக்கம் இல்லை
  அன்புடன்
  நந்திதா

 9. Hi Simman,

  Its very interesting site. I appreciate you for your wonderful article. I’ve questions.If you can please write a article about this.
  Question is:
  Why freeware? Let say, Microsoft is developing Ms office and they are selling in worldwide, So they are getting revenue on that. It would help the organization to provide a salary for their employees. But we can get some Software like ‘open office’ , ‘Ubuntu'(Freeware). No need to pay for this. The Question is, the Org who has developing freeware how they are getting money and how they will provide a salary to their employees? Most important why they are developing freeware,Instead of creating freeware the can develop and sell it .
  Thanks in advance

  • Hi, Velliangiri, Thanks for Nice comment. You have asked a important question. It needs a detailed reply. But on thing is freeware is more of a philosophy. Now it also makes economic sense. There is model called freemium. Give me some time and i will write about. Thanks for asking .

   simman

 10. hi Simman,

  Congrats for your Blog’s Success.

  I m using PC with Reliance datacard for Internet and i bought New Android Phone (Micromax A111) and My Doubt is how to get internet from PC to my mobile over USB Datacable or Blutooth? i searched it in Internet but there Mentioned (Reverse Tethering) and no idea about this Concept and heard about this technology used for Rooted Android Mobile Devices so i dont know my Device is in this category.

  So Please give any idea or Suggestion to get PC internet to mobile
  Only via USB Datacable or Bluetooth.

  Thank you
  Keerthi Velu

 11. hi Simman,

  given first link “this app requires ROOTED phone”

  and Second one really intrested as i expected but it couldnt detect my Mobile in that PC Software however i did as per step by step.
  please try to solve this issue or suggest any other way to do

  thanks
  Keerthi Velu

 12. தமிழ் புத்தகங்களை Pdf வடிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய ஏதேனும் வலை உள்ளதா ? இருந்தால் மறுமொழி செய்யவும்.

 13. வணக்கம்
  தமிழில் உள்ள pdf கோப்புக்களை word க்கு மாற்ற ஏதாவது மென் பொருள் உள்ளனவா? அதே போன்று தழில் கோப்புகளை pdf ஆக மாற்றவு உள்ளனவா?
  இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 14. வேர்ட்ப்ரஸ் தளத்தை பற்றிய சந்தேகம், நான் Wordprss.com இல் ஒரு Blog உருவாக்கியுள்ளேன். அதில் blogs archive பகுதியை வருட அடிப்படை, மாத அடிப்படை என்று பிரிப்பது எவ்வாறு? அதிக பதிவுகள் வருவதால் இது நீண்டு செல்கிறது..

  • தள நிர்வாக பகுதியில் உள்ள விட்ஜெட் பகுதியில் மாத அடிப்படைக்கான விட்ஜெட் தனியே இருக்கும்.பயன்படுத்தி பார்த்து சொல்லவும். அநேகமாக எல்லா வசதிகளும் விடெஜ்ட் பகுதியிலேயே இருக்கும்.

   அன்புடன் சிம்மன்

  • நண்பருக்கு எளிதான கேள்வி. ஆனால் இதற்கு எளிதான பதில் இல்லை. இணையம் மூலம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இப்படி எல்லாம் சம்பாதிக்கலாம் என சுட்டிக்காட்டக்கூடிய எளிதான பதில் இல்லை,

   உண்மை என்ன என்றால் , நிஜ உலகில் சம்பாதிக்க பொருந்தும் பொது விதிகள் எல்லாம் இணையத்திற்கும் பொருந்தும். இணையத்தின் கூடுதல் வீச்சும், வலைப்பின்னல் ஆற்றலும் அதன் கூடுதல் பலம். இணையத்தில் ஒரு முயற்சியை துவங்குவதற்கான செலவும் குறைவானது.

   மற்றபடி தங்கள் கேள்விக்கான பதில் , உங்கள் நோக்கம், திறமை,அனுபவம் சார்ந்தது, உங்களால என்ன முடியும் , என குறிப்பிட்டால் அதற்கு ஏற்ப வழிகளை சொல்ல முயல்கிறேன்.

   ஆட் சென்ன்ஸ் மூலம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை.

   மின் வணிகத்தில் அதிகம் வாய்ப்புள்ளது. எதிர் காலத்தில் மேலும் வாய்ப்பு பெருகும். உங்கள் அனுபவத்திற்கு ஏற்ப முயன்று பார்க்கலாம்.

   பேஸ்புக்கை கூட தொழில் நோக்கில் பயன்பட்டுத்தலாம்.

   அன்புடன் சிம்மன்

 15. சிம்மன் brother na Engineerring (EEE) mudichu foreign epadi pokurathu online epadi search panrathu ,, google search pani regular …shine ,monster, timejobs, naukri, quikr ,olx , yelathulaum resume upload panu pathukuju iruken ,, paren ,,,iithu illama epadi search panrathu

  • முதலில் லின்க்டுஇன் பயன்படுத்தி பார்க்கவும். ஏதேனும் புரோகிராமிங் மொழி கற்க முயலவும். எந்த மாதிரியான தகுதிகள் கேட்கப்படுகின்றன என்று பார்த்து அதில் உங்களுக்கு உள்ளதை பட்டை தீட்டிக்கொள்ளவும்.
   ஆல் தி பெஸ்ட்.

 16. Dear Sir,
  I have a Dell Vostro 2520 laptop with ubuntu 12.04LTS operating system in it. Suddenly from yesterday, the ubuntu software center, update manager and the synaptic package manager are not opening and my screen shows a red icon with minus symbol in it. When I click it, it shows this error message –

  An error occured, please run Package Manager from the right-click menu or apt-get in a terminal to see what is wrong. The error message was: ‘Error: Opening the cache (E:Encountered a section with no Package: header, E:Problem with Mergelist /var/lib/apt/lists/archive.ubuntu.com_ubuntu_dists_precise-updates_main_i18n_Translation-en, E:The package lists or status file could not be parsed or opened.)’. This usually means that your installed packages have unmet dependencies.

  I don’t know what this means. I am new to ubuntu. Please help me fix this.

 17. வணக்கம். பொதுவாகவே தாங்கள் பயனுள்ள இணையத் தகவல்களை எழுதி வருகிறீர்கள். இது தவிர, இணையத் தகவல்களில் எப்படியெப்படி எல்லாம் தவறு செய்கிறார்கள் என்பது குறித்தும் எழுதினால், சரியானதொரு விழிப்பறிவுணர்வுக்கு ஏதுவாக இருக்கும்.

  உதாரணத்திற்கு நான் வெளியிட்டுள்ள இக்கட்டுரை போன்ற தகவல்கள். தவறுகளுக்கு வழிவகுக்கும் தகவல் தொழில் நுட்பம்! http://www.neethiyaithedy.org/?p=1218

  • வணக்கம்.

   நல்ல யோசனை. பொதுவாக தொழில்நுப்டத்தின் எதிர்ம்றை பலன் பற்றி நான் கவனம் செலுத்துவதில்லை,’
   ஆனல் விழ்ப்புணர்வு நோக்கில் எழுதலாம் என்பது நல்ல யோசனை . கவனத்தில் கொள்கிறேன்.
   தங்கள் கட்டுரை வாசித்தேன். நன்றாக இருக்கிறது. ஹரிபிரசாத் பற்றிய குறிப்பு முக்கியமானது.
   அன்புடன் சிம்மன்

 18. பெருந்தகையீர்
  வணக்கம்.
  என்னிடம் windows 7 origina c.d உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் அந்த சி டி யின் key காணாமல் போய் விட்டது. மறுபடியும் O.S install செய்ய வேண்டி உள்ளது. அந்த சி டி யின் key யைக் கண்டு பிடிக்க ஏதாவது வழி உள்ளதா?
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 19. பெருமதிப்புக்குரியீர்
  வணக்கம். மீண்டும் தங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறேன். மன்னிக்கவும்.
  என்னுடைய கணியில் நெருப்பு நரி அல்லது கூகுள் க்ரோம் இன்ஸ்டல் செய்துள்ளேன். ஆனால் உலவி தோன்றியவுடன் மறந்து விடுகிறது. என்ன செய்வது. தயை கூர்ந்து உதவ முடியுமா
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s