ஓவியங்களுக்கான ‘இபே’

பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, முதலீடு நோக்கில் தங்கத்தின் மீதான மவுஸ் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். தங்கம் மட்டும் அல்ல ஓவியம் உள்ளிட்ட கலைப்பொருட்களுக்கும் முதலீடு நோக்கி மதிப்பு ஏற்பட் டிருப்பதாக சொல்லப்படுகிறது.

.

இன்றைய  தேதியில் இந்திய ஓவியர்களின் படைப்புகளை வாங்கிப்போடுவது, சரியான முதலீடாக இருக்கும் என்றும் ஆலோசனை சொல்கின்றனர். வரும் ஆண்டுகளில் ஓவியங்களின் மதிப்பு பல மடங்கு உயரும் என்ற ஆருடமும் சொல்லப்படுகிறது.

இந்த பின்னணியில் ஓவியங்களை சுலபமாக வாங்கி விற்பதற்கான, இணைய தளத்தை அறிமுகம் செய்து கொள்வது மிகவும் பொறுத்தமாக இருக்கும். ‘இந்தியன் ஆர்ட் கலக்டர்ஸ்’ (டிணஞீடிச்ண ச்ணூt ஞிணிடூடூஞுஞிtணிணூண்.ஞிணிட்)என்றும் முகவரியிலான அந்த தளத்தை இந்திய ஓவியங்களுக்கான ‘இபே’ என்றும் வர்ணிக்கலாம்.

சர்வதேச  அளவில் பார்க்கும் போது, இணைய தளங்களை ஓவியர்கள் மற்றும் ஓவிய ஆர்வலர்களுக்கு இடையிலான பாலமாக பயன் படுத்துவது பிரபலமாகவே  இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் கொஞ்சம் தாமதமாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.  இதனை மீறி இந்தியன் ஆர்ட் கலக்டர்ஸ், இணையதளம் சிறப்பானதாகவே இருக்கிறது.

ஓவியங்களை விற்பனை செய்யும் கலைக்கூடங்கள் சார்பில் இன்டெர்நெட் மூலமும் ஓவியங்கள் விற்கப்பட்டு வருகின்றன என்றாலும், இந்த தனிப்பட்ட தளங்களை எல்லாம்விட, இந்தியன் ஆர்ட் கலெக்டர்ஸ் சிறந்ததாக இருக்கிறது. காரணம், ஓவியர்கள் மற்றும் ஓவிய ஆர்வலர்கள் இருதரப்பினருக்குமே இந்த தளம் ஏற்படுத்தி தரும் வாய்ப்புகள் தான்!

அடிப்படையில் பார்த்தால் இந்த தளம் ஓவிய ஆர்வலர்கள் தங்கள் வசம் உள்ள ஓவியங்களை விற்பதற்கானதுதான்! ஓவியங்களுக்கு நாளுக்கு நாள் மதிப்பு கூடிக்கொண்டிருந்தாலும் தற்போது ஓவிய ஆர்வலர்கள் தங்கள் வசம் உள்ள ஓவியங்களை விற்கும்போது, அவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை. (முதலீட்டு நோக்கில் ஓவியங்களை அணுகும்போது லாபம் பற்றி பேசுவதைத் தவிர வேறு வழியில்லை).

காரணம், கலைக்கூடங்கள் 30 சதவீதம் வரை கமிஷன் எடுத்துக்கொள்வதால் லாபத்தின் பெரும் பகுதி கமிஷனாகவே போய்விடும். ஆனால் இந்த தளத்தில் கமிஷன் இல்லாமல் விற்பனை செய்யலாம். அந்த குறிப்பிட்ட ஓவியம் தளத்தில் விற்பனைக்கு என பட்டியலிடப்பட்டிருக்கும். யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கின்றனரோ, அவருக்கு ஓவியம் அனுப்பி வைக்கப்படும். வாங்குபவர், ஓவியத்திற்கான விலை விற்பவரிடமோ, ஓவியரிடமோ தர வேண்டியதில்லை. இந்த தளத்திற்கு அனுப்பி வைத்தால் போதும். அந்த விவரம் மட்டும் சம்பந்தப் பட்டவருக்கு உடனே தெரிவிக்கப்படும்.

வாங்கியவர் தனக்கு ஓவியம் கிடைத்து விட்டது. அது நல்ல நிலையில் இருக்கிறது என்று தெரிவித்ததுமே ஓவியருக்கு பணம் அனுப்பி வைக்கப்படும். குறைந்த கமிஷனாக 15 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும்.

ஓவிய ஆர்வலர்கள் விற்க முற்படும்போது அவர்களுக்கு  கூடுதலான சுவாரஸ்யமான வசதிகள் உண்டு. அந்த ஓவியம் பற்றி மற்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் மற்ற ஆர்வலர்களுடன் தொடர்பு கொண்டு ஓவியம் சார்ந்த நட்பையும் வளர்த்துக்கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள ஓவியர்களின் படைப்புகள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. உலகின் எந்த மூலையில்  உள்ள ஓவிய ரசிகரும் இந்த தளத்தில் உள்ள ஓவியங்களை வாங்கிக்கொள்ளலாம். அக இந்திய ஓவியர்களுக்கு உலகளாவிய விற்பனை வாய்ப்பும் இதன் மூலம் சாத்தியமாகிறது.

இந்த தளத்தின் மூலம் ஓவியங்களை விற்பதும் வாங்குவதும் சுலபமானது மட்டும் அல்ல, சுவாரசியமானதும் கூட! ஓவிய ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பொழுதை கழிக்க போதுமான அம்சங்களை இந்த தளம் கொண்டிருக்கிறது.

இடம் பெற்றுள்ள ஓவியர்கள் அகர வரிசைப்படி தொடர்ந்து அவர்களின் படைப்புகளை பார்வையிடலாம். இவர்களில் ஒரு ஓவியர்களை மாதந்தோறும் தேர்வு செய்து முகப்பு பக்கத்தில் அவர்களின் ஓவியங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இதைத்தவிர ஓவிய கண்காட்சி பற்றிய விவரங்களும் ஓவியம் தொடர்பான  இதர நிகழ்வுகள் பற்றிய தகவல்களும் கூட இடம் பெற்றுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் ஓவிய ஆர்வலர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் இந்த தளத்தில் கிடைத்துவிடும்.

இந்த தளத்தின் மூலம் மாதந்தோறும் 40க்கும் மேற்பட்ட ஓவியங்கள் விற்பனை ஆகிறது. குறிப்பாக இளம் ஓவியர்களுக்கு ஷாப்பிங்காக அமைந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s