திருமணத்துக்கான சாப்ட்வேர்

திரைப்பட விழாவுக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பற்றி அறியும்போது திருமணத்துக்காகவும் ஒரு சாப்ட்வேர் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை விரிகிறது. தமிழர்களின் எதிர்காலத் தேவையில் திருமணத்துக்கான சாப்ட்வேரையும் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் சாப்ட்வேரை உருவாக்கக் கூடிய தனி நபர் அல்லது குழு டாட் காம் கோடீஸ்வரராக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.
இத்தகைய சாப்ட்வேருக்கான சமூக தேவையும் இருக்கிறது. கல்யாணம் செய்து பார், வீட்டை கட்டிப்பார் என்று நம் முன்னோர்கள் சொன்னதிலிருந்து திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்வதில் உள்ள சிரமங்களை எளிதாக புரிந்துகொள்ளலாம்.

திருமண வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு உற்றார்களும், உறவினர்களும் செய்து முடித்த காலம் ஒன்று உண்டு. இப்போது அத்தகைய நபர்கள் அருகி வருவதால், திருமண வேலைகளை ஒப்பந்ததாரர்களிடம் விட்டு விட்டு சாவகாசமாக இருக்கின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக இந்த பொறுப்புகள் அனைத்தையும் சாப்ட் வேரிடம் விட்டு விட்டு கவலையின்றி இருக்கலாம். எப்படி என்று புரிந்து கொள்ள டேட்டா கால் பக்கம் போவோம்.
டேட்டா கால் திரைப்பட விழாக் களை நிர்வகிப்பதற்காக என்றே உரு வாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் நிபுணரான பவல் கலேண்டா இதனை உருவாக்கியுள்ளார்.

கலெண்டா சுவாரசியமான பின்னணி யைக் கொண்டவர். இவர் துவக்கத்தில் ராணுவத்தில் பணியாற்றினார். ராணுவத்திலிருக்கும்போதுதான் சாப்ட்வேரை உருவாக்குவதில் ஈடுபட்டார்.
ராணுவ பயிற்சி முகாமுக்கான கட்டளைகளை நிறைவேற்றி தருவதற்காக சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கினார்.

அதன்பிறகு தற்செயலாக திரைப்பட விழாவை நடத்தும் பொறுப்பேற்றி ருந்த நண்பர் ஒருவரை இவர் சந்திக்க நேர்ந்தது. செக் குடியரசு நாட்டின் பிரசித்தி பெற்ற திரைப்பட விழாவுக்கு பொறுப்பேற்றிருந்த அந்த நண்பர், விழா நிர்வாகம் தொடர்பாக விழி பிதுங்கி நின்றபோது கலேண்டா, தற்காலிகமாக விழாவுக்கான அனைத்து வேலைகளையும் பொறு ப்பேற்று நிறைவேற்றக்கூடிய சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கினார்.

வியப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில், ராணுவ பின்னணி அவருக்கு சாப்ட்வேர் உருவாக்கத்தில் கை கொடுத்தது. ராணுவத்தில் இருக்கக் கூடிய கட்டுப்பாடும், ஒழுங்கும் திரைப்பட விழாவுக்கான பணிகளை ஒருங்கிணைக்கும் சாப்ட் வேரை வடிவமைப்பதில் கை கொடுத்தது.

பின்னர் முழு அளவில் இந்த சாப்ட்வேரை உருவாக்கினார். டேட்டா கால் என்னும் பெயரில் உருவாக்கப் பட்ட அந்த சாப்ட்வேர் 2000மாவது ஆண்டு முதல் முறையாக செக் குடியரசு நாட்டை விட்டு வெளியே வந்தது.

நார்வே நாட்டில் நடைபெற்ற திரைப் பட விழாவுக்கு இந்த சாப்ட்வேரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நிறைவேற்றினர். அதன்பிறகு இந்த சாப்ட்வேர் தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இன்று இந்த சாப்ட்வேரை பயன் படுத்தாத முன்னணி பட விழாக்களே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், விரைவில் நடை பெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தப்படவுள்ளது.
திரைப்பட விழாவை நடத்துவதில் உள்ள நிர்வாக சிக்கல்களை எளிதாக கற்பனை செய்து கொள்ளலாம். நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் திரையிடப்படும் நிலையில், அவற்றின் படைப்பாளிகளை வரவேற்று சிறப்பு விருந்தினர்களை எதிர்கொண்டு ரசிகர்களுக்கு இடமளித்து இவ்வளவுக்கும் நடுவே பத்திரிகையாளர்களுக்கு அங்கீ காரத்தை வழங்கியாக வேண்டும். இதற்கு நிர்வாகிகள் பம்பரமாக சுற்றி சுழன்று செயல்பட வேண்டும்.
எங்கே சிறு குறை ஏற்பட்டாலும், ஒட்டுமொத்த திரைப்பட விழாவின் தன்மையும் பாழாகிவிடும்.

அவ்வாறு ஏற்படாமல் இந்த சாப்ட்வேர் மிக அழகாக நிகழ்ச்சிகளை நிர்வகிக்கிறது. விருந்தினர்களுக்கான வரவேற்பு அட்டைகளை வழங்கி அவர்களுக்குரிய ஓட்டல் அறையை ஒதுக்குவதில் தொடங்கி ரசிகர் களுக்கான டிக்கெட்டுகளை வினி யோகம் செய்வது வரை அனைத்தை யும் இந்த சாப்ட்வேர் பார்த்துக் கொள்கிறது. இதற்கு தேவையான தகவல்களை மட்டும் சமர்ப்பித்து விட்டால் போதும்.

இந்த சாப்ட்வேரை பயன்படுத்துவது விழா நிர்வாகிகளுக்கு ஒரு வார காலம் பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது என்றால் இது எத்தனை செயல் திறன் மிக்கதாக இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இதேபோல, நம்மவர்கள் திருமணத்துக்காக என்று ஒரு சாப்ட்வேரை உருவாக்கினார்கள் என்றால், திருமணத்திற்கான பத்திரிகை அனுப்பி வைப்பது தொடங்கி, திருமண தினத்தன்று வந்தவர்களை வரவேற்று பந்தி உபச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் வரை அனைத்தையும் இந்த சாப்ட்வேர் பார்த்துக்கொள்ளும்.;www.datakal.com

Advertisements

3 responses to “திருமணத்துக்கான சாப்ட்வேர்

    • மன்னிக்கவும் நண்பரே இப்போது அந்த தளம் செயல்பாட்டில் இல்லை என்று கருதுகிறேன்.இப்படி காணாமல் போகும் இணையதளங்கள் பல இருக்கின்றன.இது பற்றி தனி பதிவு எழுத வேண்டும்.

      அன்புடன் சிம்மன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s