கம்ப்யூட்டர் பாடும் தாலாட்டு

தமிழில் ஆத்திச்சூடியும், ஆங்கி லத்தில் பா பா பிளாக்ஷிப்பும் பிள்ளைகள் மழலை மொழி பேசும் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் முதல் பாட்டுக்களாக விளங்கு கின்றன. இதில் பா பா பிளாக்ஷிப்பிற்கு மற்றொரு சரித்திர முக்கியத்துவமும் இருக்கிறது. இந்த தகவல் பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பிள்ளைகள் மழலையர் வகுப்பில் பாடும் அந்த பாடல்தான் கம்ப்யூட்டர் பாடிய முதல் பாட்டும் கூட! இன்று கம்ப்யூட்டரில் மெட்டு போடுவதும், இசைக்கு மெருகு சேர்க்க கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதும் சர்வசகஜமாக இருக்கிறது.

தேர்ந்த இசைக் கலைஞர்கள் கருவிகளின் உதவியை நாடாமல் கம்ப்யூட்டரை மட்டுமே கொண்டு முழு பாடல் தொகுப்புகளையும் உருவாக்கி விடுவது சாத்தியமாகிறது.

அந்த அளவுக்கு இசைக்கும், கம்ப்யூட்டருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பந்தத்தின் ஆரம்ப புள்ளி எது தெரியுமா?

கம்ப்யூட்டர் முதன் முதலில் இசைக் கோர்க்க எப்போது பயன்படுத்தப் பட்டது? கம்ப்யூட்டரின் உயிர்நாடியாக விளங்கும் சாப்ட்வேர் இசைமயமான கட்டளையை உருவாக்கி கொண்டு பாட்டுப்பாடும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்பது எப்போது முதன் முதலில் தெரிய வந்தது?

டிஜிட்டல் இசை என்பது இன்று புயலென உலகை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்த கேள்விகள் மிகவும் சுவாரசியமானவை. இந்த கேள்விக்கான பதில், உலகில் முதன் முதலில் கம்ப்யூட்டரை கொண்டு இசையை உருவாக்குவதற்கான முயற்சி 1951 ஆம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலையில் மேற்கொள்ளப்பட்டது என்பதுதான்.

புதைப்பொருள் ஆராய்ச்சியின் போது தெரிய வரும் சரித்திர உண்மைகளை போல இந்த தகவலும் கூட கம்ப்யூட்டர் சரித்திரம் தொடர்பான அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

இந்த சாதனைக்கு வித்திட்ட, மான்செஸ்டர் பல்கலையின் பிள்ளையான பேபி கம்ப்யூட்டர் தனது மணிவிழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் இந்த தகவலை தெரிந்து கொள்வது பொருத்தமாகவே இருக்கும்.

1948 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த கம்ப்யூட்டர்தான் முதல் நவீன கம்ப்யூட்டர் என்று கருதப்படுகிறது. சமகாலத்து சாதனை கம்ப்யூட்டர்கள் அனைத்திற்கும் இந்த கம்ப்யூட்டரே முன்னே õடியாகவும் போற்றப் படுகிறது.

மான்செஸ்டர் பல்கலையில், இந்த கம்ப்யூட்டரின் வெற்றிக்கு பிறகு இதன் மேம்பட்ட வடிவங்கள் அறிமுகமாகி கம்ப்யூட்டர் வளர்ச்சி யில் மைல்கல்களாக அமைந்தன.

இவ்வாறு மான்செஸ்டர் பல்கலையால் உருவாக்கப்பட்ட பேபி கம்ப்யூட்டரின் அடுத்த அவதாரமான மார்க்1 கம்ப்யூட்டரை கொண்டு 1951 ஆம் ஆண்டு புதுமையான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆணைத் தொடர்களை உள்வாங்கிக் கொண்டு பாடல்களை இதனால் பாட முடியுமா எனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் வெற்றியும் கிடைத்தது.

கம்ப்யூட்டர் செயல்பாடுகளுக்கான இலக்கணங்களை வகுத்த மேதை என்று கருதப்படும் ஆலன் டியூரிங்கின் நண்பரான கிறிஸ்டோபர் ஸ்டிரேகே எனும் கணிதவியல் மேதை இந்த ஆணைத் தொடரை உருவாக் கினார்.

குறிப்பிட்ட தினத்தன்று மான் செஸ்டர் பல்கலையில் மார்க்1 கம்ப்யூட்டர் இந்த ஆணைத் தொடரை கச்சிதமாக புரிந்து கொண்டு, பா பா பிளாக்ஷிப் பாடலை பாடி காண்பித்தது.
முதல் முயற்சியில் தடுமாறினாலும் அடுத்த முயற்சியில் அது இந்த பாடலையும், இங்கிலாந்தில் தேசிய கீதத்தையும் பாடி காண்பித்தது.

கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட முதல் இசையாக இதுவே கருதப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உலகிற்கு தெரிய வர சில காலமானது.

நீண்ட நாட்களாக ஐபிஎம் கம்ப்யூட்டர் 1957ல் உண்டாக்கிய இசையே கம்ப்யூட்டரில் பதிவான முதல் மெட்டாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னரே மான்செஸ்டரில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதை தற்செயலாக உலகம் தெரிந்து கொண்டது.

கம்ப்யூட்டர் ஆவண காப்பகத்தில் இருந்த பழைய இசைத்தட்டின் மூலம் இந்த செய்தி புலனானது. இதற்கு உலகம் பிபிசி தொலைக்காட்சிக்கே நன்றி கூற வேண்டும்.

மார்க்1 கம்ப்யூட்டரில் இசை பதிவு செய்யப்பட்டபோது பிபிசி படப்பிடிப்பு குழுவினர் தற்செயலாக மான்செஸ்டர் பல்கலைக்கு சென்றிருக்கின்றனர். அப்போது கம்ப்யூட்டர் இசையை உருவாக்கி பதிவு செய்வது பற்றி கேள்விப்பட்ட குழுவினர், சம்பந்தப் பட்ட துறைக்கு சென்று அந்த நிகழ்வை பதிவு செய்துள்ளனர்.

இதன் குறுந்தகடு பிபிசி தொலைக் காட்சியால் பின்னர் கம்ப்யூட்டர் அருங்காட்சி யகத்திடம் ஒப்படைக் கப்பட்டது. இதன் பிறகு இந்த அருங்காட்சி யகத்தில் ஆய்வு செய்து கொண்டி ருந்தபோது இந்த குறுந்தகடு பற்றி தெரிய வந்தது. இதன் மூலம் உலகிலேயே முதல் முறையாக கம்ப்யூட்டரில் பதிவான இசை இதுதான் என்பது உலகம் தெரிந்து கொண்டது.

இது பற்றி பேபி கம்ப்யூட்டரின் பொன்விழா நிறைவின்போது பிபிசி ஒரு செய்தி படத்தை தயார் செய்துள்ளது. அப்போது பேபி கம்ப்யூட்டரின் மணிவிழா கொண்டாட் டத்திற்கு நடுவே இந்த செய்தியை நினைவு கூர்ந்து, இதன் பின்னே இருந்த நிபுணர்களுக்கு இசைமயமான வந்தனங்களை தெரிவித்துக் கொள்வோமாக!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s