எளிது எளிது, கற்பது எளிது!

உலகம் நல்லாசிரியர்களால் நிரம்பி இருக்கிறது. ஏன் நீங்களே கூட ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். அல்லது நீங்கள் ஒரு நல்லாசிரியரை தேடிக் கொண்டிருக்கலாம்.

நீங்கள் நல்லாசிரியராக இருக் கும் பட்சத்தில் உங்களுக்கான மாணாக்கர்களை தேடிக் கொண்டி ருக்கலாம். இந்த இரண் டையுமே எளிமையாக்கித் தரும் பணியை தான் டீச்ஸ்டிரீட் டாட் காம் teach11 செய்கிறது.
.
நல்லாசிரியர்களையும் நல் மாணாக்கர்களையும் சேர்த்து வைப்பதற்காக என்றே உரு வாக்கப்பட்டது தான் இந்த தளம். நல்லாசிரியர் என்றதும் சிறந்த கல்வி பணிக்கான அரசு விருதை பெற்ற பள்ளி ஆசிரியர்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம்!

ஒரு குறிப்பிடட விஷயத்தை மற்றவர்களுக்கு கற்றுத்தரும் திறனும், ஆர்வமும் கொண்ட எவருமே நல்லாசிரியர் தான். அவர் பயிற்சியாளராக இருக் கலாம். தனது துறையில் நிபுணராக இருக்கலாம். ஏன் ஆசிரிய ராகவோ, பேராசிரிய ராகவோ இருக்கலாம் தனக்கு தெரிந்தவற்றை சிறந்த முறையில் கற்றுத்தர தெரிந்தவராக இருப்பவர்கள் எல்லாம் நல்லாசிரி யர்கள் தான்! இத்தகைய நல்லாசிரியர்களை தேடிக்கண்டு பிடிக்க உதவும் பணியை தான் “டீச்ஸ்டிரீட்’ தளம் செய்கிறது.

கற்பது என்றவுடன் பள்ளி (அ) கல்லூரிக்கு சென்று பயில்வது மட்டும்தான் என்றில்லை. கற்பதற்கான தேவை யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உடல் இளைப்பதற்காக யோகா கற்க விரும்பலாம். மன அமைதியை பெறுவற்காக தியானம் கற்க விரும்பலாம். சொந்தமாக இணையதளம் அமைக்க விரும்பி, எச்டிஎம்எல் கற்றுக்கொள்ள நினைக்கலாம்.

கற்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. எத்தனையோ தேவைகள் இருக் கின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக என்று எத்தனையோ பயிற்சி முகாம் களும், வகுப்புகளும் நடத்தப் படுகின்றன.

ஆனால் பல நேரங்களில் ஒருவர் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயத்தை கற்றுத்தரக்கூடிய பயிற்சியாளரை தேடி பிடிப்பது இயலாத காரியமாகி விடுகிறது.

நாளிதழ் வரி விளம்பரங்களிலும், தெருவோர விளம்பர பலகைகளிலும் இந்த தகவல்களை தெரிந்து கொள்ள லாம்தான்! ஆனாலும் கூட சில நேரங்களில் தேடில் பலனளிப் பதில்லை. அதிலும் குறிப்பாக அதிகம் பரவலாகாத விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது அதனை சொல்லித்தரக்கூடிய நபர்களை அறிந்து கொள்வது கஷ்டமாக இருக்கலாம். நண்பர்களை கேட்கலாம். நாமே அலைந்து பார்க்கலாம். ஆனால் நம் வீட்டு அருகாமையிலேயே நாம் கற்க விரும்பும் கலையில் தேர்ச்சி மிக்கவர்கள் இருக்கலாம் அது நமக்கு தெரியாமலே இருக்கலாம்.

இந்த இடைவெளியை போக்கும் வகையில் இரு தரப்பின ருக்கும் ஒரு பாலம் இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான பதில்தான் டீச்ஸ்டிரீட் இணையதளம்.
கற்பிப்பவர்களையும் கற்க விரும்புகிறவர்களையும்ஒன்று சேர்த்து வைக்கும். பணியை செய்வதே இந்த தளத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இந்த தளத்தில் நுழைந்ததுமே, என்ன கற்க விரும்புகிறீர்கள்? எங்க கற்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வி தான் வரவேற்கிறது. இரண்டு கேள்விக்கும் பதில் அளித்து விட்டு “தேடு’ என கட்டளையிட்டால், அதற்கான பதில் திரையில் அழகாக வந்து நிற்கும்.

யோகா கற்க விரும்பினாலும் சரி, கம்ப்யூட்டர் கற்க விரும் பினாலும் சரி, அதனை குறிப் பிட்டு யார் எந்த அமைப்பு கற்றுத் தருகிறது என்பதை சுலபமாக தெரிந்துகொண்டு விடலாம்.

எந்த எந்த விஷயத்தை யார் எல்லாம் கற்றுத் தருகிறார்கள் என்ற விவரமும் நேர்த்தியாக பட்டியலிடப்படுகிறது. மாணவர் களாக விரும்பும் எவ ருக்கும் இந்த வசதி பேருதவியாக இருக்கும்.

அதே நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் திறமையை பறைசாற்றிக்கொள் வதற்கான வழியாகவும் இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அவர்கள் தங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து அறிமுகம் செய்து கொள்வதற்கான வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வலைப்பின்னல் தளங்களில் நமக்கான பக்கத்தை அமைத்துக் கொள்வது போலவே இந்த தளத்தில் ஆசிரியர்கள் தங்களுக் கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.

கற்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் தேடும் போது இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களின் அறிமுகமும் பட்டியலிடப்படும். மேலும் பல மாணவர்களை தேடிக்கொள்ள ஆசிரியர்களுக்கு இது சுலபமான வழி என்கிறது “டீச்ஸ்டிரிட்’ அதேபோல மாணவர்களும் அதாவது கற்க விரும்புகிறவர்களும் தங்களுக் கான ஆசானை சுலபமாக தேடிக்கொண்டு விடலாம்.

புதிதாக எதையும் தெரிந்து கொள்ள மாட்டேன் என்னும் பிடிவாதம் கொண்டவர்கள் கூட இந்த தளத்தில் உலா வந்தார்கள் என்றால் இதில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை பார்த்து எதையாவது கற்றுக்கொள்ள விரும்புவார்கள். அந்த அளவுக்கு தளம் கற்பதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கிறது.

ஒரே இடத்தில் கற்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருப்பதோடு, அவற்றை தேடுவதற்கான சுலப மான வழியையும் இந்த தளம் வழங்குகிறது. வகுப்புகளை தேடுங்கள், ஆசிரியரை தேடுங் கள் என்னும் பிரிவின் கீழ் வெகு சுலபமாக தேடி விட முடிகிறது.

————–
linl;

3 responses to “எளிது எளிது, கற்பது எளிது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s