மைக்கேல் ஜாக்சனின் சாயும் ஷு

jacksonமைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நிற்கும் அளவுக்கு ஜாக்சன் சமீப ஆண்டுகளில் பிரச்ச னைகளில் சிக்கி தவித்திருக்கலாம்.
.
இதனால் அவர் மீது ஒரு வித வெறுப்பு கூட உண்டாகியிருக்கலாம். ஜாக்சனின் திறமையை பலர் மறந்தும் கூட இருக்கலாம். இந்நிலையில் மைக்கேல் ஜாக்சன் ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்திருக் கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

உண்மைதான் ஜாக்சன் ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். சர்ச்சைகளின் பாதையில் பயணிக்காமல், சந்தோஷ வீதியில் ஜாக்சன் உலா வந்துகொண்டிருந்தார். இசை மயமான 1990-களில் அவருக்கு அருமையான ஒரு யோசனை தோன்றியது.

மனிதன் நடனமாடுவதில் மன்னன் அல்லவா. உடலை ரப்பராக வளைத்து இசையின் லயத்திற்கேற்ப, ஆடி அசத்துவதில் கைதேர்ந்தவர் அவர். அதனால் தானோ என்னவோ அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது.

முன்பக்கமாக 45 டிகிரி சாய முடியுமாயின் எப்படியிருக்கும் என்பது தான் அந்த எண்ணம். புவிஈர்ப்பு விசையை எதிர்த்து நின்றபடி இப்படி சாய்வாக நிற்பது புது அனுபவமாக இருக்கும் என்று ஜாக்சன் நினைத்தார்.

இதனை சாத்தியமாக்கக் கூடிய அற்புத ஷý ஒன்று தயார் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கருதினார். நினைத்ததோடு நிற்காமல் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர் களோடு பேசி, இதற்கேற்ற விசேஷ ஷýவை தயாரித்து தருமாறு கேட்டார்.

ஜாக்சன் தனது வீடியோ ஆல்பத்தில் இத்தகைய சாகசங்களில் செய்து காட்டியவர். நேரடி நிகழ்ச்சியில் இது எப்படி சாத்தியமாகும என்று யோசித்து வந்ததன் விளைவாகவும், இந்த கண்டுபிடிப்பு அவரது மனதில் உதயமாகியிருக்கலாம்.

ஜாக்சன் இந்த விசேஷ ஷýவை தயாரித்தாரா? பயன்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த காலத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் இது பெரும் ஈடுபாட்டை உண்டாக்கியது.

இந்த விஷயத்தை பலரும் மறந்து போய்விட்டனர். புதியவர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்ட நிலையில், எல்லாம்வல்ல கூகுல் இதனை தேடி எடுத்திருக்கிறது.

எப்படி என்று கேட்கிறீர்களா? கூகுல் அண்மையில் காப்புரிமை தேடல் வசதியை அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் இதுகாறும் வழங்கப் பட்டுள்ள காப்புரிமை படிவங்களை யெல்லாம் ஒருசேர ஒரே இடத்தில் தேடிப்பார்க்கும் வசதியை கூகுல் வழங்கியுள்ளது.

அந்த வசதியை பயன்படுத்தி தேட லில் ஈடுபடும்போதுதான் மைக்கேல் ஜாக்சனின் இந்த ஷý பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. ஜாக்சன் இந்த ஷýவுக்காக விண்ணப்பித்து, 1993 ஆம் ஆண்டு அதற்கான காப்புரிமை யையும் பெற்றிருக்கிறார்.

தன்னுடைய புவிஈர்ப்பு விசையை மிஞ்சி முன்புறமாக சாய்ந்து நிற்கக் கூடிய வகையில் உதவக் கூடிய விசேஷ ஷýவுக்கான கருத்தாக்கம் என்னும் அடிப்படையில் அவருக்கான காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

கூகுல் காப்புரிமை தேடல் வசதியை அறிமுகம் செய்வதாக கூறிய போது அது இத்தனை சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று பலரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இந்த தேடல் வசதி கூகுலின் மற்றொரு முத்திரையாக அமைந்துள் ளது. ஜாக்சன் மட்டுமல்ல மேலும் பல பிரபலங்கள் கண்டுபிடிப்பாளர்களாக விளங்குவதை கூகுல் அடையாளம் காட்டுகிறது. கைவசம் நேரமும், நெஞ்சு நிறைய கூகுல் மீதான அபிமானமும் இருப்பவர்கள் அதன் காப்புரிமை தேடதல் தளத்தில் கணிசமாகவே நேரத்தை செலவிடலாம்.

கூகுல் வழிகாட்ட காப்புரிமைகளின் உலகத்தில் நீந்தி மகிழ்ந்து தகவல் களோடு கரைசேரலாம். உலகில் உள்ள விவரங்களையெல் லாம் தேடுவதற்கான வசதியை எளிதாக்கி தருவது என்னும் தன்னு டைய ஆதார கொள்கைக்கு ஏற்ப கூகுல் அறிமுகம் செய்துள்ள மற்றொரு சேவை கூகுல் பேட்டன்ட்.

அதாவது அமெரிக்க வரலாற்றில் வழங்கப்பட்ட காப்புரிமைகளை ஒரே இடத்தில் தேடிப்பார்க்கும் வசதியை இதன் மூலம் கூகுல் வழங்குகிறது.

காப்புரிமை ஆவணங்கள் எல்லாமே பொது மக்கள் அணுக கூடியவைதான். ஆனால் அவற்றை எளிதாக தேடி பெறக் கூடியவகையில் கூகுல் அற்புத மாக ஒருங்கிணைத்து தருகிறது.

அதன் முகப்பு பக்க இலக்கணமான எளிமைக்கேற்ப இந்த தளமும் எளிமையாகவே இருக்கிறது. தேடல் கட்டத்தில் எந்த காப்புரிமை தொடர்பா கவும் தேடிப்பார்க்கலாம். முடிவுகள் பகுதியில், காப்புரிமையின் சாராம்சம், விரிவான விளக்கம் மற்றும் வரை படங்கள் என தகவல்கள் விரிகின்றன.

சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண் டர் கிரஹாம்பெல், ரைட் சகோதரர்கள் போன்ற பிரபல கண்டு பிடிப்பாளர்க ளின் காப்புரிமைகளை தேடிப் பார்த்து, அறிவை விருத்தி செய்து கொள்ளலாம்.

அதோடு நடிகர்கள் மற்றும் நடிகைகள் போன்ற நட்சத்திரங்களும் கண்டு பிடிப்பாளர்களாக இருந்தி ருப்பதை, அவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட காப்புரிமையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பல நட்சத்திரங்கள் விநோதமான கண்டுபிடிப்புக்கு சொந்தமானவர் களாக இருப்பது உள்ளபடியே ஆச்சர்ய மான விஷயம்தான். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மர்லன் பிராண்டோ தன்னு டைய சொந்த தீவில் தொழில் துவங்குவதற்காக ஒரு விதமான விநோத சாதனத் துக்கு காப்புரிமை கேட்டு விண்ணப் பித்து இருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவர் இறந்த பிறகே இதற் கான காப்புரிமை வழங்கப்பட்டது.

பிரபல இயக்குன ரான ஜார்ஜ் லூகாஸ், 1980 ஆம் ஆண்டு வாக்கில் அலங்கார பொம்மை ஒன்றிற்கான காப்புரிமை பெற்றிருக்கிறார். ரசிகர்களை தனி உலகில் சஞ்சரிக்க வைத்த ஸ்டார்வாஸ் படத்தில் வரும் யோடா பார்த்திரத்தின் மூல வடிவம் தான் இது.
இதே போல ஜேமிகர்டிஸ் என்னும் நடிகை குழந்தைகளுக்கு அணிவிக்கக் கூடிய நாப்கின்களில் புதுமையை செய்து அதற்கான காப்புரிமையை பெற்றிருக்கிறார்.

மற்றொரு நடிகையான ஹெடிலாமர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தகவல் தொடர்பில் ஈடுபடக்கூடிய சாதனத்துக்கான காப்புரிமையை பெற்றிருக்கிறார். பின்னாளில் அறிமுகமான ரகசிய சாதனங்களுக்கெல்லாம் இது முன்னோடியாக கருதப்படுகிறது.

டிவி நடிகரான கேரி பர்கோப் மீன் களை கவர்ந்திழுக்கக் கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்து காப்புரிமை வாங்கி இருக்கிறார். இந்த சாதனத்தை படகில் பொருத்தி விட்டால் வலையில்லாமலே மீன்பிடிக்கலாமாம்.

இப்படி சுவாரஸ்யமான தகவல்களில் நீந்தி மகிழ்வதோடு, கண்டுபிடிப்பாளர் களாக வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் ஒருமுறை இந்த தளத்தில் உலாவிப்பார்த்தால் தங்கள் மனதில் உள்ள எண்ணம் ஏற்கனவே யாராலாவது கண்டுபிடிக்கப் பட்டிருக் கிறதா என்பதையும் தெரிந்து கொண்டு விடலாம். அந்த வகையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் மீது தங்கள் நேரத்தை வீணடிக்காமலும் இருக்கலாம்
—————
யூடியுப்பில் இது தொடர்பான விளக்கப்படம் இருக்கிறது தெரியுமா?
link;

5 responses to “மைக்கேல் ஜாக்சனின் சாயும் ஷு

 1. The latest news about Michael Jackson, better than the invention of reclining shoe, of course, is his discovery of peace, truth and its origin.

  He has embraced Islam. But, the world media, as usual, has side lined this important news of him.

  I wonder what is there in Islam that attracts those hi-fi people like Michael who get everything in their worldly lives yet is in search of something eternally…!?

  They say, the content of Quran and the history of Prophet Mohammed have changed their lives upside down. May be we should read them too, let us see what they say..

  I love your blog. Keep up your good writing.

  Ajit

 2. இந்த மேட்டரையும் கூகிளில் தேடித்தான் கண்டுபிடித்தீர்களா..

  நல்லாயிருக்கு உமது பதிவுகள்.

  வாழ்த்துக்கள்.

  நம்ம வலை பக்கம் வந்து பார்க்கிறது..

 3. இந்த மேட்டரையும் கூகிளில் தேடித்தான் கண்டுபிடித்தீர்களா.. ??

  நல்லாயிருக்கு உமது பதிவுகள்.

  வாழ்த்துக்கள்.

  நம்ம வலை பக்கம் வந்து பார்க்கிறது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s