டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு-3

johnwhitfield1நேற்றைய தொடர்ச்சி…

டார்வினுக்கு ஒன்றும் தெரியாது என்பதை அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு கூறவில்லை, உண்மையில் டார்வினே , வழி வழியாக வரும் பண்புகள்,விலங்குகள்,தாவிரங்களிடையே வேறுபாடு தோன்றுவது எப்படி, இவற்றின் வரலாறு மற்றும் தோற்றம் ப‌ற்றி தனக்கே எதுவும் தெரியாது என்றே ஒப்புக்கொள்வதாக விட்பீல்டு குறிப்பிடுகிறார்.காரணம் டார்வின் மேற்கொண்டது ஒரு முன்னோடி முயற்சி. தனக்கு முன்னே எந்த ஒரு அடித்தளமும் இல்லாத நிலையில் டார்வின் குறைந்த பட்ச தகவல்களை வைத்துக்கொண்டு உயிர்களின் ரகசியத்தை புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மீறி டார்வின் பரிணாம தத்துவத்தை கண்டறியும் முயற்சியில் இற‌ங்குகிறார்.
தகவல்கள் சொற்பமாக இருந்தாலும், அவற்றைக்கொண்டு முடிவுக்கு வரும்போது அவை வெறும் அனுமானங்களாக நின்றுவிடாமல் பார்த்துகொல்கிறார் என்றும் டார்வினை பாராட்டுகிறார்.
விஞ்ஞானியாகவும் விஞ்ஞான எழுத்தாளராகவும் டார்வின் மின்னுவதாக பாராட்டு தெரிவிக்கும் விட்பீல்டு முதல் அத்தியாயத்தில் டார்வின் விவரிப்பது என்ன என்றும் சுருக்கமாக சொல்லிவிடுகிறார்.

வளர்ப்பு விலங்குகள் மற்றும் தாவரங்களை ஆய்வின் அடிப்படையாக எடுத்துக்கொள்ளும் டார்வின், அவை வேறுபாடுகளை கொண்டதாக இருப்பதாகவும்,குறிப்பாக ஒரே இனத்திற்குள் வேறுபாடுகளை கொண்டவையாக இருப்பதாகவும் , இந்த மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்ப‌ட்டிருக்க வேண்டும் என்றும், இதற்கு மனிதர்கள் அவற்றின் குறிப்பிட்ட பண்புநலன்களை பெற விரும்பி கருத்த‌ரிப்பில் ஈடுபட வைத்ததுமே காரணம் என்றும் டார்வின் குறிப்பிடுகிறார்.

வளர்ப்பு விலங்குகள் ப‌ற்றி ஆய்வு செய்ய தீர்மானித்த பிறகு, புறாக்களை டார்வின் தேர்வு செய்து கொண்டார்.புறாக்கள் வேகமாக குட்டி போடக்கூடியவை என்பதாலும்,அவற்றில் பல வேறுபட்ட இனங்கள் இருந்தாலும் எல்லாமே காட்டுப்புறா இன‌த்திலிருந்து தோன்றியவை என்பதாலும் பரிணாம கோட்பாடு தொடர்பான ஆய்வுக்கு ஏற்றதாக இருக்கும் என டார்வின் கருதியதாக விட்பீல்டு குறிப்பிடுகிறார்.
புறாவை தேர்வு செய்தது டார்வினின் புத்திசாலித்தனம் என்றாலும் அவருடைய முடிவுகள் சில பிழையானவை என்றும் குறிப்பிடுகிறார்.உதாரணமாக அனைத்து வகை நாய்களும் ஒரே காட்டு நாய் இனத்திலிருந்து வந்த்தாக டார்வின் குறிப்பிடுவதாகவும் , ஆனால் நவீன மரபணு சோதனைகள் இவை குள்ள நரியில் இருந்து வந்ததை நிருபித்துள்ள‌தாகவும் விட்பீல்டு கூறுகிறார்.எனினும் டார்வின் காலத்தில் இத்தகைய நவீன தொழில்நுட்பங்கல்ள் எதுவும் இல்லாத நிலையில் அவர் தன் கையில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் கொண்டு பரிணாம கொள்கைக்கான அடிப்படையை வகுத்துக்கொண்டதாக அவர் பாராட்டுகிறார்.

சீன களைகலைஞ்சியம் மற்றும் பைபிலில் இருந்து கூட ஆதாரங்களை எடுத்துக்கொண்டதாக அவர் கூறுகிறார். பைபிளில் கூறப்படும் படைப்பு முறைக்கு மாறான பரிணாம கொள்கையை முன்வைத்தவர் பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுவது அழகான முரண் அல்லவா என்று கேட்டபடி முதல் அத்தியாயம் தொடர்பான பதிவை நிறைவு செய்கிறார்.
இப்படி ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துவிட்டு தனது கருத்துக்களை அவர் அழகாக பதிவு செய்திருந்தார்.
டார்வினுடைய புத்தகம் உலகையே பிரட்டிப்போட்ட புத்தகம் .அவரது பரிணாம கொள்கை கடவுள் உயிர்களை படைத்தார் என்னும் கருத்திற்கு எதிரான விஞ்ஞான பார்வையை வைத்து அறிவுலகையே ஆட்டிப்படைத்தது. இதனால் எற்பட்ட விவாதம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் டார்வினை தூற்ற முடிகிற அளவுக்கு அவரை மறுதலிக்க முடியவில்லை. இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை, அதில் டார்வின் எடுது வைக்கும் வாதங்களை , அதனை அவர் வந்தடைந்த விதத்தை ,அத்ற்கான ஆதாரங்களை விட்பீல்டு தனதுபதிவுகளில் கொண்டு வந்து டார்வின் தரிசனத்தை அளிக்கிறார்.

டார்வினை உள்வாங்கி கொள்ளும் படி கருத்துக்களை பதிவு செய்ததோடு, டார்வின் காலத்திற்கு பிறகு ஏற்பட்ட முன்னெற்றங்களையும் தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் குறிப்பிடுகிறார். இவை டார்வினின் போதாமைகளை உண‌ர்த்துவதாக இருந்தாலும் டார்வினின் முக்கியத்துவத்தை இப்போது எப்படி புரிந்து கொள்வது எனபதற்கு உதவுகின்றன.

இந்த பதிவுகளுக்கான பின்னூட்டங்களை படிக்கும் போது வாசகர்கள் மத்தியில் உண்டான ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. பின்னூட்ட‌ங்கள் வாயிலாக நடைபெற்ற விவாதம் பரிணாம கொள்கை சார்ந்த புதிய விஷயங்களையும் புரிய வைக்கிற‌து.
உயிரியல் தனது துறையில் கடந்த காலத்தை மிக எளிதாக அழித்துவிடுவதாக ஆரம்பத்தில் கூறியிருந்த விட்பீல்டு கடைசி அத்தியாயத்தை பதிவு செய்து விட்டு முடிவுரை எழுதும் போது இல்லை அந்த கருத்து தவறு . காலத்தை மீறி டார்வினின் கருத்துக்கள் நிற்பதாகவும். டார்வினின் பரிணாம கொள்கை அறிவியலின் மையமாக இருப்பதாகவும், ஆரிஜின் ஆப்.. புத்தகம் வெளியான பிறகு விஞ்ஞானத்தின் அனைத்து வழிகளும் அதன் வழியே தான் பயணித்துள்ளதாக குறிப்பிடுகிறார்.
டார்வின் தொடர்பான வலைப்பதிவை தொடங்கும் முன், வலைப்பதிவு செய்த படி வாசிப்பதை பொது வாசிப்பு என்று அவர் குறுப்பிட்டிருந்தார்.கூட்டு வாசிப்பு என்றும் வைத்துக்கொள்ளலாம். உலகெங்கும் உள்ள பலரை டார்வின் பற்றி தெரிந்து கொள்ள வைத்து மேலும் பலரை டார்வினின் மைல்கல் புத்தகத்தை படைக்கவும் வைத்த முயர்சியாக இதனை பாரட்டலாம்.

———-

டார்வின் வலைப்பதிவை படிக்க…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s