நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?
அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம்.
சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர்.
நுலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த ஒலிகள் இடம்பெற்றுள்ளன. எல்லமே ஹாலிவுட் இசையமைப்பாளர்கள்,மற்றும் தொழில் முறை இசையமைப்பாளர்கள் வுருவாக்கியவை.
விலங்குகளின் ஒலிகள், தொழிற்சாலை ஓசைகள், இசை மெட்டுக்கள், வீட்டில் கேட்கும் ஒலிகள், இயற்கை ராகங்கள் என எண்ணற்ற ஒலிகள் கொட்டிகிடக்கின்றன.
இதில் எவற்றை வேண்டுமாலும் பதிவிறக்கம் செய்து கேட்டு பார்க்கலாம் . பயன்படுத்தலாம்.காப்புரிமை தொல்லை கிடையாது.எனினும் நிபந்தனைகளை கவனமாக படித்துக்கொள்ளவும்
ஆனால் அதற்கு முன்னால் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்த பிறகு ஒலிகளை தேட துவங்கிவிடலாம்.
ஒலிகளை கேட்பது மட்டும் அல்ல உங்கள் வசம் உள்ள ஒலிகலையும் இங்கே சமர்பிக்கலாம்.
ஆரம்பத்தில் எத்தனை முறை வேன்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதித்து வந்தனர். ஆனால் இப்போது முதல் 5 ஒலிகள் மட்டுமே இலவசமாக உள்ளது. அதன் பிறகு கட்டணம் உண்டு.
அதிகமானோர் பதிவிறக்கம் செய்வதால் தளத்தை பராமரிக்க அதிக செலவு ஆவதாலும், ஒலிகளை வழங்குபவர்கள் அதற்கான பலனை கேட்பதாலும் பகுதி இலவசம் பகுதி கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.
ஆனால் ஒன்று நீங்கள் ஒலிகளை சமர்பிப்பவராக இருந்தால் இதன் மூலம் வருமானம் வரவுன் வாய்ப்புள்ளது அல்லவா?
————-
ஒலிகளை கேட்டு மகிழ….
linki;
thank you so much for this useful information.
thanke you welcome
Thanx for the Info Simhan. All your post are very much
informative. You are doing a great job..
U ROCK MAN !!!!!!!AMAZING ARTICLES !!
thanks