தீப்பெட்டிக்குள் அடங்கும் இணையதளங்கள்

நல்ல இணைய தளம் என்றால் அந்த தளம் தீப்பெட்டிக்குள் அடங்கினாலும் அழகாக இருக்க வேண்டும். அதாவது அந்த தளம் தீப்பெட்டி அளவிலும் தெளிவாக தெரிய வேண்டும்.

தீப்பெட்டிக்கும் இணையதளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம்? தீப்பெட்டி என்பது ஒரு அடையாளம் தான். விஷயம் என்னவென்றால் தீப்பெட்டி அளவில் ,அதாவது செல்போன் திறையிலும் எந்த ஒரு இணையதளமும் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

செல்போன்கள் இன்றியமையாததாக ஆகிவிட்ட நிலையில்,அவை கூடுதல் திறன் கொண்டதாகவும் விஷேச அம்சங்கள் கொண்டதாகவும் உருவாகியுள்ளன. ஸ்மார்ட் போன் என்று சொல்லக்கூடியவை கம்ப்யூட்டரோடு போட்டி போடக்கூடியவையாக கருதப்படுகின்றன.

அதே நேரத்தில் செல்போன் மூலமே இண்டெர்நெட்டை அணுகுவதும் சாத்தியமாகி உள்ளது.இனி வரும் காலங்களில் செல்போன் மூலமே நெட்டை அணுகுவது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போன் + நெட் கூட்டணியை மனதில் கொண்டு புதிய சேவைகளும் அறிமுகமாக உள்ளன. அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கு செல்போன் மூலமான இணைய இணைப்பு வழியே மருத்துவம், வங்கிச்சேவை போன்றவற்றை சிறப்பாக வழ்ங்க முடியும் என்று ந்ம்பப்படுகிறது.

இந்த நிலையில் தான் இணையதள வடிவமைப்பும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாகவே ஒரு இணையதளம் எளிமையாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இப்போது அது மட்டும் போதாது ஒரு இணைய தளம் செல்போனிலும் எளிதாக பார்க்கக்கூடியதாக இருப்பது அவசியம். இது எத்த‌னை சவாலானது என்பது எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடியதே. காரணம் அளவில் சிறிய செல் திறையில் இனையதளம் செல்லுபடியாக வேண்டும்.

சுருக்கமாக சொல்வதானால் அகண்ட காவிரியை அகத்தியர் கமன்டலத்தில் அடக்கியது போல இணையதளத்தை செல் திறைக்குள் வெற்றிகரமாக அடக்கியாக வேண்டும்.
இப்படி அடக்கும் போது இணைய தளத்தின் உள்ளடக்கம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அநேக தளங்கள் கம்யூட்டரை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டதால் செல் திறைக்கு இறங்கி வரும்போது அவை திணறிப்போகின்றன. படங்கள் ம‌ற்றும் கிராபிக்ஸ் சித்திரங்கள் அதிகம் கொண்ட தளங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

எனவே தற்போது செல்போன் திறையையும் மனதில் வைத்துக்கொண்டு தளத்தை வடிவமைக்கும் போக்கு பிரபலமாகி வருகிறது.

இணைய வடிவமைப்பாளர்களுக்கு இது பெரும் சவால் தான். அவர்கள் சிந்திக்கும் முறையையே முற்றிகொள்ள வேண்டும்.

வடிவமைப்பாளர்கள் இதற்கு தயாராகி வருகின்றனர். நிற்க செல்லுக்கெற்ற தளங்கள் வரும் வரை இணையவாசிகள் என்ன செய்வது?

கவலையே வேண்டாம் தளங்களை செல்லுகேற்றதாக மாற்றித்தரும் தளங்கள் இருக்கின்றனவே.

மொபைல் லீப் என்றொரு தளம் இருக்கிறது.

இந்த தளத்தில் எந்த தளத்தை சமர்பித்தாலும் அந்த தளத்தை செல் திறைக்கேற்ற தளமாக மாற்றித்தந்து விடுகிறது.

சுளுக்கெடுப்பது என்று சொல்வது உண்டல்லவா . இந்த‌ தளம் மாமூலான தளங்களை அவ்விதமாக சுளுக்கெடுத்து தேவையில்லாத அம்சங்களை நீக்கி செல்லுக்குள் கொண்டு வந்து விடுகிறது.

அதற்கு முன்பாக தகவல்கள் எப்ப‌டி தோன்ற வேண்டும் என்னும் பகுதிக்கு சென்று நமக்கான விருப்பங்களை சொல்லலாம்.

அதே போல படங்களை குறைப்பதோ, நீக்குவதையோ கூட செய்துக்கொள்ளலாம்.

இதே போல w4mobiles.com என்னும் தளமும் செல்போனில் இணைய தளங்களை பார்க்க வழி செய்கிற‌து.

டாட் மொபி என்னும் தளம் வடிவமைப்பாளர்கள் ம்ற்றும் இணையதள உரிமையாளர்களுக்கானது. இந்த தள‌த்தில் குறிப்பிட்ட தளம் செல்லில் எப்ப்டி தோற்றம் தருமென பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
————–

link;www.mobileleap.net\v2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s