தெரியாமலேயே ந‌ட்பு;உதவும் இணையதளம்

omஇண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாமா?

இதற்காக என்றே புதியதொரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
ஒமேக்லே என்னும் அந்த தளம் புதிய நண்பர்களை தேடித்தருவதாக உறுதி அளிக்கிறது.

நண்பர்களை தேடிக்கொள்ள‌த்தான் ஃபேஸ்புக் உள்ளிட்ட எத்தனையோ வலைப்பின்னல் தள‌ங்கள் இருக்கின்றனவே.அப்ப‌டியிருக்க இந்த தளத்தில் என்ன புதுமை என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

ஆனால் இந்த தளம் நண்பர்களை தேடிதருவதில் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதே விஷயம்.
ஃபேஸ்புக் போன்ற தளங்கள் உங்களுடைய பழைய நண்பர்களை தேடித்த‌ருகிறது.வேறு பல தளங்கள் ஒத்த கருத்துடைய நபர்களை நண்பர்களாக பெற உத‌வுகின்றன.

ஃபேஸ்புக் மூலம் எப்போதோ பிரிந்த நண்பர்களை மீண்டும் சந்த்தித்த இனிமையான அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.தொடர்ந்து நட்பை வள‌ர்த்துக்கொள்ள கைகொடுப்பதில் ஃபேஸ்புக்கிற்கு நிகர் பேஸ்புக் தான்.

ஒரே விதமான சிந்தனை போக்கு கொண்டவர்கள் கருத்து பரிமற்றம் செய்து கொள்ளவும் பேஸ்புக் உதவுகிறது.
எல்லாம் சரிதான் எப்பொழுதும் அறிமுகமானவர்களுடனே பேசிக்கொண்டிருந்தால் எப்படி?ஒத்தகருத்துள்ளவர்கள்மட்டுமே சந்தித்து பேசிக்கொள்ளும் போது ஏதாவது ஒரு கட்டத்தில் அலுப்பு ஏற்பட்டு விடாதா?

அது மட்டும் அல்லாமல் புதியவர்களை அறிமுகம் செய்துகொண்டு நட்பு பாராட்டும் போது தானே புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

பல நேரங்களில் அறிமுகமில்லாதவர்கள் நமக்கு அனுபவத்தின் புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளனர் அல்லவா?

ரெயில் பயணங்களின் போதும், வெளியூருக்கு செல்லும் போதும் இத்தகைய அனுபவங்கள் நேர்வதுண்டு அல்லவா?

இண்டெர்நெட்டும் ஆரம்ப கால‌த்தில் இப்படி யார் யாரையோ சந்தித்து உரையாட வைத்தது.அரட்டை அறையில் நுழைந்து சாட் செய்வதே ஒரு பரவசமான விஷயமாக‌ இருந்தது.

ஆனால் இன்று நண்பர்கள் வலையில் மாட்டிக்கொண்டிருக்கிறோம்.வலை வீசுவதும் நண்பர்களுக்காகவே என்றாகிவிட்டது.

அதிலும் இண்டெர்நெட்டில் மோசடிகளும் ஆபத்துகளும் அதிகரித்த பிறகு பாதுகாப்பிற்கே முன்னுரிமை வந்திருக்கிறது.

இதை தவறில்லை என்றாலும் வையம் முழுவதும் வலை விரிந்துள்ள நிலையில் முன்பின் அறிமுகமில்லாதவர்களை தொட‌ர்பு கொண்டு உறையாடலில் ஈடுபடாமல் இருப்பது சரியா?

பிரிட்ட‌னை சேர்ந்த‌ லீப் கெ புரூக்ஸ் என்னும் இணைய‌ வ‌டிவ‌மைப்பாள‌ர் இந்த‌ த‌ள‌த்தை உருவாக்கியுள்ளார்.புதிய‌ வ‌கையான‌ ந‌ட்பை ஏற்ப‌டுத்து த‌ருவ‌தே இந்த‌ த‌ள‌த்தின் நோக்க‌ம் என்கிறார் அவ‌ர்.

த‌ற்போது உள்ள‌ வ‌லைபின்ன‌ல் த‌ள‌ங்க‌ளுட‌ன் இணைந்து இந்த‌ சவை செய‌ல்ப‌டும் என்றும் அவ‌ர் கூறுகிறார்.

இந்த‌ சேவை சுவார‌சிய‌மாக‌ இருப்ப‌தோடு ப‌ய‌னுள்ள‌தாக‌வும் இருக்கும் என்கிறார்.உங்களை போன்றவர்க‌ளோடே பேசிக்கொண்டிருந்தால் எதையும் புதிதாக‌ தெரிந்து கொள்ள‌ முடியாது என‌ கூறூம் புரூக்ஸ் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளோடு பேசும்போது தான் அனுப‌வ‌ம் விரிவ‌டையும் என்கிறார்.

ந‌ல்ல‌ முய‌ற்சி தான் ஆனால் ப‌ய‌ன்ப‌டுத்து போது எச்ச‌ரிக்கையாக‌ இருப்ப‌து ந‌ல்ல‌து.

—————

link;

2 responses to “தெரியாமலேயே ந‌ட்பு;உதவும் இணையதளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s