மன்னிக்கவும் இது ஐபோன் மூலம் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் செயலியை பற்றியதல்ல.அப்படி ஒரு சேவை உருவாக்கபடலாம் என்னும் கருத்தை வலியுறுத்துவதற்காக தான்.
ஆப்பிளின் ஐபோன் பிரபலமாக இருப்பதோடு அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் செயலிகள் அதை விட பிரபலமாக இருக்கின்றன.ஐப்போனுக்கான செயலிகள் உள்ளங்கையிலெயே எத்தனையோ விதமான சேவைகளை கொண்டுவந்து விடுகின்றன.
இப்படி ஆயிரக்கணக்கான சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது ஐபோனுக்கான வார்த்தை விளையாட்டு.இணைய அகராதி சேவையான டிக்ஷனரி டாட் காம் உதவியோடு ஐபோனில் விளையாடக்கூடிய வார்த்தை விளையாட்டாக இது அறிமுகமாகியிள்ளது.முதலில் இந்த செயலியை ஐபோனில் டவுண்லோடு செய்ய வேண்டும். அதன் பிறகு திறையில் வரிசையாக 20 வார்த்தைகள் தோன்றும் .
அவற்றில் இந்த வார்த்தையின் சொற்கள் சரியாக இருக்கின்றன அல்லது எந்த சொல் தவறாக உள்ளது என்பதை சுட்டுக்காட்ட வேண்டும்.குறிப்பிட்ட நேரத்திற்குள் இதனை செய்து முடிக்க வேண்டும்.எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் சரியான விடைகளுக்கு ஏற்ப மதிப்பெண் கிடைக்கும்.
ஐபோனில் நேர்த்தை கொல்ல எத்தனையோ விளையாட்டுக்கள் உள்ளன.
ஆனால் வார்த்தை விளையாட்டு பொழுதுபோக உதவுவதோடு ஆங்கில அறிவையும் மேம்படுத்தும்.
தொழில்ரிதியயாக மொழியை பயன்படுத்த வேண்டியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
டிக்ஷனரி டாட் காம் இதற்கு முன்பாக தனது முழு அகாராதியையும் ஐபோனில் வரவைத்து சொற்களின் சரியான பொருள் அறிய உதவும் செயலியை அரறிமுகம் செய்தது. இதன் மூலம் ஐப்போனிலேயே சொற்களுககான அர்த்தத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலி லட்சக்கணக்கில் டவுண்லோடு செர்ய்யப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதன் தொடர்ச்சியாகவே வார்த்தை வலையாட்டு அறிமுகமாகியுள்ளது.
தமிழ் மீது ஆர்வம் கொண்டவன் என்ற முறையில் தமிழுக்கும் இத்தகைய செயலிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கத்தோன்றுகிறது.
அகராதியை மட்டும் அல்ல கொஞ்சம் முயனறால் தேவாரம், திருக்குறளை கூட ஐபபோனில் கொண்டு வரலாம். ழகர உச்சரிப்பு ஒற்றுபிழை ஆகியவற்றையும் கற்றுத்தரலாம்.
hi friend in this post the last para contain one mistake please correct it (அல்�%B�.’2 change to அல்ல),
otherwise nice…
thanks. some technical problem
Congrats Now your Post displayed in Youthful Vikatan Home page