எச்சரிக்கை களஞ்சியம் பாரீர்.

alertகாலத்தினால் செய்த உதவியைபோலவே காலத்தினால் செய்யப்படும் எச்சரிக்கையும் மிகப்பெரியது தான்.அலர்ட்பீடீயா தளம் இதனை தான் செய்ய நினைக்கிறது.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து விட்டீர்கள் என்றால் அதன்பிறகு தேவையான எந்த தவலையும் நீங்கள் தவறவிட மாட்டீர்கள். அது மட்டும் அல்ல உரிய நேரத்தில் உரிய விஷயம் குறித்து உங்களை எச்சரிக்கை செய்யவும் இந்த தளம் தவறாது.

அதனால் தான் இந்த தளம் தன்னை எச்ச‌ரிக்கை களஞ்சியம் என்று அழைத்துக்கொள்கிறது.

நோய் தொட‌ர்பான‌ த‌க‌வ‌லில் இருந்து , புய‌ல் சூறாவ‌ளி, பூக‌ம்ப‌ம், போன்ற‌வை குறித்த‌ விவ‌ர‌ங்களையும் இந்த‌ த‌ள‌ம் உட‌னுக்குட‌ன் தெரிவிக்கிற‌து.அது ம‌ட்டும் அல்ல‌ ரிய‌ல் எஸ்டேட் த‌க‌வ‌ல்க‌ள் இண்டெர்நெல் ஏல‌ த‌க‌வ‌ல்க‌ள் குறித்தும் த‌க‌வ‌ல் தெரிவித்துவிடுகிற‌து.

ஏற்கனேவே இது போன்ற இணைய சேவை இல்லாமல் இல்லை. கயக் ம‌ற்றும் கிரேஸ்ட்லிஸ்ட் போன்ற தளங்கள் நீங்கள் பின்தொடர நினைக்கும் தளங்களில் ஏற்படும் மார்றங்களை கண்காணித்து தகவல் தெரிவிக்கின்றன. பயண தளங்கள் ம‌ற்றும் திருமண தளங்களை கன்காணித்து தகவல் தருகின்றன.

ஆனால் அல‌ர்ட்பீடீயா த‌ள‌மோ ஒரே இட‌த்தில் எல்லாவ‌கையான‌ த‌க‌வ‌ல்க‌ளையும் உரிய‌ நேர‌த்தில் த‌ருகிற‌து.

யூடியுப் வீடியோவில் துவங்கி வரி விளம்பர தளங்கள், வேலை வாய்பு தளங்கள் , உள்ளுர் நிகழ்ச்சிகள், போக்குவரத்து விவரங்கள், என அனைத்து வகையான தகவல்களையும் அளிக்கீறது.செய்திகளும் இதில் அடங்கும்.

அமெரிக்காவை சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் சிலர் ஒன்றூ சேர்ந்து இந்த சேவையை துவங்கியுள்ளனர்.

இந்த சேவையை துவக்க இவர்கள் சொல்லும் காரணம் நெகிழ்ச்சியானது.

2004 ம் ஆண்டு சுனாமியை நினைவில் உள்ளதா? அசியாவிலும் இந்தியாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திய சூனாமியை மறக்க முடியுமா? இந்த சூனாமி தான்
அல‌ர்ட்பீடியா குழுவின‌ரை மிக‌வும் பாதித்து விட்ட‌து.

அவ‌ர்கள் யாரும் சுனாமியால் பாதிக்க‌ப்ப‌ட‌வில்லை என்றாலும் அத‌ன் பேர‌ழிவு உலுக்கி எடுத்து விட்ட‌து.ஆழிப்பேர‌லை தாக்க‌ப்போவ‌து ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் உரிய‌ நேர‌த்தில் கிடைக்காத்தால் தானே ஆயிர‌க்க‌ண‌க்கானோர் உயிரிழ‌ந்த‌ன‌ர்.த‌க‌வ‌ல் தொட‌ர்பு யுக‌த்தில் இப்ப‌டி ச‌ரியான‌ நேர‌த்தில் எச்ச‌ரிக்கை செய்ய‌ப்ப‌ட‌ வாய்ப்பின்றி உயிரிழ‌ப்பு ஏற்ப‌ட‌ அனும‌திப்ப‌து ச‌ரியா என‌ யோசித்த‌ அல‌ர்ட்பீடீயா குழுவின‌ர் இனி இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ஏற்ப‌ட‌க்குடாது என‌ உறுதி எடுத்துக்கொண்டு எல்லாவ‌கையான‌ விஷ‌ய‌ங்க‌ள் குறித்தும் எச்ச‌ரிக்கை செய்ய‌ இந்த‌ சேவையை உருவாக்கின‌ர்.

அர‌சு த‌ள‌ங்க‌ள் உட்ப‌ட‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ த‌ள‌ங்க‌ளை க‌ண‌காணித்து ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ளை உரிய‌ நேரத்தில் ந‌ம‌க்கு தெரிவிக்கிற‌து. இமெயில் அல்ல‌து எஸ் எம் எஸ் மூல‌ம் இந்த‌ த‌க‌வ‌ல்களை பெற‌லாம்.

——
link;

2 responses to “எச்சரிக்கை களஞ்சியம் பாரீர்.

 1. உங்களுக்கு எத்தனை ஓட்டுகள் நான் போட்டாலும், நன்றிக்காக ஒரு ஓட்டு திரும்பி போட மாட்டேன்றீங்க..

  உங்கள் தளத்திற்கு வந்து பின்னூட்டமிட்டாலும், ஒரு courtesyக்காக எங்க தளங்கள் பக்கம் வந்து ஒரு பின்னூட்டிட மாட்டேன்றீங்க..

  அப்புறம் இன்னாத்துக்கு ஓட்டுபோட்டு.. ஆனால் நீங்க எழுதினால் பதிவு பப்ளிஷ் ஆகிடும்.

  அதனால நான் ஓட்டுப்போடாமலேயே பப்ளிஷ் ஆகட்டும். எஞ்சாய்!

 2. எனக்கு தெரிஞ்சு எல்லா வேர்ட்ப்ரஸ் காரங்களுமே இப்படித்தான் இருக்கீங்க – தனி தீவில் இருப்பது போல

  ப்ளாக்கர்ஸ்ல இருப்பவங்க நல்லா ஜாலியா தான் இருக்காங்க.

  வேர்ட்ப்ரஸ் காரங்களே இப்படித்தான் – அறிவுஜீவியா இருக்கிங்களே ஏன்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s