டிவிட்டர் மூலம் போர்க்கொடி

எப்போதுமே நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் குரலுக்கு தனிம‌திப்பு உண்டு.அவர்களுக்கு ஒரு குறை என்றால் உடனே கவ‌னிக்க சம்ப‌ந்தப்பட்டவர்கள் ஓடோடி வருவார்கள்.பிரச்சனை என்றால் ஒரே ஒரு போன் போதும் அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளலாம்.

ஆனால் அமெரிக்க பிரபலம் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த போது அதிகாரிகளிடம் போய் நிற்காமல் தனது டிவிட்டர் படையிடம் விஷயத்தை தெரிவித்து பிரச்சனைக்கு தீர்வு க‌ண்டிருக்கிறார்.

அவர் ஆடம் சாவேஜ். அமெரிக்காவில் அவர் ‘மித் பஸ்டர்ஸ்’ புகழ் சாவேஜ் என்றே குறிப்பிடப்படுகிறார். மித் பஸ்டர்ஸ் அறிவியல் உண்மைகளை விளக்கும் தொலைக்காட்சித்தொடர்.சாவேஜ் இதன் தொகுப்பாளர். ரசிகர்கள் பத்தியில் இந்த தொடர் பிரபலமாக உள்ளது.

இதைத்தவிர சாவேஜிற்கு பல முகங்கள் உண்டு. சிறந்த வடிவமைப்பாளர் அவர். திரைப்படங்களுக்கான ஸ்பெஷல் எபெக்ட்சிலும் அவர் மன்னர். படங்களிலும் நடைத்திருக்கிறார். இது தவிர சிறு வயதில் தனக்கான விளையாட்டு பொம்மைகளை அவர் தானே உருவாக்கிகொண்டிருக்கிராராம்.

சாவேஜ் பர்றி நிறைய கூறலாம். இனி விஷயத்திற்கு வருவோம்.

சமீபத்தில் சாவேஜ் கனடா சென்று வந்திருக்கிறார்.கனடாவில் இருந்தபோது ப‌யன்படுத்திய செல்போன் சேவைக்கான பில் தொகை வந்த போது அவ‌ர் அதிர்ந்து போய்விட்டார். காரண‌ம் பில்தொகை 11 ஆயிர‌ம் டால‌ர் என்ப‌துதான்.

க‌னடாவில் சில‌ ம‌ணி நேரங்க‌ள் இண‌டெர்நெட்டில் உலா வ‌ந்த‌த‌ற்கா இத்த‌னை க‌ட்ட‌ண‌ம் என்று குழ‌ப்மித்த‌வித்தார். கூட‌வே கொதித்தும் போனார். அவர் 9 கிகா பைட் அள‌வுக்கு த‌க‌வ‌ல்க‌ளை ட‌வுன்லோடு செய்த‌தாக‌ செல்போன் நிறுவ‌ன‌ம் தெரிவித்திருந்த‌து. இது அநியாய‌ம் ம‌ற்றும் சாத்திய‌ம் இல்லாத‌து என‌ அவ‌ர் நினைத்தார்.

இது தொடர்பாக நிறுவனத்தை தொடர்புகொண்ட போது சரியாக பதில் கிடைக்கவில்லை.

இத‌ற்கு மேல் பொறுக்க‌ முடியாது என‌ நினைத்த‌ சாவேஜ் த‌ன்னுடைய‌ டிவிட்ட‌ர் வாச‌க‌ர்க‌ளிட‌ம் பிர‌ச்ச‌னையை கொண்டு சென்றார். ஆம் சாவேஜ் டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகிரார். டிவிட்ட‌ரில் அவ‌ருக்கு ஏற‌க்குறைய‌ 50 ஆயிர‌ம் பின்தொட‌ர்பாள‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர்.

விஷ‌ய‌த்தை கூறிப்பிட்டு இது பகல் கொள்ளை இல்லையா என‌ கேள்வி எழுப்பிய‌தோடு ,இந்த‌ த‌க‌வ‌லை மிண்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு டிவிட்ட‌ர் மூல‌ம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.இதற்கு டிவிட்ட‌ர் மொழியில் ரிடிவீட் என்று பெய‌ர்.

அவ்வ‌ளவு தான் அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ள் உட‌னே டிவிட்ட‌ரில் இந்த‌ த‌க‌வ‌லை ப‌கிர்ந்துக்கொன்ட‌ன‌ர். மிக‌ விரைவிலேயே டிவிட்ட‌ர் உல‌கில் இது பெரும் விவாத‌திற்குறியாதாக‌ மாறிய‌து.

சம்பந்தப்பட்ட செல் போன் சேவை நிறுவனமான ஏ டி அன்டு டி செய்த இந்தசெயல் அநியாயம் என்னும் கருத்து டிவிட்டர் முழுவதும் எதிரொலித்தது.நிறுவனத்தின் சேவை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.நிறுவனத்தின் பெயருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை வந்தது.

ஏற்கனவே இது போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க நிறுவ‌ன‌த்திற்கு எதிராக போர்க்கொடி உய‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து.இந்த‌ டிவிட்ட‌ர் போர்க்கொடி ப‌ற்றி செய்தி த‌ள‌ங்க‌ளிலும் த‌க‌வ‌ல் வெளியாக‌ நிறுவ‌ன‌ம் பிர‌ச்ச‌னையில் சிக்கி கொண்ட‌து.

பின்ன‌ர் இந்த‌ பிர‌ச்ச‌னை பேசி தீர்க்க‌ப்ப‌ட்ட‌து. இத‌னை நிறுவ‌ன‌ம் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் தெரிவித்த‌து.

டிவிட்ட‌ர் மூல‌ம் எப்ப‌டி போராடலாம் என்ப‌த‌ற்கான‌ உதார‌ண‌ம் இது என‌ நினைக்கிறேன்.

இப்ப‌டி போராட‌ நீங்க‌ள் பிர‌ப‌லாமாக‌ இருக்க வேண்டும் என்று அவ‌சிய‌மில்லை. சாம‌ன‌யாராக‌ இருந்தாலும் டிவிட்ட‌ர் மூல‌ம் உங்க‌ள் பிர‌ச்ச‌னையை தெரிவித்து ஆத‌ர‌வு தேட‌லாம். ச‌ந்தேக‌ம் இருந்தால் இது தொட‌ர்பான‌ என் முந்தைய‌ ப‌திவை ப‌டித்துப்பார்க்கவும்.( இணைப்பு கிழே உள்ள‌து)
——
link;

2 responses to “டிவிட்டர் மூலம் போர்க்கொடி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s