பெயர் வைக்க இபே ஏலம்

namemybabyஇபே ஆச்சர்யங்கள் தொடர்கின்றன.

நம்மூரில் தலைவர்களை பிள்ளைக்கு பெயர் வைக்கச்சொல்வது போல அமெரிக்காவில் அம்மணி ஒருவர் தனது குழைந்தைக்கு பெயர் சோட்டும் உரிமையை இபே மூலம் ஏலம் விட்டுருக்கிறார்.

அர்கான்சாஸ் நகரைச்சேர்ந்த ல‌வோனி என்னும் அந்த பெண்மணுக்கு எற்கனவே ஆறு பிள்ளைகள் இருக்கின்றனராம்.இந்நிலையில் அடுத்த குழந்தையை எதிர்பார்க்கும் அவர் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையை பிரபல ஏல தளமான இபே மூலம் ஏலம் விடுவதாக தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்.உங்களுக்கு பிடித்தமானவரின் பெயர், நீங்கள் இழந்து தவிப்பவரின் பெயர் என யாருடைய பெயரை வேண்டுமானால் வைக்கலாம் என அவர் தனது ஏல குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

என‌க்கு வேலையும் இல்லை, வ‌ருவாயும் இல்லை ,என‌ ச‌கோத‌ரின் தான் என‌து செல‌வுக‌ளை பார்த்துக்கொள்கிறார்.என‌து காரும் ப‌ழைய‌தாகிவிட்ட‌து. புதிய‌ கார் வாங்க‌ ப‌ண‌ம் தேவை. என‌வே த‌ன் இந்த‌ ஏல‌ம் என்றும் அவ‌ர் குறிப்பிட்டுள்ளார்.

இதென்ன‌ விந்தையாக‌ இருக்கிறதே, யாரோ ஒருவர் குழைந்தைக்கு பெயர் சூட்டும் உரிமையை ஏலம் விடுவதாக கூறுகிறாரே இதெற்கெல்லாம் பயன் இருக்குமா?என அப்பாவியாக கேட்கத்தோன்றினால் உங்களுக்கான பதில் இபேவில் இதெல்லாம் சகஜம்பா என்பது தான்.

ஏற்கனவே இதே போல பல விந்தைகள் அரங்கேறியுள்ளன. இபோதும் நடந்துக்கொன்டிருக்கிறது.

அவை ப‌ற்றி தொட‌ர்ந்து பார்ப்போம்.

2 responses to “பெயர் வைக்க இபே ஏலம்

  1. மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் http://www.tamil.com

    நன்றி
    ஈழவன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s