தினம் ஒரு டிவிட்டர் பதிவு

இந்த வலைப்பதிவின் வாசகர்கள் நான் டிவிட்டர் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை கவனித்திருக்கலாம்.

டிவிட்டரின் பயன்பாடுகள் வியப்பானதாகவும் புதுமையானதாகவும் இருப்பதாலும் ,அதன்பயன்பாட்டு எல்லை விரிவடைந்து வருவதாலும் டிவிட்டர் குறித்து எழுத நிறையவே உள்ளன.டிவிட்டரில் இலக்கியம் டிவிடரில் நாடகம் என டிவிட்டர் பலவித அவதாரங்களை எடுத்தின வருகிற‌து.டிவிட்ட சார்ந்த போராட்டங்களும் அரசியல் புரட்சிகளும் நடந்து வருகின்றன்.பிரபலங்களும் மக்கள் பிரதிநிதிகளும் டிவிட்டரில் இணைவது அதற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தொடர்ந்து டிவிட்டர் பற்றி எழுத விரும்புகிறேன். அப்படியே டிவிட்டர் ப‌ற்றிய புத்தக‌மாக கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் தினமும் டிவிட்டர் பற்றி படிப்பதை எல்லோரும் விரும்ப்பாமல் போக‌லாம்.எனவே மற்ற பதிவுகளோடு தினமும் டிவிட்டர் பற்றிய கூடுதல் பதிவையும் எழுத திட்டமிட்டுள்ளேன்.என் பணி சூழலுக்கு ஏற்ப இயன்றவரை தினமும் என்பதை கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

தினம் ஒரு டிவிட்டர் பதிவு என்னும் யோசனையை வழங்கியது இந்த‌ வலைப்பதிவின் வாசகராகவும், எனது வழிகாட்டியாகவும் விளங்கும் என் பத்திரிக்கையாள ந‌ண்ப‌ர் என‌ப‌தை இங்கே ந‌ன்றியோடு குறிப்பிட‌ விரும்புகிறேன்.

இத‌ன் துவ‌க்க‌மாக‌ டிவிட்ட‌ர் ப‌ற்றிய‌ அறிமுக‌ ப‌குதி ஒன்றையும் எழுதியுள்ளேன்.டிவிட்ட‌ர் என்றால் ச‌ரியாக‌ புரியாம‌ல் குழ‌ப்பம் அடைய‌க்கூடிய‌வ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ ப‌திவு. அதோடு டிவிட்ட‌ரின் ப‌ய‌ன்பாட்டை புரிந்து கொள்ள‌வும் இது உத‌வும்.

டிவிட்டர் தொடர்பான தகவல்களை வாச்கர்களாகிய நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.டிவிட்டர் தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களையும் கேட்காலாம்.நான் டிவிட்ட‌ர் நிபுண‌ர் இல்லை என்றாலும் இய‌ன்ற‌வ‌ரை தேடிப்பார்த்து ப‌தில‌ளிக்க‌ முய‌ல்வேன்.

‍ ……………..
அன்புடன்
சிம்ம‌ன்.

7 responses to “தினம் ஒரு டிவிட்டர் பதிவு

    • to know about twitter please my introductary post on twitter.
      to open twitter account just go to twitter.com and open a account. its like opening email account. even simple than that.just choose a user name .and password. and keep posting

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s