வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.

ஆச்சர்யமாக இருக்கிறது, வின்மணி வைரஸ் நீக்க சேவைக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும் போது. இதனை உருவாக்கியவர் கேட்டுக்கொன்டதன் பேரில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு அறிமுகமாகவே இந்த சேவை பற்றி எழுதியிருந்தேன்.

இந்த பதிவை படித்துவிட்டு பல வாசகர்கள் வின்ம்ணி வைரஸ் சேவையை பயன்படுத்திவிட்டு அது மிகச்ச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அவர்களின் உற்சாகமான பின்னூட்டம் மூலமே வைரஸ் நீக்க சேவை மகத்தானதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர் இதன் முழு வடிவத்தை கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இது லேப்டாப்பில் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சந்தையில் வைரஸ் நீக்க மென்பொருள் பல இருக்கின்றன். என்னினும் எதையும் முழுமையானது என சொல்ல முடியாது.அப்ப‌டியிருக்க‌ ஒரு த‌மிழ‌ரால் உருவாக்க‌ப்ப‌ட்ட வைர‌ஸ் நீக்க‌ மென்பொருள் ப‌ன்னாட்டு நிறுவன‌ தாயாரிப்புக‌ளை மிஞ்ச‌க்கூடிய‌தாக‌ இருப்ப‌து ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து.

இந்த‌ மென்பொருளின் பின்னே உள்ள‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் த‌ன்னைப்ப‌ற்றி அட‌க்கத்தோடு குறிப்பிட்டுள்ள‌தை இங்கே த‌ருகிறேன்.

”இன்று தான் அனைத்து பின்னோட்டங்களையும் பார்த்தேன். முதன் முதலில் இந்த

தமிழனுக்கு மதிப்பளித்து ஒரு பதிவு தந்தீர்கள், என் நோக்கம் அனைவருக்கும் இலவசமாக இது கிடைக்க
வேண்டும் என்பது தான். இந்த வைரஸ் ரீமுவர் பற்றி விரிவாக கேட்டு இருந்திர்கள் சொல்கிறேன்..
என் பல வருட கனவு ஒரு முழுமையான ஆண்டிவைரஸ் கொடுக்க வேண்டும் என்பது நாம் கொடுக்கும்

ஆண்டிவைரஸ் பத்தோடு பதினோன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணம். பல முன்னனி

ஆண்டிவைரஸ்களால் நீக்க முடியாத வைரஸை மட்டும் கவனத்தில் கொண்டு அதை எப்படி நீக்கலாம் என்று

யோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. வைரஸின் மூலம் எங்கு என்பதை கண்டு அதை முழுமையாக நீக்கும்.
கம்யூட்டருக்கு பாதிப்பை கொடுக்கும் வைரஸை மட்டும் தான் நீக்கும். அது மட்டும் இல்லாமல் கம்ப்யூட்ட்ரின்
வேகத்துக்கு தடையாக இருக்கும் மால்வேர் என்று சொல்லக்கூடிய Script -ஐயும் நீக்கும். பல ஆண்டிவைரஸ்-கள்
வைரஸ் வந்த பின் செயலாற்றுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட வைரஸையும் நீக்கும்.

என்னைப்பற்றி:
நான் ஒரு Computer Engineer சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டிணம் , சென்னையில் ஒரு

பிரபலமான கம்பெனியில் Technical Head ஆக வேலைக்கு சேர்ந்து ஒரே மாதத்தில் Project manager ஆக

பதவிஉயர்வு பெற்றேன். ஆனால் அங்கு இருக்கும் போலி ஆங்கில வாழ்க்கை என்க்கு பிடிக்காததால் பதவியை

விட்டு இன்று சொந்த ஊரில் உள்ளேன். எனக்கு புதுமையாக எதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற

பேராசை. ஆன்மிகத்தில் எனக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. உங்கள் பதிவில் என் பெயர் இட்டு இருந்தீர்கள்

தயவு செய்து இனி வேண்டாம். புகழ் என்ற ஒன்று நம்மை பிடிக்காத வரையில் நாம் மனிதராக இருப்போம்

பிடித்துவிட்டால் நாம் மிருகமாக மாறிவிடுவோம் அதனால் தயவு செய்து வேண்டாம். நாம் கொடுக்கும் சேவை

மக்களுக்கு சென்றால் அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்”.
–]

‍‍‍‍‍‍‍ஒரு நீண்ட பேட்டிக்கான உத்தேசத்தோடு நான் விவரங்களை கேட்டிருந்த போதும் தன்னைபற்றி மிக சுருக்கமாக குறிப்பிட்டு என மென்பொருள் அதிகமானோரை சென்றடைந்தாலே போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ‌ருக்கு ந‌ம் வாழ்த்துக்க‌ள்.

அவ‌ர் மேலும் ப‌ல‌ மென்பொருள் முயற்ச்சிக‌ளில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ அறிகிறேன்.அவ‌ர் அனும‌தியோடு விரைவில் அது ப‌ற்றியும் விரிவாக‌ எழுதுகிறேன்.

வாச‌க்ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். வின்ம‌ணி சேவையை ப‌ய‌ன்ப‌டுத்தி பாருங்க‌ள். ந‌ன்றாக‌ இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தால் த‌ய‌வு செய்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரை செய்யுங்க‌ள்.

( பார்க்க‌ வைர‌ஸ் நீக்க‌ சேவை பற்றிய என் முந்திய‌ ப‌திவு).

link;

41 responses to “வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.

 1. dear mr.nagamani,
  I have been reading blogs for quite some time and have not given any feedback however after reading your statement i couldn’t stop myself from adding a feedback. People like you are very rare in the society and i wish you a good luck in all your forth coming projects. And thank you cybersimman for bringing this article in your blog. I also request your friends to publish this article in their blog.

 2. பயனுள்ள செய்தி நண்பரே,

  இந்த மென்பொருளை பயன்படுத்தி பார்த்தேன் மிக அருமையாக உள்ளது. இந்த மென்பொருளைவிட இதை உருவாக்கிய நாக‌ம‌ணி அய்யா அவர்களின் எண்ணங்கள் உயர்வானவை. அவர்க்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். தொடரட்டும் அவருடைய சேவை…

 3. திரு நாகமணி,

  தங்கள் நல்ல எண்ணத்திற்கு மகிழ்ச்சி. மேன்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.

  திரு. சைபர்சிம்மன்

  மிக்க நன்றி இந்த உபயோகமான, எளிமையான, அருமையான மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு

  தொடரட்டும் உங்கள் இருவரின் சேவை

 4. உன்னை நினைத்தால் பெருமை தானடா எங்களுக்கும்,
  கண்டிப்பாக நீ பெரிய மனிதனாக வருவாய்.
  உன் சேவைக்கு நன்றியை தவிர வேறு வார்த்தை..இல்லை..
  நன்றி..

 5. உண்மையிலே சிறந்த மென்பொருள் தான் இதை பயன்படுத்திய பின் என் கம்யூட்டரும் வேகமாகத்தான் உள்ளது. இறைவனின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு.

  – ரேவதி

 6. தரவிறக்கம் பண்ணி பயன்படுத்தி பார்த்தேன், ஆனால் அதன் செயற்பாடுகளை புரிந்துகொள்ள முடியவில்லை… தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும்…

  நன்றி

 7. http://www.k7computing.com/ : He is a

  http://www.k7computing.in/contactus : இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். கேசவன் என்கிற பெயர் கொண்டவர் K7Computing என ஆண்டிவைரஸ் தொகுப்பை வெளியிடும் நிறுவனத்தை நடத்துகிறார். இதுவும் உலகப்புகழ் பெற்ற வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு.

  நன்றி

 8. Vazhga Tamizh! Vazh tamizhan pugazh!

  Tamizha! Unnai Ninaikaiyil en ullam paravasam adaikirathu.
  Tamizhan nagamani avarkalin saathanai ulagam muzhuvathum paravattum.
  Nam kalam avarkalin Kanavu tamizharkalin thunaiyodu viraivil nanavaga maarum.
  Tamizharkale ungaluku therinthathai, tamizhan nagamani avarkalai pola velipatuthungal.
  Nagamani avargale ungal adutha padaipirku kadavul thunai nitchayam undu….

 9. சிம்மன் அவர்களுக்கு,
  windows Xp மற்றும் windows vista இரண்டு Operating system -லும் பயன்படுத்தி பார்த்தேன்.
  சில நிமிடங்களிலே வைரஸை குறிவைத்து நீக்கியது போல் இருந்த்து. system-ம் இப்போது வேகமாகதான் உள்ளது. ஆர்பாட்டம் இல்லாமல் இவ்வளவு பெரிய சேவையை
  அளித்திருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. நன்றி நாகமணி அவர்களே,
  மிகவும் எளிமையாக உள்ளது.சிங்கபூரில் வாழும் என் நண்பர் குமாரவேல் உங்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளார்.அதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

  சிறந்த பதிவு.

 10. simman sir ,
  i am really happy, i have check the software in my system “uscandle” virus remove with in a minute, i am also java programmer, but how is it possible ? 2 or 3 times i’ll check the software is an really good.
  system speed is also increase. i’ll forward the link to all my friends.
  the above feedback who is Restrileo ? once again u r check the software man. i think Restrileo is the owner of any antivirus company or hacker. i think u r against Tamil people ? we are not fool ok.

 11. இதை ஏற்கனவேயே எங்காவது சொல்லி விட்டீர்களா எனத் தெரியவில்லை.

  இந்த வின்மணி ஆண்டி வைரஸ் சிஸ்டம் இருந்தால் ஏ.வி.ஜி. கூடவே இருக்கலாமா? அல்லது வின்மணி மட்டும்தான் இருக்க வேண்டுமா? தயவு செய்து தெளிவாகக் கூறினால் நலம்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 12. Pingback: வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை. « தமிழ் இணைய நண்பன்·

 13. அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சிம்மனுக்கும் நன்றி….நன்றி…
  Beta version என்பதால் வைரஸை நீக்குவது மட்டும்
  தான் கவனத்தில் கொண்டுள்ளோம். நமது Full version-ல்
  எந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்கியுள்ளது
  என்ற முழுவிவரமும் அளிக்கப்படும்.விரைவில்
  winmani virus remover Full version வெளியிடப்படும்
  என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  -நாகமணி

 14. இந்த வின்மணி ஆண்டி வைரஸ் சிஸ்டம் இருந்தால் ஏ.வி.ஜி. கூடவே இருக்கலாமா? அல்லது வின்மணி மட்டும்தான் இருக்க வேண்டுமா? தயவு செய்து தெளிவாகக் கூறினால் நலம்.
  அன்புடன்,
  r.chinnasamy

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s