விக்கிபீடியாவில் அதிரடி மாற்றங்கள்

விக்கிபீடியா புதுப்பொலிவுடன் மின்னப்போகிறது.அதன் முகப்பு பக்கத்தில் துவங்கி தளத்தின் வடிவமைப்பு வரை முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.இதனை விக்கிமீடியாவே அறிவித்திருக்கிறது.

விக்கிபீடியாவை நிர்வகிக்கும் அமைப்பான விக்கிபீடியாவின் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

.

எந்த ஒரு இணையதள‌மும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது அத்தனை உகந்ததல்ல

.ஒரு வெற்றிகரமான இணையதளம் அவ்விதமே தொடர எப்போதும் புதிதாகவே காட்சியளிக்க வேன்டும் .இல்லையென்றால் இணையவாசிகளுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்.இதற்கு மாற்றத்தை தவிர வேறு வழியில்லை.

பிர‌ப‌ல‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் இத‌னை உண‌ர்ந்து அவ‌ப்போது வ‌டிவ‌மைப்பில் ம‌ற்ற‌ம் செய்து கொண்டே இருக்கும்

.

இப்போது விக்கிபீடியாவிற்கான‌ முறை

.

வ‌ரும் ஏப்ர‌ல்

5 ம் தேதி முத‌ல் வ‌டிவ‌மைப்பு நோக்கில் மாற்ற‌ங்க‌ளை செய்ய‌ விக்கிபீடியா உத்தேசித்துள்ள‌து.இந்த‌ மாற்ற‌ங்க‌ள் வெறும் அழ‌கிய‌ல் நோக்கில் மேற்கொள்ள‌ப்ப‌டாம‌ல் இணைய‌வாசிக‌ளின் ப‌ய‌ன்பாட்டு அனுப‌வ‌த்தை மேம்ப‌டுத்தும் வ‌கையில் செய்ய‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌.

விக்கிபீடியா ம‌ற்ற் சாதார‌ண‌ இணைய‌த‌ள‌ம் போல் இல்லை

.இணைய‌வாசிக‌ளின் ப‌ங்களிப்பால் உருவாக்க‌ப‌டும் இணைய‌ க‌ள‌ஞ்சிய‌ம் அல்ல‌வா அது.என‌வே த‌க‌வ‌க்ளை தேடி க‌ண்டுபிடிப்பதை ம‌ட்டும் அளிதாக்கினால் போதாது.திருத்த‌ங்களை செய்வ‌தையும் புதிய‌ க‌ட்டுரைக‌ளை உள்ளீடு செய்வ‌தையும் சுல‌மாக்க‌ வேண்டும்.

உண்மையில் ப‌ய‌னாளிக‌ள் திருத்த‌ங்கள் செய்வ‌தை இய‌ன்ற‌ வ‌ரை சிக்க‌ல் இல்லாம‌ல் ஆக்குவ‌த‌ற்காக‌வே மாற்ற‌ங்க‌ள் திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌

.

விக்கிபீடியாவுக்கு இது மிக‌வும் முக்கிய‌மான‌து

.

யார் வேண்டுமானாலும் த‌க‌வ்ல்க‌ளை இட‌ம்பெறச்செய்ய‌லாம்

,அவ‌ற்றை யார் வேண்டுமானாலும் திருத்த‌லாம் என்ப‌தே விக்கிபீடியாவின் ஆதார‌ கொள்கை.அத‌ன் வெற்றிக்கும் இந்த‌ திற‌ந்த‌ செய‌ல்பாடே அடிப்ப‌டை.

இப்ப‌டி இணைய‌வாசிக‌ளே த‌க‌வ‌ல்க‌ளை சேர்க்க‌லாம் என்னும் சுத‌ந்திர‌ம் கார‌ண‌மாக‌வே விக்கிபீடியா ம‌ற்ற‌ எந்த‌ க‌ளைஞ்சிய‌ங்க‌ளையும் விட‌ அதிக‌ த‌க‌வ‌ல்க‌ளை உள்ள‌ட‌க்கியுள்ள‌து

.

ஆனால் இந்த‌ விக்கி கோட்டையில் க‌ண்ணுக்கு தெரியாம‌ல் விரிச‌ல்க‌ள் உண்டாகி வ‌ருவாதாக‌ ஒரு அச்ச‌ம் நில‌வுகிற‌து

.

விக்கீபிடியாவின் ஆசிரிய‌ர்க‌ளில் க‌ணிச‌மானோர் அதிலிருந்து வெளியேறி வ‌ருவ‌தாக‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் செய்தி வெளியான‌து

.விக்கிபீடியாவின் வ‌ள‌ர்ச்சி தேக்க‌ம‌டைந்திருப்ப‌தாக‌வும் இத‌ற்கு முன்ன‌ர் இருந்த‌ வேகத்தில் விக்கிபீடியா இனி வ‌ள‌ர்வ‌து சாத்திய‌ம் இல்லை என்றும் கூற‌ப்ப‌ட்ட‌து.

இந்த‌ செய்தி பெரும் விவாத‌த்தை உண்டாக்கிய‌து

.இத‌ற்கான‌ கார‌ன‌ங்க‌ள் அல‌ச‌ப்ப‌ட்ட‌ன‌.இந்த‌ செய்தியை எப்ப‌டி புரிந்து கொள்வ‌து என்ப‌து குறித்தும் கூட‌ ப‌ல‌வித‌ பார்வைக‌ள் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌ன.விக்கிபீடியாவே கூட ஒரு சில விளக்கங்களையும் அளித்தது.

இந்த‌ விவாத‌ம் ஒரு புற‌ம் ந‌ட‌ந்து கொண்டிருக்கும் போதே விக்கிபீடியா நில‌மையை சீராக்க‌ யோசித்துக்கொண்டிருக்க‌ வேண்டும்

.அத‌ன் அடையாள‌ம் தான் த‌ற்போது திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌ மாற்ற‌ங்க‌ள்.

முக‌ப்பு ப‌க்க‌த்தை எளிமையாக்குவ‌து

,த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌தை சுல‌ப‌மாக்குவ‌து ஆகிய‌வாற்றுக்கு முக்கிய‌த்துவ‌ம் அளிக்க‌ப்ப‌ட்டு மாற்ற‌ங்க‌ள் செய்ய‌ப்பட்டுள்ள‌ன‌.மேலும் உறுப்பின‌ர்க‌ள் திருத்த‌ங்க‌ளை மேற்கொள்வ‌தை மிக‌வும் எளிதாக்க‌வும் மாற்ற‌ம் செய்ய‌ப்பட்டுள்ள‌து.

த‌ற்போது விக்கிப்பீடியாவில் திருந்த்த‌ங்க‌ளை மேற்கொள்ளௌம் ஆசிரிய‌ர்க‌ளில் பெரும்பாலானோர் இளைஞ்ர்க‌ள் என்று விக்கிபீடியா க‌ண்ட‌றிந்துள்ள‌து

.அதாவ‌து 25 வ‌ய‌து உள்ள‌வ‌ர்க‌ளே த‌க‌வ்ல்க‌ளை திருத்துவ‌தில் அதிக‌ ஆர்வ‌ம் காடுகின்ற‌ன‌ர். 45 வ‌ய‌துக்கு மேலான‌வ‌ர்க‌ள் குறைவான‌ எண்ணிக்கையிலேயே திருத்த‌ம் செய்வ‌தில் ஈடுப‌டுகின்ற‌ன‌ர்.

விக்கிபீடியாவில் ப‌ங்க‌ளிப்பு செய்ய‌ வேண்டும் என்ப‌தில் எல்லா த‌ர‌ப்பின‌ருக்கும் ஆர்வ‌ம் இருக்கிற‌து என்றாலும் த‌க‌வ‌ல்க‌ளை திருத்த‌ முற்ப‌டும் போது இளைஞ‌ர்க‌ள் எதாவ‌து சிக்க‌லை ச‌ந்தித்தால் மீண்டும் மீண்டும் முய‌ற்சித்து ச‌ரியான‌ வ‌ழியை க‌ண்டு பிடித்து நிபுண‌ர்க‌ளாக‌ விடுகின்ற‌ன‌ர்

.

ஆனால் கொஞ்ச‌ம் வ‌ய‌தாவ‌ர்க‌ள் த‌டைக‌ளை எதிர்கொள்ளும் போது விதிமுறைக‌ளை மீறி விடுவோமோ என்னும் அச்ச‌த்தில் பேசாம‌ல் இருந்து விடுகின்ற‌ன‌ர்

. இவ‌ற்றை எல்லாம் ஆய்வின் மூல‌ம் விக்கிபீடியா க‌ண்ட‌றிந்துள்ள‌து.

இத‌ற்கு தீர்வு காணும் வ‌கையில் திருத்த‌ங்க‌ள் செய்வ‌தை மிக‌வும் எளிதாக்கியுள்ள‌து

.

இதன் பயனாக இனி புதியவர்களும் விக்கி கட்டுரைகளில் தகவல்களை சேர்ப்பது ,திருத்துவது எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆகையினால் வயதான்வர்கள் விக்கி முரையை கண்டு மிரண்டு போவதும் குறையும்.

இந்த மாற்றங்கள் விக்கின் படையில் தேக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் .

இந்த மாற்றங்கள் திடிரென செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட 50 ஆயிரம் விக்கி ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மத்தியில் இந்த மாற்றங்கள் அறிமுகம்ல் செய்யப்பட்டு கடந்த 6 மாத காலமாக பரிசோதிக்கப்பாட்டு வருகிறது.இப்போது ஏப்ரல் 5 ம் தேதி முதல் மாற்றங்கள் விக்கிபீடியா தளத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

வரும் காலத்தில் மேலும் மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் விக்கிமீடியா தெரிவித்துள்ளது.

வாழக விக்கிபீடியா.வளர்க விக்கிபீடியா.

5 responses to “விக்கிபீடியாவில் அதிரடி மாற்றங்கள்

  1. புதிய மாற்றங்களை ஏப்ரல் 5 இக்கு முன் பார்க்க நாம் விக்கிபீடியா மேலே கொடுத்துள்ள ட்ரை பீட்டா எனும் லிங்கை பயன்படுத்தி பார்க்கலாம், நான் அதை கடந்த நாலு அஞ்சு மாசம அப்படிதான் பயன்படுதிட்டு வரேன்

    நன்றி சிம்மன், முத்தான தகவல்

  2. Very Good information. One important disadvantage in it (because I am a regular contributor and admin in Wiki for 4 years) Most of the user vandalize the page and some admins always go for mis judging those people…. Too much people too much problem. lets hope they change some defaults and present in it in a very good way.Sory for typing in English. bear with me

  3. தகவலுக்கு நன்றி.

    தமிழ் விக்கிப்பீடியா சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி நடக்கிறது. இதைப் பற்றியும் உங்கள் வலைப்பதிவில் அறிவித்தால் பயனுள்ளதாக இருகுகம்.

    விவரங்களுக்கு http://ta.wikipedia.org/wiki/Wp:contest பார்க்கவும். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s