கண‌வுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்

எல்லோருக்கும் கணவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.

சின்ன கண‌வோ பெரிய கணவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா?

கவலையை விடுங்கள் உங்கள் கணவுகளை நிறைவேற்றித்தரக்கூடிய நல்ல மனிதர்களை கண்டு பிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று உதயமாகியிருக்கிறது. ஸ்பியின் நாட்டில் குடியேறியுள்ள கொலம்பியா நாட்டைச்சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் உங்கள் கணவுகளை சொல்லுங்கள் அதனை நிறைவேற்றித்தருகிறோம் என்று உத்வேகம் அளிக்கிறது.

அதாவது சமூக வலைப்பின்னல் வகையைச்சேர்ந்த இந்த தள‌த்தில் எவர் ஒருவரும் தங்கள் கனவை குறிப்பிட்டால் சக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அதனை நிறைவேற்றித்தருகின்றனர்.ஆனால் அதற்கு முன் நாமும் பதிலுக்கு இப்படி முன்று உறுப்பினர்களின் கணவுகள் நிரைவேற உதவுவதாக வாக்கு தர வேண்டும்.

அது தான் இந்த தள‌த்தின் சிற‌ப்பம்சம்.நம்முடைய கணவு மற்றவர்கள் உஅதவியால் உண்மையாவதோடு நாமும் மற்றவர்களின் கணவு பூர்த்தியாக கைகொடுக்கிறோம்.இப்படி சங்கிலித்தொடராக கணவுகள் நிறைவேறிக்கொண்டே இருக்கும். சமூக வலைப்பின்னல் கருத்தாக்கத்தை நன்மை எல்லோருக்கும் நன்மை செய்யும் நோக்கத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

லாபாப்பயா என்னும் பெயரில் பிலிப் வேலாகியூஸ் இதனை உருவாக்கியுள்ளார். மனிதர் கொலம்பியாவில் வெற்றிகரமான கட்டிட கலை நிபுணராக திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் தொழில் மீது வெறுப்பு வந்திருக்கிறது.அதாவது வீடுகளை வாங்கி வசிக்கும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் தனது தொழில் அமையவில்லை என அவர் உணர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து கொலம்பியாவில் இருந்து ஸ்பெயின் நாட்டில் குடியேறி எல்லோருக்கும் நன்மை பய்க்கும் நோக்கத்தொடு லாப்பபயா இணையதளத்தை நிறுவினார்.

கொலம்பியாவில் அதிகம் காணப்படும் பப்பாளியின் ஆங்கில பெயரிலேயே தளத்தை அமைத்துள்ளார்.பப்பாளி விதைகளை போல இந்த தளம் மூலம் பலரது கணவுகள் நிறைவேறி மேலும் பலரது கணவுகள் நிறைவேற வேண்டும் என்று அவர் கண‌வு காண்கிறார்.

இப்போது உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு நிலவும் பொது சக மனிதர்கள் கை கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.

உதவி செய்ய வேண்டும் என்பது தொற்று வியாதியைப்போல் இண்டெந்ர்நெட் முலம் பரவ வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.தனி மனிதர்களின் கணவுகளை நினைவாக்க வேண்டும் என்ப்தே இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார் அவர்.

நகரச‌பைகளோடு இணைந்து பெரிய அளவிலான மக்கள் நலத்திட்டங்களுக்கும் கைகொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

—————–

http://lapapaya.org/papaya.org/

2 responses to “கண‌வுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்

  1. நன்றி சிம்மன். அருமை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து படிக்கிறேன். இந்த தகவலை முகப்புத்தகத்தில் உங்கள் பெயரிட்டு பதியலாமா..? அனுமதி தேவை.

    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s