ஆப்பிலின் ஐபேடால் பறிபோன விரல்

ஆப்பிளின் புதிய டேப்லட் கம்ப்யூட்டரான ஐபேடுக்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க பலர் தயாராக் இருக்கின்றனர்.அமெரிக்காவைச்சேர்ந்த ஒருவர் ஐபேடால் பாவம் தனது கை விரல்களையே இழந்திருக்கிறார்.

அமெரிக்காவின் டென்வர் நகரை சேர்ந்த பில் ஜோர்டன் என்பவர் வணிக வளாகம் ஒன்றிலிருந்து ஆப்பிலின் புதிஅய் ஐபேடை வாங்கி கொண்டு வெளியே வந்திருக்கிறார்.அவரது கனடா நண்பர் கேட்டுக்கொண்டதன் பேரில் ஐபேடை வாங்கியிருந்தார்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐபேட் முதல் கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள‌து.ஐபேடை வாங்க வேண்டும் என்பதற்காகவே முதல் நாள் அன்று வேறு நாடுகளில் இருந்தெல்லாம் அமெரிக்க பறந்து வந்தவர்கள் இருக்கின்றனர்.

ஐபேடின் மோக‌ம் அப்ப‌டி. இன்னும் சில‌ர் அமெரிக்க‌ நண்ப‌ர்க‌ளை ஐபேடை வாங்கி அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்ற‌ன‌ர்.இப்ப‌டி தான் ஜோர்ட‌னின் ந‌ண்ப‌ர் கேட்டிருந்தார். அவ‌ரும் ந‌ன்ப‌ருக்காக‌ அக்க‌ரையோடு ஐபேடை வாங்கிகொண்டு சென்ற‌ போது தான் அந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌டைபெற்ற‌து.

இர‌ண்டு ஆசாமிக‌ள் த‌டிய‌ன்க‌ள் என்று வைத்துக்கொள்ளுங்க‌ளேன் அவ‌ரிட‌ம் இருந்து ஐபேடை ப‌றித்துக்கொண்டு ஓட‌ முய‌ன்றுள்ள‌ன‌ர்.இத‌னால‌ திகைத்துப்போன‌ அவ‌ர் சுதாரித்துக்கொள்வ‌த‌ற்கு முன் அவ‌ர்க‌ள் ஓட்ட‌ம் எடுப்ப‌தில் குறியாக‌ இருந்த‌ன‌ர்.

இங்கு தான் விணையே.

அவ‌ர் கைவிர‌லில் அணிந்திருந்த‌ மோதிர‌த்தில் ஐபேடின் பிடி சிக்கிகொண்ட‌து.அப்போதும் திருடர்க‌ள் பிடியை விடாம‌ல் இன்னும் ப‌ல‌மாக‌ இழுத்த‌ப‌டி ஓட்ட‌ம் எடுத்துள்ள‌ன‌ர். இத‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர‌து கைவிர‌ல் தூண்டாகி விட்ட‌து.

ஜோர்ட‌ன் கை விரலில் இருந்து ர‌த்த‌ம் சொட்ட‌ அவ‌ர் வ‌லியால் துடிப்ப‌தை காதில் வாங்காம‌லே திருட‌ர்ட்க‌ள் ஓடிவிட்ட‌ன‌ர்.

 விர‌லை ப‌றிகொடுத்த‌ ஜோர்ட‌ன் உட‌ன‌டியாக‌ ப‌எருத்துவ‌ம‌ணைக்கு அழைத்துச்செல்ல‌ப்ப‌ட்டார். சிகிச்சைக்கு பின்ன‌ரும் ஜோர்ட‌னால் அதிர்ச்சில்யிஉலிருந்து மீள‌முடிய‌வில்லை.

ஐபேட் மோக‌ம் ப‌ற்றி அவ‌ர் கேள்விப‌ட்டிருக்கிறார் .ஆனால‌ விர‌லை ப‌றிக்கும் அள‌வுக்கு இருக்கும் அன்ப‌தை அவ‌ர் அறிய‌வில்லை.

போலிசார் க‌ண்காணிப்பு காமிராவில் ப‌திவான‌ காட்சிக‌ளை கொண்டு திருட‌ர்க‌ளை தேடி வ‌ருகின்ற‌ன‌ர்.

4 responses to “ஆப்பிலின் ஐபேடால் பறிபோன விரல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s