யூடியூப்பிற்கு வயது 5

பிறந்த நாள் அன்று டெஸ்ட் மேட்சில் விளையாடும் ஆட்டக்காரர் சதம் அடிப்பது போல பிரபல வீடியோ பதிவு தளமான யூடியூப் தனது 5வது ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் முக்கிய மைல்கல்லை எட்டிப்பிடித்திருக்கிறது.

 
தினந்தோறும் 200  கோடி முறை வீடியோ காட்சிகள் டவுண்லோடு செய்யப்படுவதுதான் அந்த மைல்கல். அதாவது நாள்தோறும் 200 கோடி முறை யூடியூப் மூலம் வீடியோ காட்சிகள் டவுண்லோடு செய்யப்பட்டு பார்க்கப் படுகின்றன. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் யூடியூப் 100 கோடி டவுண்லோடு எனும் மைல்கல்லை தொட்ட நிலையில் இப்போது அடுத்த மைல்கல்லை எட்டிப்பிடித்திருக்கிறது.

இணைய உலகில் யூடியூப்பின் செல்வாக்கை உணர்த்தும் இந்த டவுண்லோடு கணக்கை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள மூன்று முன்னணி தொலைக்காட்சிகளை சேர்த்து நேயர்கள் பார்க்கும் நேரத்தைவிட யூடியூப் மூலம் டவுண்லோடு செய்யப்படும் வீடியோ கோப்புகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட யூடியூப்பின் வளர்ச்சிக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. உங்களை ஒளிபரப்பிக் கொள்ளுங்கள் எனும் கோஷத்தோடு 2005ம் ஆண்டு யூடியூப் அறிமுகமானது. அந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் யூடியூப் இணைய முகவரி பதிவு செய்யப்பட்ட நிலையில் மே மாதம் இந்த சேவை இணையத்தில் அடியெடுத்து வைத்தது.

அதன் இளம் நிறுவனர்கள் சாட் ஹர்லி மற்றும் ஸ்டீவ்சென் ஆகிய இருவரும் வீடியோ கோப்புகளை பார்ப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் சுலபமான ஒரு வழி இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் யூடியூப்பை அறிமுகம் செய்தனர். இப்போது யூடியூப் தனது 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. யூடியூப்பின் இரட்டை நிறுவனர்கள் இணைய உலகில் பிரபலமாக விளங்குகின்றனர்.

ஆனால் பலரும் அறியாத மூன்றாவது நிறுவனர் யூடியூப்பின் பின்னே உண்டு. ஜாவீத் கரீம் எனும் இளைஞர்தான் அந்த 3வது நிறுவனர். யூடியூப்பில் முதல் வீடியோவை பதிவேற்றியவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. 2005 ஏப்ரல் 23ம் தேதி அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ விலங்கியல் பூங்காவில் உலாவும் யானைகள் பற்றிய வீடியோவை இவர் யூடியூப்பில் இடம்பெற வைத்தார். 

அதன் பிறகு யூடியூப்பில் எண்ணற்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்று அவற்றில் சூப்பர் ஹிட்டான கோப்புகளும் இருக்கின்றன.இன்றளவும் அந்த முதல் வீடியோ காட்சி யூடியூப்பில் காண கிடைக்கிறது. யூடியூப்பின் வளர்ச்சியில் மற்றொரு முக்கிய திருப்பமாக 2006ம் ஆண்டு தேடியந்திர மகாராஜா கூகுலால் விலைக்கு வாங்கப்பட்டது. கூகுலின் கரங்களில் யூடியூப்
இன்னும் விரைவாக வளர்ச்சி அடைந்தது.
 
தற்போது 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு யூடியூப் சார்பில் இந்த நிகழ்வை கொண்டாடுவதற்காக தனி இணைய தளம் உருவாக்கப் பட்டுள்ளது. யூடியூப் பைவ் இயர் சானல் எனும் பெயரியிலான இந்த தளத்தில் யூடியூப் பிரியர்களுக்காக என்னோட யூடியூப் கதை (மை யூடியூப் ஸ்டோரி) எனும் விசேஷ பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

தங்களது பொன்னான யூடியூப்  அனுபவங்களை நேயர்கள் இதில் இடம்பெறச் செய்யலாம். இதேபோல யூடியூப் கடந்து வந்த பாதையில் முக்கிய இடம்பெற்ற வீடியோ காட்சிகளை குறிக்கும் விசேஷ வரைபடமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பிரபலங்கள் தங்கள் பார்வையில் விசேஷமாக கருதும் யூடியூப் காட்சிகளையும் தேர்வு செய்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அலுப்பூட்டக்கூடிய காட்சிகளுக்கு மத்தியில் சட்டென்று கண்ணைக் கவர்ந்து காட்டுத்தீ பரவுவது போல இணைய வாசிகள் மத்தியில் பகிரப்பட்டு பிரபலமாகும் வைரல் வீடியோ என்று சொல்லப்படும் வீடியோ காட்சிகளின் இருப்பிடமாக இருந்த நிலை மாறி இன்று யூடியூப் ஹாலிவுட் படங்களின் முன்னோட்டம், ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு என்று எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது.

———-

http://www.youtube.com/user/FiveYear

————-

http://www.youtube.com/watch?v=jNQXAC9IVRw

———-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s