கூகுல் முதன் முதலாக விளையாடக்கூடிய லோகோவை உருவாக்கியுள்ளது.பிரபலமான வீடியோ கேமின் 30 வது ஆண்டை முன்னிட்டு கூகுல் தனது லோகோவை பேக்மேன் கேமேகாவே மாற்றியமைத்து விட்டது.
கூகுலின் லோகோ சித்திரத்தின் அடுத்த படி என்று இதனை குறிப்பிடலாம்.
முக்கிய தினங்களின் போது கூகுல் ஏதாவது ஒரு வகையில் அந்த தினத்தை குறிக்கும் வகையில் தனது லோகோவை மாற்றியமைப்பது வழக்கம்.இந்த லோகோ சித்திரம் கூகுல் டூடுல் என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் வீடியோ கேமான பெக்மேன் 30 வது ஆண்டை குறிக்கும் வகையில் தனது லோகோவையே பேக்மேன் விளையாட்டாக மாற்றிவிட்டது.
ஆனால் இந்த விஷயம் இணையவாசிகளூக்கு பிடிபட கொஞ்சம் நேரம் ஆகியிருக்கும்.முகப்ப பக்கத்தில் நுழைந்ததுமே லோகோவுக்கு பதில் பல வண்ண சித்திரம் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும்.கூகுல் லோகோ பழக்கத்தை அறிந்தவர்கள் கூட இதனை பார்த்து விழித்திருப்பார்கள்.
இந்த சித்திரத்தின் கீழ் இருந்த காயினை நுழைக்கவும் என்னும் இடத்தில் கிளிக் செய்தால் மேலே உள்ள சித்திரம் ஒரு விடியோ கேமாக உயிர் பெற்றுவிடும்.
கம்புயூட்டர்களின் ஆரம்ப காலத்தில் பிரபலாமாக இருந்த பேக்மேன் விளையாட்டின் மாதிரி தான் இது.
தனது லோகோவையே விளையாடக்கூடிய வகையில் ஒரு கேமாக கூகுல் மார்றி அமைத்திருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் எல்லாமே சித்திரங்கள் தான்.நியூட்டன் பிறந்த தினத்தன்று மட்டும் லோகோவில் இருந்து ஆப்பிள் பழம் விழுவது போல அனிமேஷன் செய்யப்பட்டிருந்தது.
இதன் அடுத்த கட்டமாக இப்போது லோகோவில் விளையாட்டு வந்துள்ளது.
இந்த விளையாட்டு நஃடுவிலும் கூகுலின் எழுத்துக்கள் மறைந்திருப்பது தான் சுவார்ஸ்யம்.
I WAS VERY CONFUSED WHEN I OPENED THIS PAGE. THANKS FOR THE INFORMATION. THIS LOGO APPEARS ONLY IN GOOGLE.CO.IN AND NOT IN GOOGLE .COM