கொண்டாட்டங்களுக்கான இணையதளம்

கவுச் பொட்டேடோ என்னும் வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விபட்டிருக்கலாம். சோபாவில் தான் சொர்கம் இருப்பதாக நினைத்துக் கொண்டு எப்போதும் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருக்கும் சோம்பேரி திலகங்களை வர்ணிக்கவே இந்த வார்த்தை பயன் படுகிறது.

இதே போலவே பார்ட்டி பொட்டேடோ என்னும் வார்த்தையும் இருக்கிறது தெரியுமா? கவுச் பொட்டேடோ போல இது அத்தனை பிரபலம் அல்ல. பரவலாக பயன்படுத்தப்படும் சொல்லும் அல்ல. உண்மையில் இது ஒரு இணையதளத்தின் பெயர்.

வாழ்க்கை என்றால் விருந்து கேளிக்கை என கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவுவதற்காக துவங்கப்பட்டுள்ள தளம் இது. சோம்பேரித்தனத்திற்கும் இந்த தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், விருந்து ஏற்பாட்டிற்காக எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியத்தை குறைத்து எல்லாவற்றையும் சுலபமாக்கி தருவதே இந்த தளத்தின் நோக்கம்.

ஏ டூ இசட் வரை அனைத்தும் என்பார்களே அது போல சகல வகையான விருந்து மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் இந்த தளம் ஒரே இடத்தில் தருகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துவங்கி நண்பர்களுக்கான பார்ட்டி, பிளாட்டில் குடியிருப்பவர்களுக்கான விருந்து என்று எந்த வகையான நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அற்றை சிறப்பாக நடத்த தேவையான விஷயங்கள் அனைத்தையும் பெறுவதற்கான தகவல்களை இந்த தளம் வழங்குகிறது.

நிகழ்ச்சியை நடத்துவதற்கான பார்ட்டி ஹால் போன்றவை தேவை என்றால் அல்லது ரெஸ்டாரண்ட் தேவை என்றால், அதை பற்றிய தகவல்களை இந்த தளம் வழங்குகிறது.  இப்படி தனித்தனி தலைப்புகளின் கீழ் விருந்து நிகழ்ச்சிகளுக்கான விவரங்கள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. விருந்து சாப்பாட்டை தயாரித்து தருவதற்கான சமையல் கலைஞர்கள், அவற்றை பரிமாறுவதற்கான ஊழியர்கள், பிறந்தநாள் அலங்காரத்தை செய்து தரக்கூடிய கலைஞர்கள் என்று எல்லா வகையான சேவைகளை வழங்கக் கூடியவர்களை இந்த தளத்திலிருந்து அணுகிவிட முடியும்.

தேவைப்பட்டால் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை எப்படி ஏற்பாடு செய்வது என்பதற்கான ஐடியாவை கூட, புதுமை விரும்பிகள் இந்த தளத்திலிருந்து பெறலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு நல்ல முறையில் நிகழ்ச்சிகளை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது. ஆனால் அத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு நேரமும், உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.

உழைக்க தயாரிக்க இருந்தாலும் கூட, சேவைகளையும், தகவல்களையும் தேடித் திரிவது பெரும் சுமையாக இருக்கலாம். நல்ல ஹால் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தடுமாறலாம்.

இசை நிகழ்ச்சியை நடத்த யாரை அணுகலாம் என்று தெரியாமல் குழம்பி தவிக்கலாம். இப்படி கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு செய்ய படும்பாடு அதன் மகிழ்ச்சியையே பாழடித்து விட வாய்ப்பிருப்பதை  தவிர்க்கும் வகையில், விருந்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்க இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கான தள்ளுபடியை பெரும் வாய்ப்பும் இருக்கிறது.  திருமணம் போன்ற வைபவங்களை நடத்தி தரும் சேவை நிறுவனங்களைப் போலவே இந்த தளமும் விருந்து நிகழ்ச்சிகளுக்கான அனைத்து சேவைகளையும் ஒரே குடையின் கீழ் தருகிறது.

முதல் கட்டமாக மும்பை மற்றும் பூனே ஆகிய இடங்களில் இத்தகைய விவரங்களை இந்த தளம் வழங்கி வருகிறது. வருங்காலத்தில் மேலும் பல நகரங்களுக்கு விரிவடையலாம். அல்லது அந்தந்த நகரங்களில் இதே போன்ற தளத்தை உருவாக்கலாம்.

———

http://www.partypotato.com/index.php

Advertisements

2 responses to “கொண்டாட்டங்களுக்கான இணையதளம்

  1. Pingback: கொண்டாட்டங்களுக்கான இணையதளம்·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s