காதலுக்கு ஒரு இணைய தளம்

ஆதலினால் இணையவாசிகளே காதலுக்கு கைகொடுப்பீர் எனும் வேண்டுகோளோடு அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது இணைய வழி காதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். விஸ்கான்சின் நகரைச் சேர்ந்த பிரைன் எனும் அந்த வாலிபர் இதற்காக இணையதளம் ஒன்றை அமைத்து இணையவாசிகளின் காதல் யோசனைகளை கேட்டிருக்கிறார்.
வரும் 19ம் தேதி துவங்க உள்ள இந்த காதல் பயணத்தில் அவர் சந்திக்க இருக்கும் இளம்பெண்களை இணையத்தின் மூலமே தேடி பிடிக்க உள்ளார். அவர்களோடு எப்படி பழகுவது? என்ன பேசுவது? என்பதை இணையவாசிகளை கேட்டே அவர் மேற்கொள்ள இருக்கிறார்.
திரைப்பட உலகில் சோதனை முயற்சி என்பது போல காதலில் ஒரு சோதனை முயற்சி என்று எடுத்துக்கொள்ளலாம். காதலின் தன்மையை சோதிப்பதற்கான முயற்சி என்பதை விட இணையத்தின் ஆற்றலை சோதித்து பார்ப்பதற்கான முயற்சி என்று வைத்துக்கொள்ளலாம். 
தற்போது இணையத்தில் பிரபலமான கோட்பாடுகளில் ஒன்றாக இருக்கும் “கிரவுட் சோர்ஸிங்’கில் ஒரு அங்கமாக பிரைனின் முயற்சியை கருதலாம். இன்டர்நெட் மூலம் இணையவாசிகளை ஒருங்கிணைத்து அவர்களின் பங்களிப்போடு குறிப்பிட்ட ஒரு செயலை நிறைவேற்றுவதை கிரவுட் சோர்ஸிங் என்று சொல்கின்றனர். சிறந்த வடிவமைப்பை உருவாக்குவது உள்பட பல விஷயங்களுக்கு இந்த கொள்கை பயன்படுத்தப்படுகிறது.
அடிப்படையில் கூச்ச சுபாவம் கொண்டவர் என்று வர்ணித்துக்கொள்ளும் பிரைன் காதலுக்காக இந்த கோட்பாட்டை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கிறார். நியூயார்க் நகரில் பிரம்மச்சாரிகளோ பாதிக்கு பாதி இருக்கும் நிலையில் நகருக்கு புதிதாக குடியேறிய தான் மனதுக்கு பிடித்தமான இளம் பெண்ணை டேட்டிங் செய்ய தேர்வு செய்வது கடினத்திலும் கடினம் என்று கூறும் பிரைன் இதற்காக இணையவாசிகளின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார்.
காதலுக்காக “டேட்டிங் பிரைன்’ எனும் இணையதளத்தை அவர் அமைத்திருக்கிறார். தன்னைப் பற்றியும், தனது நோக்கம் பற்றியும் ரத்தின சுருக்கமாக கூறியுள்ள அவர், காதல் பயணத்தில் ஆலோசனைகளை இணையவாசிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நண்பர்கள் காதல் கைக்கூட ஆலோசனைகளை வழங்குவதுபோல இணையவாசிகள் இவருக்கான காதல் டிப்ஸ்களை சமர்ப்பிக்கலாம்.  அதற்காகத்தான் கட்டளையிடுங்கள் தலைவா என்பது போல அவர் காத்திருக்கிறார். 19ம் தேதி துவங்கி ஒரு மாத காலத்திற்கு அவரது டேட்டிங் பயணம் நிகழ உள்ளது.
இந்த பயணத்தின் வழிதுணையாக வரக்கூடிய காதலிகளையும் அவர் இணையம் மூலமே தேர்ந்தெடுக்க உள்ளார். இவரது கோரிக்கையை ஏற்கும் இளம்பெண்கள் இந்த தளத்தின் மூலம் அவரோடு டேட்டிங் செய்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கலாம். அழகான இளம்பெண்களை அறிந்தவர்கள் இந்த தளத்தின் மூலமே பிரைனுக்கு அவர்களை அறிமுகம் செய்துவைக்கலாம்.
இந்த பெண்களோடு அவர் பழகும் விதத்தை இணையவாசிகளின் அறிவுரைகளும் ஆலோசனைகளுமே தீர்மானிக்க உள்ளன என்பதால் இந்த இணைய காதல் பயணம் எங்கே சென்று எப்படி முடிகிறது என்பதை நாமும் ஆர்வத்தோடு பின்தொடரலாம்.
பிரைனின் காதல் முகவரி:http://ht.ly/2aeb0

Advertisements

2 responses to “காதலுக்கு ஒரு இணைய தளம்

  1. காதலுக்கு ஒரு கட்சியே ஆரம்பிச்சு ஒரு காதல் கல்யாணத்தையும் செஞ்சு பிரமாதப் படுத்தி கழகப் பாணியில் ஃப்ளெக்ஸ் போர்டெல்லாம், போஸ்டரெல்லாம் அடிச்சு ஒட்டி தமிழ்நாடு, இந்தியான்னு கலக்கு கலக்கியிருக்கான் ஒரு தமிழன்.. அதை விட்டுட்டு ஏதோ இணைய தளத்தில் இணையல்(காதல்னா அதுதானே.. முடிவா?)ன்னு படையல் போட்டிருக்கீங்க.. ஆறிப்போன அவல் உப்புமா மாதிரி.. என்ன அந்த சமாச்சாரத்தையும் கொஞ்சம் அலசிடுங்க உங்க பக்கத்திலே பக்க வாத்தியமாக..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s