இந்திய‌ர்களுக்கான புதிய பிர‌வுச‌ர் அறிமுக‌ம்

இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நம் நாட்டிலேயே தயாரான இந்திய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. .

எபிக் பிரவுசர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் ஒபன் சோர்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த மோசில்லா மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரிப்ளக்ஸ் எனும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் சென்று ஐடி நிறுவனத்தில் பணியாற்றி திரும்பிய அலோக் பரத்வாஜ் எனும் சாப்ட்வேர் நிபுணர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே இணைய உலகில் பாடு ஓட்டர்ஸ் எனும் இணைய தளத்தை நடத்தி புகழ்பெற்றவர் இவர். தேஜஸ் வியாஸ் உள்ளிட்ட தனது நண்பர்களோடு இணைந்து இந்த நிறுவனத்தை அலோக் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இந்தியர்களுக்கென்று ஒரு தனி பிரவுசர் தேவை என்பதை உணர்ந்து எபிக் பிரவுசரை வடிவமைத்துள்ளது.

புகழ் பெற்ற எக்ஸ்புளோரர், ஓபரா, கூகுலின் குரோம், மோசில்லாவின் பயர்பாக்ஸ் என பல பிரவுசர்கள் இருந்தாலும் தனித்துவமான பல அம்சங்களோடு இந்தியர்களுக்கென்று எபிக் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான முதல் பிரவுசர் என்று பெருமிதம் கொள்ளும் இந்நிறுவனம் உலகிலேயே வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை கொண்ட முதல் பிரவுசர் இது என்றும் கூறுகிறது. எனவே இந்த பிரவுசரை பயன்படுத்தினால் வைரஸ் தொல்லை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

அதோடு ஆபத்தான தளங்கள் பற்றிய எச்சரிக்கையும் இந்த பிரவுசரிலேயே கிடைக்கும். இணைய தளங்கள் மூலம் நடத்தப்படும் பல்வேறு வகையான பிஷ்ஷிங் மோசடி குறித்தும் இந்த தளம் இணையவாசிகளை எச்சரிக்கை செய்தவண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையவாசிகளின் தனிப்பட்ட விவரங்களும் இந்த பிரவுசரில் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தன்மையோடு கூடிய எண்ணற்ற வசதிகள் இந்த பிரவுசரில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரவுசர் தனக்கென வேர்ட் பிராஸசர் கொண்டுள்ளதால் தமிழ் உள்பட 12 இந்திய மொழிகளில் இந்த பிரவுசரை கொண்டு சுலபமாக டைப் செய்யலாம்.

மேலும் திரைப்பட பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், பிராந்திய மொழிகளில் செய்தி, பங்குச்சந்தை விவரங்கள் என 1000க்கும் மேற்பட்ட வசதிகளுக்கான செயலிகளும் இந்த பிரவுசரில் இணைக்கப்பட்டுள்ளது. ஜி மெயில், ஆர்குட் போன்ற சேவைகளையும் இதிலிருந்தே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவற்றோடு பயர் பாக்சுடன் இணைந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளக்கின் வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பிரவுசரின் மற்றொரு சிறப்பம்சமாக யுடியூப் போன்ற வீடியோ தளங்களை பார்க்கும் போது பிரவுசருக்குள்ளேயே சின்னதாக தனியே ஒரு பெட்டி தோன்றும். அதில் வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

எபிக் பிரவுசர் டாட் காம் என்ற இணைய தளத்தின் மூலம் இந்த பிரவுசரை இணையவாசிகள் டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம்.

————–http://www.epicbrowser.com/

12 responses to “இந்திய‌ர்களுக்கான புதிய பிர‌வுச‌ர் அறிமுக‌ம்

  1. இது ஒரு அருமையான பிரவுசர்! கடந்த நான்கு நாட்களாக இதை உபயோகப்படுத்துகிறேன்.
    எல்லாம் நம் விரல் நுனியில்! அதிவேகம்! முதலில் முருகனின் வாகனம் தன் தோகை விரித்து நிற்பது அழகு!

    //தேஜஸ் வியாஸ் உள்ளிட்ட தனது நண்பர்களோடு இணைந்து இந்த நிறுவனத்தை அலோக் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இந்தியர்களுக்கென்று ஒரு தனி பிரவுசர் தேவை என்பதை உணர்ந்து எபிக் பிரவுசரை வடிவமைத்துள்ளது.//

    அலோக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.

  2. எபிக் பிரவ்சர் பயன்படுத்த வேண்டுமானால் எளிமையாக உள்ளது.ஆனால் தொழிநுட்பத்தில் முன்னேற்றம் தேவை.புதியவர்களுக்கு இப்போதைக்கு சரி வராது.சில தளங்களுக்கு செல்லும்போது உங்கள் சிஸ்டம் ஹேங்யாக வாய்ப்புள்ளது. உஷார்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s