வாசிக்க புதிய வழி காட்டும் இணையதளம்

இணைய யுகத்திலும் முன் போலவே வாசித்திக்கொண்டிருந்தால் எப்படி?தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாசிப்பு அனுபவமும் மேம்பட வேன்டாமா?

இது போன்ற கேள்விக்ளை எழுப்பி அவற்றுக்கு விடையளிக்கும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ‘ரீட் ஈஸி’ இணையதளம்.பெயருக்கு ஏற்ப இந்த தளம் படிப்பதை மேலும் சுலபமாக்கி வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தி தருகிற‌து.

வாசிப்பதில் என்ன பெரிதாக புதுமை செய்து விட முடியும்?என்ற சந்தேகம் உண்டாகலாம்.இ புக் ரீடர் போல இன்னும் ஒரு புதிய ரீடரா என்றும் அலட்சியமாக கேட்கத்தோன்றலாம்.

ஆனால் இந்த‌ த‌ள‌ம் இன்னொரு புதிய‌ இ புக் சாத‌ன‌ம் அல்ல.தற்கு மாறாக உண்மையிலேயே வாசிப்பு அனுப‌வ‌த்தை மேலும் சிற‌ப்பான‌தாக‌ மாற்ற‌க்கூடிய‌து.அதாவ‌து பொருள் தேடும் ப‌ய‌ண‌த்தை சுல‌ப‌மாக்கி வாசிப்பு அனுப‌வ‌த்தை மேம்ப‌டுத்துகிற‌து.

பொருள் தேடும் ப‌ய‌ண‌ம் என்றால் வார்த்தைக‌ளுக்கான‌ அர்த்த‌ம் நாடுத‌ல் என்று புரிந்து கொள்ள‌லாம்.

ப‌த்திரிகை க‌ட்டுரை அல்ல‌து நாளித‌ழ் செய்திக‌ளை ப‌டித்துக்கொண்டிருக்கும் போது அர்த்த‌ம் தெரியாத‌ சில‌ க‌டின‌மான‌ வார்த்தைக‌ள் இருக்கும் அல்ல‌வா?அது போன்ற‌ வார்த்தை த‌டைக‌ளை எதிர்கொள்ளும் போது என்ன‌ செய்வோம்.அக‌ராதியை எடுத்து புரியாத வார்த்தைக்கு பொருள் தேடுவோம்.இணைய‌த்தில் ப‌டித்துக்கொண்டிருந்தால் அப்ப‌டியே வேறொரு இணைய‌ ஜ‌ன்ன‌லை திற‌ந்து இணைய‌ அகாராதியில் அர்த்த‌ம் தேட‌லாம்.

த‌லைய‌னை சைஸ் அகாராதியை புர‌ட்டி அர்த்த‌ம் தேடுவ‌தை விட‌ இணைய‌த்தில் உள்ள‌ அக‌ராதியில் பொருள் தேடுவ‌து சுல‌ப‌ம் தான்.இதைவிட‌ சுல‌ப‌மாக‌ வாசித்துக்கொண்டிருக்கும் ப‌க்க‌த்திலேயே புரியாத‌ சொற்க‌ளூக்கான‌ அர்த்த‌தை தெரிந்து கொள்ள‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்?

அப்ப‌டியொரு புதுமையான‌ வ‌ச‌தியை தான் ரீட் ஈஸி வ‌ழ‌ங்குகிற‌து.ரீட் லெட் என்று சொல்ல‌ப்ப‌டும் வார்த்தை பெட்டிக‌ளை நுழைப்ப‌த‌ன் மூல‌ம் அதே ப‌க்க‌த்தில் சொற்க‌ளுக்கான‌ அர்த்த‌தை தெரிந்து கொள்வ‌தை ரீட் ஈஸி சாத்திய‌மாக்குகிற‌து.

ஒரு புத்த‌க‌த்தின் ப‌க்க‌த்தில் புரியாத‌ சொற்க‌ளின் மீது பேனாவால் க‌ட்ட‌ம் கட்டி அத‌ன் அருகே அத‌ற்கான‌ விள‌க்க‌த்தை கொடுத்தால் எப்ப‌டி இருக்கும்?அதே போல‌வே ரீட் ஈஸி இணைய‌த‌ள‌த்தில் நாம் ப‌டித்துக்கொண்டிருக்கும் ப‌க்க‌த்தை ச‌ம‌ர்பித்தால் அதில் உள்ள‌ க‌டினாமான‌ சொற்களுக்கான‌ விள‌க்க‌ம் கொண்ட‌ ரீட் லெட் பெட்டிக‌ளை நுழைத்து த‌ருகிற‌து இந்த‌ த‌ள‌ம்.

இணையத்தில் உள்ள‌ ப‌ல்வேறு அக‌ராதிக‌ளில் இருந்து அர்த்த‌ம் ம‌ற்றும் விள‌க்க‌ங்க‌ளை தேடி எடுத்து அவ‌ற்றை பொருத்த‌மான‌ இட‌ங்க‌ளில் ரீட் லெட்டாக‌ இட‌ம்பெற‌ச்செய்கிற‌து.என‌வே த‌னியே இணைய‌ அக‌ராதியில் தேட வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை.அதோடு வாசித்துக்கோன்டிருக்கும் ப‌க்க‌த்தை விட்டும் வெளியே செல்ல‌ வேண்டிய‌தில்லை.

ந‌ல்ல‌ சேவை தான். ஆனால் ஒவ்வொருக்கும் புரியாத‌ சொற்க‌ள் மாறுப‌டுமே.அப்போது என்ன‌ செய்வ‌து என்று கேட்க‌த்தோன்ற‌லாம்.இங்கு தான் இந்த‌ சேவை மெம்ப‌டுகிற‌து.எந்த‌ வார்த்தை ந‌ம‌க்கு புரிய‌வில்லையே அங்கு கிளிக் செய்து ந‌ம‌க்கான‌ ரீட் லெட்டை உருவாக்கி கொள்ள‌லாம்.அதே போல‌ ஏற்க‌னெவே உள்ள் ரீட் லெட்டையும் நீக்கி விட‌லாம்.

மேலும் தேட‌ல் க‌ட்ட‌த்தின் உத‌வியோடு குறிப்பிட்ட‌ சொல்லுக்கான‌ தேட‌லிலும் ஈடுப‌ட‌ முடியும்.

வாசிக்கும் போது வார்த்தைக‌ளை புரிந்து கொள்ள‌ சொற்போர் ந‌ட‌த்த‌ வேண்டியிருப்ப‌வ‌ர்க‌ளூக்கு மாண‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் இந்த‌ சேவை ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

அமெரிக்காவின் கொல‌ம்பிய‌ ப‌ல்க‌லையில் ப‌ட்ட‌ம் பெற்ற‌ உரி அவிசார் என்ப‌வ‌ர் த‌ன‌து நண்ப‌ர்க‌ளோடு இந்த‌ சேவையை அறிமுக‌ம் செய்துள்ளார். இன்றைய‌ தொழில்நுட்ப‌த்திற்கு ஏற்ப‌ வாசிப்பு அனுப‌வ‌ம் மேம்ப‌ட்ட‌தாக் இருக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தோடு இந்த‌ சேவையை உருவாக்கிய‌தாக‌ அவ‌ர் கூறுகிறார்.
 
ம‌ற்ற‌ எல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளையும் போல‌ ப‌டிப்ப‌தையும் ஹைடெக்காக்கியிருக்கும் அழ‌கான‌ சேவை தான்.

ஆனால் ஒன்று இத‌னை ப‌ய‌ன்ப‌டுத்த‌ க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டும்.அடோப் பிளேஷ் இருக்க‌ வேண்டும் பி டி எப் கோடு சேராது போன்ற‌ நிப‌ந்த‌னைகளும்  உள்ள‌ன‌.

———–http://www.readeasy.com/main.html#home

3 responses to “வாசிக்க புதிய வழி காட்டும் இணையதளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s