குறிப்பெடுக்க ஒரு இணையதளம்

இனி வகுப்பறையில் சற்றே கண்ணயர நேர்ந்தாலும் பாடத்தை தவற விட்டோமே என மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதன் பிறகு பஸ் பயணத்திலோ அல்லது ரெஸ்டாரண்டில் ஓய்வாக அமர்ந்து கொண்டிருக்கும்போதோ பாடத்தை காதார கேட்டு புரிந்துகொள்ளலாம்.

பாடத்தின் நடுவே கண்ணயரும் பழக்கம் இல்லாத புத்திசாலி மாணவர்கள் கூட ஓய்வு நேரத்தில் இப்படி பாடத்தை காதார கேட்டு மேலும் தெளிவு பெறலாம்.

 இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்பவர்கள் “லிஸின் வாய்ஸ்’ இணைய தளம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

“கையால் எழுதி குறிப்பெடுக்க வேண்டாம், உங்கள் போனில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று அழைப்பு விடுக்கும் இந்த இணையதளம் வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்களை ஒலிக்குறிப்புகளாக சேமித்து வைத்துக்கொள்ள உதவுகிறது.

இப்படி சேமிக்கப்படும் ஒலிக்குறிப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு பயன்பெறவும் இந்த தளம் வழி செய்கிறது. மாணவர்கள் சேர்ந்து படிப்பதை “குரூப் ஸ்டடி’ என்று சொல்வார்கள் அல்லவா!

அதேபோல இன்றைய “ஐபாடு’ யுகத்திற்கு ஏற்ப சோஷியல் லேர்னிங் என்று சொல்லப்படக்கூடிய பகிர்ந்துகொண்டு படிக்கும் வாய்ப்பை இந்த தளம் தனது சேவையின் மூலம் ஏற்படுத்தி தருகிறது. உள்ளபடியே இந்த தளத்தின் சேவை கொஞ்சம் புதுமையானதுதான்.

இணைய யுகத்தின் தன்மைக்கு மிகவும் ஏற்றதுதான். பள்ளி, கல்லூரி மாணவர்களும் சரி, மாநாடு அல்லது சொற்பொழிவுக்கு செல்பவர்களும் சரி, பேராசிரியர்களின் உரையை குறிப்பெடுத்துக்கொள்வது வழக்கம்.

இப்படி குறிப்பெடுத்து பயன்படுத்துவது ஒரு கலை என்றே சொல்ல வேண்டும். ஆனால் இன்றைய செல்போன், ஐபாடு, இணையம் இணைந்த உலகில் வகுப்பறையிலோ அல்லது மாநாட்டு அரங்கிலோ கேட்டுக்கொண்டிருந்தாலே போதும் குறிப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோமே என்கிறது “லிஸின் வாய்ஸ்’ இணைய தளம். அடிப்படையில் இந்த இணைய தளம் செல்போன் வாயிலாக வகுப்பறை பாடங்களை பதிவு செய்து ஒலிக்குறிப்புகளாக மாற்றிக்கொள்ள உதவுகிறது.

இதற்காக பயனாளிகள் செய்ய வேண்டியதெல்லாம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வலைபேசி எண்ணுக்கு அழைத்து தங்கள் தொலை பேசி எண்ணை குறிப்பிட வேண்டியது மட்டுமே! அதன் பிறகு அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு வரும்.

போனை ஆன் செய்து வைத்திருந்தால் விழிப்போடு இருக்கும் ஒரு நல்ல மாணவன் போல பேராசிரியர் சொல்வதை எல்லாம் அந்த போன் வழியே இணைய தளம் பதிவு செய்து வைத்துக் கொள்ளும். அதன் பிறகு பயனாளிகளின் கணக்கில் அந்த ஒலிப்பதிவு இடம் பெற்றிருக்கும்.

அதனை அப்படியே ஐபாடு போன்ற எம்பி3 பிளேயரில் மாற்றிக் கொண்டு பாட்டு கேட்பது போல பாடத்தை கேட்டு புரிந்துகொள்ளலாம். இந்த ஒலிக்குறிப்புகளை இந்த தளத்தின் வாயிலாகவே நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளலாம்.

அந்த வகையில் குறிப்பிட்ட பாடம் அல்லது விஷயத்தை நண்பர்களோடு சேர்ந்து விளங்கிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இதனைத்தான் சோஷியல் லேர்னிங் என்று இந்த தளம் வர்ணிக்கிறது. மாணவர்கள் போன்ற தனி நபர்கள் பள்ளி அல்லது கல்லூரி பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம். மாணவர்கள் என்றில்லை காதால் கேட்டு மகிழக்கூடிய எந்த ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு செல்பவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேபோல வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கிடையிலான விவாதங்களையும் இப்படி ஒலிக்குறிப்புகளாக மாற்றிக்கொண்டு கலந்தாலோசனையை மேலும் திறன் பட்டதாக மாற்றிக்கொள்ளலாம்.

 இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிக்குறிப்புகளை கேட்டு பயன்பெறலாம். அற்புதமானசேவைதான் ஆனால் அமெரிக்காவை மையமாக கொண்டது என்பதால் நம்மால் பொறாமைப்பட மட்டுமே முடியும்!

இணையதள முகவரி: http://www.listenvoice.com/listenVoiceAbout.aspx

5 responses to “குறிப்பெடுக்க ஒரு இணையதளம்

  1. பயனுள்ள தகவல். இருந்தாலும் நம்மால் அதை அனுபவிக்கமுடியவில்லையே என்ற ஏக்கம்தான் இருக்கிறது.

    வாழ்த்துக்கள். சிம்மன்

  2. நல்ல பதிவு திரு சிம்மன்.

    வாழ்த்துக்கள்..

    உங்கள் இணையதளம் கூடிய விரைவில் .காம் இணையதளமாக மாற வேண்டும். திரு சிம்மன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s