வரன் தேட ஒரு பேஸ்புக்

இங்கே பாரத் மேட்ரிமோனி, அங்கே ஷாதி டாட் காம் என வரன் தேட உதவும் இணைய தளங்கள்அநேகம் இருந்தாலும், இவை எல்லாமே அடிப்படையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படலாம்.

ஒரு பக்கம் மணமகளின் பட்டியல், இன்னொரு பக்கம் மணமகனின் பட்டியல் என திருமண பொருத்தம் பார்க்க உதவும் இணையதளங்கள் எல்லாமே மணமக்களின்  தொகுப்பாகத்தானே இருக்கிறது என்ற அலுப்பும் ஏற்படலாம். ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்தால் திருமண பொருத்தம் பார்க்கும் இணையதளங்கள் இது போலன்றி வேறு எப்படி இருக்க முடியும் என்று கேட்கவும் தோன்றலாம்.

இந்த கேள்விக்கான அழகான பதிலாக யூபிட் டாட் இன் இணையதளம் அமைந்திருக்கிறது. திருமண சேவை தளங்களில் உண்மையிலேயே புதுமையான தளமாக இது அமைந்துள்ளது.  வழக்கமான திருமண தளங்களில் பார்க்கக்கூடியது போல யூ பிட்டில் புகைப்படங்களோடு கூடிய மணமக்கள் பற்றிய விவரம் எல்லாம் கிடையாது. வரி விளம்பரங்களை தேடுவது போல மணமக்கள் விவரங்களை தேட வேண்டிய அவசியம் இல்லை என்றே இந்த தளம் அரைகூவல் விடுக்கிறது.

அதோடு நம்பகமில்லாத, அறிமுகமில்லாதவர்களின் விவரங்களை தேட வேண்டிய அவசியமில்லை என்றும்  யூபிட் தெரிவிக்கிறது. அதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் மூலமே பொருத்தமான வரனை தேடிக் கொள்ளுங்களேன். அதற்கு நாங்கள் உதவுகிறோம் என்கிறது யூ பிட்.

அதனால் தான் இந்த தளத்தில் வரிவிளம்பரங்களைப் போல மாப்பிள்ளை அல்லது மணப்பெண் பற்றிய விவரங்கள் இடம் பெறவில்லை.

மணமக்களின் விவரங்கள் இல்லையென்றால் பொருத்தமான வரனை தேடுவது எப்படி சாத்தியம்? இங்கு தான் யூ பிட் முற்றிலும் வித்தியாசமான திருமண தேடல் சேவையை வழங்குகிறது.

இன்று இணைய உலகில் சமுக வலைப்பின்னல் கோட்பாடு மிக பிரபலமாக இருக்கிறதல்லவா. செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும் இந்த கோட்பாட்டைத்தான் யூ பிட் திருமண தேடலுக்கும் கொண்டு வந்திருக்கிறது.

திருமண தேடல் சேவைக்கான முதல் சமுக வலைப்பின்னல் தளம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் யூ பிட் சமுக வலைப்பின்னல் மூலம் ஆணோ, பெண்ணோ தனக்கு பொருத்தமான ஜோடியை தேடிக் கொள்ள வழி செய்கிறது.
அதாவது பேஸ் புக் போன்ற தளங்களின் மூலம் எப்படி  நண்பர்களை தேடிக் கொள்கிறோமோ அதே போல இந்த தளத்தின் மூலம் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளலாம்.

இதற்காக திருமண வயதில் உள்ளவர்கள் முதலில் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். உறுப்பினராக சேர்ந்த உடன் எந்ததகவலும் கிடைப்பது சாத்தியமில்லை. அதன் பிறகு தங்களது நண்பர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். நண்பர்கள் வட்டாரத்தில் திருமண வயதில் பெண்கள் இருந்தால் அவர்களை பற்றிய விவரங்கள் நண்பர்கள் மூலமே தெரிய வரும்.

அதன் பிறகு அந்த பெண் பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொண்டு பிடித்திருந்தால் தொடர்பு கொள்ளலாம். இதே போலத்தான் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளும் பெண்களும், தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ள பொருத்தமான இளைஞர்கள் பற்றிய  விவரத்தை தெரிந்து கொண்டு அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

நிஜ வாழ்க்கையில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு இதே முறையில் தானே நல்ல வரன் கிடைக்கிறது. நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ திருமணம் போன்ற பொது நிகழ்ச்சியில் கல்யாணத்துக்கு காத்திருப்பவர்களை பொருத்தமான ஜோடிக்கு அறிமுகம் செய்து வைப்பது உண்டல்லவா. பரஸ்பரம் பிடித்திருந்தால் இந்த அறிமுகம் திருமணத்தில் சென்று முடியும்.
அதே முறையை யூ பிட் இன்டர்நெட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. சமூக வலைப்பின்னல் வசதியை பயன்படுத்திக் கொண்டு, நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் மூலமாக ஜோடி தேடலாம்.

நண்பர்களே, பொருத்தமானவர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதால், அவர்கள் நம்பிக்கைக்குரியவர்காளகவும் இருப்பார்கள்.
திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் பேஸ்புக் போலவே இதனை பயன்படுத்தலாம். ஏற்கனவே திருமணமாணவர்கள், தங்களது நண்பர்களுக்கு வரன் தேடவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம். அதாவது இந்த தளத்தில் உறுப்பினராகி தங்களது நண்பர்களின் விவரங்களை குறிப்பிட்டு அவர்கள் சார்பில் தங்கள் நட்பு வட்டாரத்தில் பொருத்தமான ஜோடி இருக்கிறதா என்று தேடி சேர்த்து வைக்கலாம்.

———–

http://www.youpid.in/

Advertisements

7 responses to “வரன் தேட ஒரு பேஸ்புக்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s