உங்களிடம் பேஸ்புக் கதை இருக்கிறதா?

சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்கும் பேஸ்புக் அண்மையில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை 500 மில்லியன்  எனும் இலக்கை தொட்டது தான் இந்த சாதனையாகும். சில மாதங்களுக்கு முன்னர் உலகில் அதிகம் பார்க்கப்படும் தளங்களின் பட்டியலில் முதல் இடத்தை பெற்ற பேஸ்புக், அதன் சேவை பயனாளிகளின் அந்தரங்கத்தை பாதிப்பதாக அமைவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளுக்கு இலக்காகி வரும் நிலையில், இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

500 மில்லியன் பயனாளிகள் என்பது நிச்சயம் ஒரு பெரிய சாதனை தான். இந்த  எண்ணிக்கையின் உண்மையான பிரம்மாண்டத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.  ஒருவிதத்தில் பார்த்தால் இன்டர்நெட் பயனாளிகளின் 27 சதவிகிதம் பேர் பேஸ்புக் பயனாளிகள் என்று கொள்ளலாம். இன்னொரு விதமாக பார்த்தால் அல்பேனியாவில் துவங்கி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா,  எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, ஜெர்மனி, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, இத்தாலி என 29 நாடுகளின் மொத்த மக்கள் தொகை பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை என்று கொள்ளலாம். அல்லது சீன மக்கள் தொகையில் 37 சதவிகிதம் பேர் பேஸ்புக்கில் இருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பேஸ்புக் பயனாளிகள் அந்த தளத்தில் செலவிடும் நேரம் நான்கு லட்சம் மணி நேரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனை வீணடிக்கப்பட்ட நேரமாகக்கூட கருதலாம்.  அது சமூக வலைப்பின்னல் சேவையை எப்படி பார்க்கின்றனர் என்பதை பொறுத்து அமையும்.

பேஸ்புக் பயனாளிகள் மைல்கல்லை கொண்டாடும் வகையில் அதன் நிறுவனரான ஜக்கர்பர்க் புதுமையான திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், பேஸ்புக் கதையை இனி பயனாளிகள் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். பேஸ்புக் கதை என்றால், பேஸ்புக் சேவையானது எப்படி தங்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற அனுபவமாகும்.

இத்தகைய அனுபவம் எல்லா பயனாளிகளுக்கும் இருக்கும் என்று கருதும் பேஸ்புக் நிறுவனர் அவற்றை பேஸ்புக்கோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். பேஸ்புக் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி சுவாரஸ்யமான கதைகள் இல்லாமல் இல்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த பென்சேலர் எனும் 17 வயது மாணவர் பேஸ்புக்கின் மூலம் நண்பர்கள் மத்தியில் ஆதரவு திரட்டி பழங்கால தியேட்டர் ஒன்றை புதுப்பித்திருக்கிறார்.

டென்மார்க் பிரதமர் ராஸ்முசேன் தனது 100 பேஸ்புக் நண்பர்களோடு தினந்தோறும் வாக்கிங் செல்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலி ரோஸ் எனும் அம்மணி, தனது நண்பர் ஒருவர் பேஸ்புக் மூலம் மார்பக புற்றுநோய் சோதனையை செய்து கொள்ளுமாறு செய்தி அனுப்பியது உரிய நேரத்தில் தான் அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் உண்மையை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற உதவியதாக தெரிவித்திருக்கிறார்.

பேஸ்புக் பாதிப்பு பற்றி எதிர்மறையான அனுபவங்களை, கதைகளும் கூட அநோகம் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, இளைஞர்கள் பேஸ்புக் தளத்தில் தினந்தோறும் சராசரி  2 மணி நேரத்தை செலவிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

30 சதவிகித இளைஞர்கள் தங்களது செல்போன் மூலமே பேஸ்புக் சேவையை பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியா ஆர்குட்டின் கோட்டையாக இருந்தாலும், இப்போது பேஸ்புக்கின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

———-http://www.google.co.in/url?sa=t&source=web&cd=1&ved=0CBkQFjAA&url=http%3A%2F%2Fstories.facebook.com%2F&rct=j&q=facebook%20stories&ei=p4VWTKjOJtCGrQfi9u3yAw&usg=AFQjCNHHo2kecFNV8JVvm9q65Axc_9NhFg

Advertisements

5 responses to “உங்களிடம் பேஸ்புக் கதை இருக்கிறதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s