குழந்தை பெயர்களுக்கான சுவாரஸ்யமான இணையதளம்

என்ன பெயர் வைக்கலாம்?

குழந்தை பிறந்தவுடன் அல்லது பிறக்க இருக்கும் தருவாயில் எல்லா இளம் பெற்றோர்கள் மனதிலும் ஆர்வாத்தோடு எழும் கேள்வி தான் இது?

சில பெற்றோர்கள் இந்த கேள்விக்கு விடை காண பெயராய்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு.தங்கள் குழந்தைக்கு வைக்ககூடிய பெயர் புதுமையானதாக,அழைக்க எளிதானதாக,பேஷன் மிக்கதாக இருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை வைத்துக்கொண்டு பொருத்தமான பெயரை தேடும் படலத்தில் இளம் அப்பாக்களும் அம்மாக்களும் ஈடுபடுவதை பார்க்கலாம்.

ஒரு சில மிகுந்த உற்சாகத்தோடு நண்பர்களையும் இந்த தேடலில் சேர்த்துக்கொள்வதுண்டு.

ஆனால் புதிதாக‌ பெய‌ர் தேடுவ‌து இண்டெர்நெட் த‌ய‌வால் மிக‌வும் எளிதான‌து தான்.குழ‌ந்தைக‌ளின் பெய‌ர்க‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌த‌ற்கு என்றே ப‌ல‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் இருக்கின்ற‌ன.இந்த தளங்களில் அக‌ர‌ வ‌ரிசையின் ப‌டி அழ‌கான‌ பெய‌ர்க‌ளை தேடிக்கொள்ள‌லாம்.பெய‌ருக்கான‌ அர்த்த‌மும் கூட‌ சில‌ த‌ள‌ங்க‌ளில் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

இருப்பினும் இந்த‌ த‌ள‌ங்க‌ள் எல்லாமே ஒரே மாதிரியாக‌ அலுப்பூட்ட‌க்கூடிய‌ வ‌கையில் இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தால் பெய‌ர் தேட‌லுக்கு என்று ஒரு சுவார‌ஸ்ய‌மான‌ இணைய‌த‌ள‌ம் இருக்கிற‌து.

பேபிநேம்மேப் டாட் காம் என்னும் இந்த‌ இணைய‌த‌ள‌ம் பெய‌ர்க‌ளொடு வ‌ரைப‌ட‌த்தையும் இணைத்து பெய‌ர்க‌ளுக்கான‌ இன்னொரு பரிமான‌த்தை த‌ருகிற‌து.அதாவ‌து குறிப்பிட்ட‌ ஒவ்வொரு பெய‌ரும் உல‌கில் எங்கெங்கு எந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌மாக‌ உள்ள‌ன‌ என்ப‌தை இந்த‌ த‌ள‌ம் உணார்த்துகிற‌து.

கூகுல் எர்த் ம‌ற்றும் கூகுல் வ‌ரைப‌ட‌ சேவை பிர‌ப‌ல‌மான‌ பிற‌கு இவ‌ற்றோடு பூவியிய‌ல் தொட‌ர்பான‌ ப‌ல்வேறு விவர‌ங்க‌ளை இணைக்கும் மாஷ‌ப் என்னும் டிஜிட்ட‌ல் ஒட்டுவேலை சேவைக‌ளும் பிர‌ப‌ல‌மான‌தை நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.

கூகுல் வ‌ரைப‌டத்தின் மீது ப‌லூன் போன்ற‌ தோற்ற‌ங்கள் ப‌ல‌ வ‌ண்ண‌ங்க‌ளில் ஒட்ட‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கும்.அந்த‌ ப‌லூன்க‌ளை கிளிக் செய்தால் குறிப்பிட்ட‌ அந்த‌ இருப்பிட‌ம் சார்ந்த‌ விவ‌ர‌ங்க‌ள் திரையில் தோன்றும்.உதாரண‌த்திற்கு பெட்ரோல் நிலைய‌ங்களுக்கான‌ சேவை என்றால் பெட்ரோல் நிலைய‌ங்க‌ள் உள்ள‌ இட‌ங்க‌ள் எல்லாம் ப‌லூன்க‌ளாக‌ தோன்றும்.எந்த‌ ந‌க‌ரில் எந்த‌ இட‌த்தில் பெட்ரோல் நிலைய‌ம் இருக்கிற‌து என்ப‌தை வ‌ரைப‌ட‌த்தின் மீது குத்த‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌லூனை வைத்தே தெரிந்து கொள்ள‌லாம்.

இப்ப‌டி எண்ண‌ற்ற‌ வ‌ரைப‌ட‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இந்த‌ வ‌கையில் பெய‌ர்க‌ளின் செல்வாக்கை காட்டும் வ‌ரைப‌ட‌ சேவையாக‌ பேபிநேம்மேப் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.ஒரு பெய‌ர் உல‌கின் ஒவ்வொரு ப‌குதியிலும் எந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌லாமான‌தாக‌ இருக்கிற‌து என்ப‌தை இத‌ன் மூல‌ம் சுல‌ப‌மாக‌ தெரிந்து கொள்ள‌லாம்.

இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்த‌துமே கூகுல் வ‌ரைப‌ட‌ம் திரையில் விரிந்து அவ‌ர்றின் மீது ப‌லூன்க‌ள் தோன்றுகின்ற‌ன‌.உங்க‌ளுக்கு தேவையான‌ ப‌லூனை கிளிக் செய்தீர்க‌ள் என்றால் அந்த‌ ஊரில் பிர‌ப‌லாமாக‌ உள்ள‌ பெய‌ர் ப‌ற்றிய‌ விவ‌ர‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து.பெய‌ர்க‌ள் எந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌மாக‌ உள்ள‌ன‌ என்ப‌து ப‌ல்வேறு வ‌ண்ண‌ங்க‌ள் வாயிலாக வெளிப்ப‌டுகிற‌து.மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌ பெய‌ர் என்றால் அத‌ற்கு ஒரு நிற‌ம்.கொஞ்சம் பிர‌ப‌ல‌ம் என்றால் வேறொரு நிற‌ம்.அரிதான் பெட‌ய‌ர் என்றால் அத‌ற்கு ஒரு நிற‌ம்.

அரிதினும் அரிது என்றால் அத‌ற்கு ஒரு நிற‌ம்.த‌டுக்கி விழுந்தால் எதிர்ப‌ட‌க்கூடிய‌ வ‌கையில் ப‌ர‌வ‌லாக‌ காணப்ப‌டும் பெய‌ர் என்றால் அத‌ற்கு ஒரு நிற‌ம்.

பெய‌ர்க‌ளின் செல்வாக்கை வ‌ரைப‌ட‌த்தின் மீதான‌ ப‌லூன்க‌ளை பார்த்தும் தெரிந்துகொள்ள‌லாம்.குறிப்பிட்ட‌ பெய‌ர் ப‌ற்றிய‌ விவ‌ர‌ம் தேவை எனில் அத‌னை குறிப்பிட்டு தேடியும் பார்க்க‌லாம்.ஆண‌ பெய‌ர்,பெண் பெய‌ர் என‌ தனித்த‌னியே தேட‌லாம்.

அது ம‌ட்டும் அல்ல‌ இர‌ண்டு பெய‌ர்க‌ளை ஒப்பிட்டு அவ‌ற்றின் செல்வாக்கு எப்ப‌டி இருக்கிற‌து என்றும் பார்க்க‌லாம்.நாடுக‌ளின் அடிப்ப‌டையிலும் பெய‌ர்க‌ளை தேட‌லாம்.
கனடாவைச்சேர்ந்த க‌ய் டேவிஸ் என்ப‌வ‌ர் இந்த‌ சேவையை உருவாக்கியுள்ளார்.த‌ன‌து குழ‌ந்தைகான‌ பெய‌ரை தேடிக்கொண்டிருந்த‌ போது பொருத்த‌மான‌ பெய‌ரை தேர்வு செய்வ‌து அவருக்கு குழ‌ப்ப‌மாக‌ இருந்திருக்கிற‌து.புதிய‌ பெய‌ரை தேடுவ‌து சுல‌ப‌மாக‌ இருந்தாலும் ஒரு பெய‌ர் எந்த அளவுக்கு பிர‌ப‌லாமாக‌ உள்ள‌து என்ப‌தை தெரிந்து கொள்வ‌து இய‌லாத‌தாக‌ இருந்த‌து.

குழ‌ந்த‌யின் பெய‌ர் எல்லோரும் வைக்க‌கூடிய‌ பெய‌ராக‌வோ அல்ல‌து எவ‌ருமே வைக்காத‌தாக‌ இருப்ப‌தை அவ‌ர் விரும்ப‌வில்லை.ந‌ன்றாக‌ இருக்க‌ வேண்டும்.அதே நேர‌த்தில் பிர‌ப‌ல‌மாக‌ இருக்க‌ வேண்டும்.ஆனால் எல்லோருக்கும் அதே பெய‌ர் இருக்க‌ கூடாது.இப்ப‌டி ஒரு பெய‌ரை தேடிய‌ போது இண்டெர்நெட்டில் உத‌விஉ கிடைக்காத்தால் பெயர்க‌ளின் பிர‌ப‌ல‌ த‌ன்மையை உண‌ர்த்தும் இந்த‌ சேவையை உருவாக்கினார்.

சுவார‌ஸ்ய‌மான‌ சேவை தான்.பெய‌ர்க‌ளில் ஆர்வ‌ம் உள்ள‌ எவ‌ரும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.ஆனால் ப‌ல‌ த‌ள‌ங்க‌ளில் உள்ள‌ குறை இதிலும் இருக்கிற‌து.அதாவ‌து இன்னும் முழுமையான‌ உல‌க‌லாவிய‌ த‌க‌வ‌ல்க‌ள் இட‌ம்பெற‌வில்லை.

இந்தியாவில் எந்த‌ பெய‌ரை குறிப்பிட்டு தேடினாலும் அரிதான‌ பெய‌ர் விவ‌ர‌ம் இல்லை என்று சொல்கிற‌து.

———

http://www.babynamemap.com/

Advertisements

2 responses to “குழந்தை பெயர்களுக்கான சுவாரஸ்யமான இணையதளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s