ஆசை மகளுக்காக ஒரு ஐபோன் செயலி

மார்ட்டின் புரூக்சை அருமையான தந்தை என்றே சொல்ல வேண்டும்.  உலகில் வேறு எந்த தந்தையும் தனது மகளுக்கு செய்யாததை அவர் செய்திருக்கிறார். புரூக்ஸ் தனது ஆசை மகளுக்காக ஒரு ஐபோன் செயலியை உருவாக்கி அந்த அற்புத குழந்தைக்கு புதிய வாசலை திறந்து விட்டிருக்கிறார்.

அதோடு தனது மகளை போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கும் புதிய வழி காட்டியிருக்கிறார்.
புரூக்ஸ் உருவாக்கிய செயலியை இதுவரை உருவாக்கப்பட்ட ஐபோன் செயலிகளில் எல்லாம் மிகவும் விசேஷமானது என்றே சொல்ல வேண்டும். பாசத்தின் அடையாளமாக திகழும் செயலி அது.

வாழ்க்கையில் சோதனை ஏற்படும் போது நவீன தொழில்நுட்பம் எப்படி உதவிக்கு வரும் என்பதற்கான அடையாளமாகவும் அந்த செயலி விளங்குகிறது.
இங்கிலாந்தில் உள்ள ஹெர்போட்ஷயர் பகுதியை சேர்ந்த புரூக்சின் மகள் மியாவுக்கு ஐந்து வயதாகிறது. மியா ஒரு அற்புதமான குழந்தை. மற்ற குழந்தைகளிலிருந்தெல்லாம் மிகவும் வேறுபட்டவள். மியாவால் துள்ளித் திரியவோ அல்லது பேசவோ முடியாது. பிறக்கும் போது பிராண வாயு குறைவாக இருந்ததன் காரணமாக செரிபிரல் பால்சி எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவரால் மற்ற குழந்தைகள் போல ஓடியாட முடியாது.

தனது தேவைகளை மியாவால் செய்கையால் கூட தெரிவிக்க முடியாது என்பதுதான் மிகவும் வேதனையானது. புரூக்சும் சரி, அவரது மனைவி சாராவும் சரி. மியாவை கண்ணில் இமை காப்பது போல தான் பாசத்தோடு வளர்த்து வந்தனர். அவளது குறைபாடு தெரியாத வகையில் அன்பை பொழிந்து கொண்டிருந்தனர்.

என்ன இருந்தாலும் குழந்தைக்கு தனது விருப்பத்தையும், தேவையையும் தெரிவிக்க ஒரு வழி வேண்டாமா? அதனை எப்படி உருவாக்கி தருவது என துடித்துக் கொண்டிருந்த புரூக்ஸ், ஐபோன் சாதனத்தை வாங்கியபோது மின்னலென ஒரு எண்ணம் உதித்தது.

குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றித் தரும் செயலிகளுக்கு புகழ்பெற்ற ஐபோன் ஒவ்வொரு தேவைக்கும் ஒரு செயலி உண்டு என்று தனது விளம்பரத்தில் பெருமைப்பட்டு கொள்கிறது அல்லவா? அந்த விளம்பர வாசகத்தை நம்பிய புரூக்ஸ் தன்னுடைய மகளின் தேவையை நிறைவேற்றக் கூடிய செயலி ஒன்றும் ஐபோனுக்காக உருவாக்கப்பட்டிருக்கக் கூடும் என நினைத்தார்.

மிகுந்த எதிர்பார்ப்போடு ஐபோன் சார்ந்த தளங்களில் தேடிப் பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் அவர் சோர்ந்து போய் விடவில்லை. ஐபோனில் புதிய செயலியை தேவைக்கேற்ப உருவாக்கிக் கொள்வது சாத்திய÷மே.
எனவே புரூக்ஸ் தனது மகளின் தேவைக்காக ஒரு செயலியை தானே உருவாக்க தீர்மானித்தார். ஐபோன் செயலியை உருவாக்குவதில் ஈடுபட்டு வந்த நிறுவனம் ஒன்றோடு இணைந்து தனது மகளுக்கு உதவக் கூடிய ஒரு செயலியை அவர் வடிவமைத்தார்.

அடிப்படையில் அந்த செயலி புகைப்படங்களை கொண்டது. புரூக்சின் மகள் மியாவால் எல்லாவற்றையும் பார்க்க முடியும், புரிந்து கொள்ள முடியும். தனது கருத்தை பார்வையாளேயே சொல்லவும் முடியும். ஆனால் அதனை மற்றவர்களுக்கு புரிய வைப்பதுதான் அவளுக்கு சாத்தியமில்லாததாக இருந்தது.

புரூக்ஸ் வடிவமைத்த செயலி இந்த குறையை போக்குவதாக இருந்தது. பார்வையால் சுட்டிக்காட்டப்படுவதை உணர்ந்து செயல்படக் கூடிய வகையில் அந்த செயலி உருவாகி இருந்தது. மியா அதிலுள்ள படங்களை பார்ப்பதன் மூலமே தன்னுடைய விருப்பத்தையும், தேவையையும் குறிப்பிடலாம்.
அடிப்படை தேவை, விளையாட்டு சாமான்கள், உணவு மற்றும் செயல்பாடுகள் என நான்கு வகையான புகைப்படங்கள் அந்த செயலியில் இடம் பெற்றிருக்கும். மியா பார்வையாலேயே அவற்றை தேர்வு செய்து தனது தேவையை பெற்றோர்களுக்கு உணர்த்தலாம். பெற்றோர்களும் புகைப்படம் மூலமே செயலியில் தொடர்பு கொள்ளலாம். இது அவர்களுக்கிடையே ஒரு நெருக்கமான பந்தத்தையும் உருவாக்கும்.

இந்த செயலி கிடைத்த பிறகு மியா மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்படுகிறாள். அவளின் குரலாகவே அந்த செயலி மாறியிருப்பதாக புரூக்ஸ் தம்பதியினர் மகிழ்ந்து போய் உள்ளனர். மியாவுக்கு புதிய வாயிலாக அமைந்துள்ள இந்த செயலி அவளை போன்றே குறைபாடு கொண்ட மற்ற குழந்தையின் பெற்றோர்களாலும் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அந்த பெற்றோர்கள் புரூக்சுக்கு மனதார பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புகைப்படம் சார்ந்த இந்த செயலி வழக்கமான குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கான சாதனமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

=—————http://www.miasapps.com/

Advertisements

One response to “ஆசை மகளுக்காக ஒரு ஐபோன் செயலி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s